Posted On July 30,2012,By Muthukumar |
உ
லகின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் தொடர்பு கொண்டு பேச, இலவசமாக
நமக்குக் கிடைக்கும் புரோகிராம் ஸ்கைப். ஸ்கைப் பயன்படுத்தும் எவருடனும்
இலவசமாக நாம் தொடர்பு கொண்டு பேச முடியும். உலகில் பெரும்பாலானவர்கள்
இதனையே பயன்படுத்தி வருகின்றனர். இதன் புதிய பதிப்பு சென்ற ஜூன் 14 அன்று
வெளியாகியுள்ளது. இதனை http://download. skype.com என்ற இந்நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிக் கொள்ளலாம்.
புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட இந்த புரோகிராம், புதிதாக இதனைப் பயன்படுத்துபவர்களும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கைப் இயக்கப்பட்டவுடன் கிடைக்கும் ‘Getting Started Wizard’ மூலம், நாம் அடிக்கடி மேற்கொள்ளும் பணிகளைச் செயல்படுத்தலாம். தொடர்புகளை கண்டறிதல், பெர்சனல் தகவல்களை எடிட் செய்தல், சோதனை அழைப்புகளை மேற்கொள்ளுதல் போன்றவை இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பதிப்பில், கூடுதல் வசதிகள் பல இணைக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை இப்போது அனுப்ப முடியும். ஒலி வெளிப்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது. தனி நபர் செட்டிங்ஸ் அமைப்பதில் கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன.
கான்பரன்ஸ் முறையில் ஒரே நேரத்தில் ஐந்து பேர்களுடன் உரையாட முடியும். வெவ்வேறு இயக்கங்களில் இயங்கினாலும் தொடர்பு கொள்ள முடிகிறது.
ஸ்கைப் இயக்க கீழ்க்காணும் வகையில் சிஸ்டம் இருக்க வேண்டும். விண்டோஸ் 2000 அல்லது எக்ஸ்பி மற்றும் பின்னர் வந்த விண்டோஸ் பதிப்புகள். வீடியோ அழைப்பு எனில் குறைந்தது எக்ஸ்பி அவசியத் தேவையாகும். இணைய இணைப்பில் பிராட்பேண்ட் இணைப்பு இருந்தால் நல்லது. ஸ்பீக்கர் மற்றும் மைக், கம்ப்யூட்டர் உள்ளாகவோ, தனியே இணைக்கப்பட்டோ இருக்கலாம். வீடியோ அழைப்புகளுக்கு இதே போல வெப் கேமரா இருக்க வேண்டும். கம்ப்யூட்டரின் ப்ராசசர் குறைந்தது 400 மெகா ஹெர்ட்ஸ் திறனுடன் இருக்க வேண்டும். ராம் நினைவகம் 128 எம்பி மற்றும் டிஸ்க்கில் 15 எம்பி இடம் தேவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக