சனி, 28 ஜூலை, 2012

வருகிறது இண்டெர்நெட்டுக்கு ஒரு சங்கம்.


Posted On July 28,2012,By Muthukumar
விரைவில் வருகிறது என்னும் அறிவிப்போடு இண்டெர்நெட் சங்கம் உருவாக்கப்பட்டிருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இண்டெர்நெட் சங்கத்திற்காக அமைகப்பட்டுள்ள இணையதளத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இணையத்தின் ஒன்று பட்ட குரலை எழுப்புவதற்காக முன்னணி இணைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த சங்கத்தை உருவாக்கியுள்ளன.முன்னணி நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்படாவிட்டாலும் கூகுல்,அமேசான்,இபே,பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் பின்னே இருப்பதாக கருதப்படுகிறது.
செப்டம்பர் மாதம் முதல் செயல்பட உள்ள இந்த சங்கத்தின் உறுப்பினர் நிறுவனங்கள் பெயர்கள் வெளியிடப்படவில்லையே தவிர இந்த அமைப்பின் தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.மைக்கேல் பெக்கர்மேன் என்பவர் இதன் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இணைய சுதந்திரத்தின் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாட்டு அரசுகள் இண்டெர்நெட்டை கட்டுபடுத்தக்கூடிய சட்டங்களை கொண்டு வர முயல்கின்றன.இணைய சுதந்திரத்தை முடக்க கூடிய சோபா சட்டம் முன் வைக்கப்பட்ட போது இனையவாசிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்து அதனை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது.
இத்தகைய தாக்குதல் தொடரும் என அஞ்சப்படுவதால் இணையசுதந்திரத்தையும் அதனை ஆதாரமாக கொண்டுள்ள இனைய நிறுவனங்களையும் காப்பதற்கான அமைப்பின் தேவை உணரப்பட்டிருப்பதில் வியப்பில்லை தான்.
வாஷிங்டன்னில் நமது குரல் ஒலிக்க வேண்டியது மிகவும் அவசியம் என இந்த அமைப்பு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் எல்லாமே லாபி எனப்படும் குழுக்களின் ஆதிக்கத்தால் தான் நடக்கிறது.அரசின் கொள்கை முடிவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அரசு தரப்பில் அந்த கோரிக்கையை கொண்டு செல்ல ஆதரவாளர்கள் இருக்க வேண்டும்.
இண்டெர்நெட் சங்கம் இத்தகைய சக்தியாக இருக்க விரும்புகிறது.
கட்டுப்பாடற்ற சுதந்திரமான இணையத்தை பாதுகாக்க தேவையான கொளகை முடிவுகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்று இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இண்டெர்நெட்டுக்கு இப்போது தான் சங்கம் அமைக்கப்படுகிறது என்பதை நினைத்தால் வியப்பபாக இருக்கிறது.
இந்தியாவில் இண்டெர்நெட் சார்ந்த அமைப்புகள் பல இருக்கின்றன.
இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு என்று ஒரு சங்கம் இருக்கிறது.இண்டெர்நெட் மையங்களுக்கு என்று ஒரு சங்கம் இருக்கிறது.
————
http://internetassociation.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக