ஞாயிறு, 29 ஜூலை, 2012

செய்திகளை தெரிந்து கொள்ள வண்ணமயமான வழி.


Posted On July 29,2012,By Muthukumar
ஒரு காலத்தில் இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாஹு வலைவாசல் தான் சிறந்த வழியாக இருந்தது.அதன் பிறகு திரட்டியான டிக் சிறந்ததாக கருதப்பட்டது.இதனிடையே கூகுலும் த பங்கிற்கு கூகுல் சியூசை அறிமுகம் செய்தது.
செய்திகளை தொகுத்தளிக்க இன்னும் எண்ணற்ற இணையசேவைகள் இருக்கின்றன.அவப்போது புதிய சேவைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன.
புதிய சேவைகளில் எத்தனை புதுமையானதாக இருக்கின்றன என்பது கேள்விக்குறி தான்!
ஆனால் நியூசோலாவை நிச்சயம் புதுமையான செய்தி திரட்டியாக கருதலாம்.காரணம் நியுசோலா செய்திகளை வண்ணமயமாக பார்வைக்கு வைக்கிறது.
பொதுவாக செய்திகளை தொகுத்தளிக்கும் தளங்கள் அவற்றை செய்தி வகைகளுக்கு ஏற்ப தனித்தனி தலைப்புகளின் கீழ் பிரித்து வகைப்படுத்தி தரும்.இந்த முறையில் பெரிதாக புதுமைக்கு வாய்ப்பில்லை.
ஆனால் நியுசோலா செய்திகளை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப கட்டங்களாக புரித்து ஒவ்வொரு கட்டத்தையும் ஒரு வண்ணத்தில் மின்னச்செய்கிறது.
ஒவோரு செய்தி வகைக்கும் ஒரு வண்ணம் என முகப்பு பக்கம் முழுவதும் கட்டங்களாக பிரிக்கப்பட்டு அவற்றின் மீது செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப செய்திகள் என்றால் வெளீர் நீளம்,நிதி செய்திகள் என்றால் பச்சனி,விளையாட்டு செய்திகள் என்றால் நீளம்,உலக் செய்திகள் என்றால் சிகப்பு என செய்திகள் பல்வேறு வண்ண கட்டங்களாக தோன்றுகின்றன.அந்த வண்ணத்தில் கிளிக் செய்தால் செய்திகளூக்கான இணைப்பு தோன்றுகிறது.
எந்த பிரிவில் செய்திகள் அதிகம் உள்ளனவோ அந்த கட்டம் பெரிதாக தோன்றுகிறது.அதே போல சமீபத்திய செய்திகள் அதிகம் இருந்தால் அவற்றின் வண்ணம் மிகவும் அடர்த்தியாக தோன்றுகிறது.
விரும்பினால் ஒரே பிரிவிலான செய்திகளை மட்டும் தேர்வு செய்து பார்க்கலாம்.அதே போல அந்த நாட்டு செய்தி தேவை என தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
கூகுல் செய்தி சேவையை அடிப்படையாக கொண்டு இந்த வண்ணமயமான செய்தி வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
செய்திகள் சுவாரஸ்யமானதாக இருந்தால் மட்டும் போதாது செய்திகளை தெரிந்து கொள்ளும் வழியும் சுவையானதாக இருக்க வேண்டும் என நினைத்தால் இந்த வண்ணமயமான வழியை பயன்படுத்தி பார்ககலாம்.சின்னதும் பெரிதுமான பல வண்ண கட்டங்களாக செய்திகளை பார்ப்பது சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.
இணையதள முகவரி;http://www.newsola.com/#/us/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக