வெள்ளி, 27 ஜூலை, 2012

கூகுள் டாக்ஸ் இணைத்த 450 புதிய எழுத்துருக்கள்

Posted On July 27,201,2BY Muthukumar
இன்டர்நெட்டில் ஆக்டோபஸ் போல அனைத்து வசதிகளையும் ஒரு குடையின் கீழ் வழங்கி வரும் கூகுள், தன் கூகுள் டாக்ஸ் புரோகிராமில் புதியதாக 450 எழுத்துரு வகைகளையும் 60 புதிய டெம்ப்ளேட்டுகளையும் தன் வேர்ட் ப்ராசசிங் புரோகிராமில் சேர்த்துள்ளதாக அறிவித் துள்ளது. தங்கள் வாடிக்கையாளர்கள், அவர் களின் சிந்தனையை, கற்பனையை இன்னும் சிறப்பாக வடிவமைத்துத் தர இந்த புதிய எழுத்துருக்கள் கை கொடுக்கும் என கூகுள் சாப்ட்வேர் பொறியாளர் இஸபெல்லா அறிவித்துள்ளார். இந்த எழுத்துருக்களில் பல இணைய வடிவமைப்பாளர்களுக்கென தனிக் கவனத்துடன் உருவாக்கப்பட்டவை. அதே போல புதிய டெம்ப்ளேட்டுகள் அலுவலகம், வீடு, பள்ளிக்கூடம், வேடிக்கையான ஜோக்ஸ், விடுமுறை என இன்னும் பல வகை களுக்கென உருவாக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, வேலைக்கு விண்ணப்பிக்க தன் விவர தகவல் அறிக்கை (Resume, CV) செய்தித் தாள் தயாரிப்பு, உணவு தயாரிக்கும் முறை விளக்கம், போட்டோக்களை பகிர்ந்து கொள்ளல், சட்ட ரீதியான அறிக்கைகள் தயாரிப்பு எனப் பலவகைப் பணிகளுக்கென வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன.
2007 ஆம் ஆண்டில் கூகுள் டாக்ஸ் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல முறை இது மேம்படுத்தப் பட்டு வந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட அப்டேட் பைல்கள் இணைக்கப்பட்டன. இந்த மேம்படுத்தல்களே பல பயனாளர்களை மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராமிலிருந்து, கூகுள் டாக்ஸ் புரோகிராமிற்கு மாறச் செய்தன.
எழுத்துரு மற்றும் டெம்ப்ளேட் மட்டுமின்றி, டாகுமெண்ட்களில் படங்களை இணைப்பது, ஸ்ப்ரெட்ஷீட்களில் சார்ட்களை அமைப்பது, கிரிட்லைன்களை உருவாக்குவது போன்ற பணிகள் குறித்தும் அப்டேட் பைல்கள் வழங்கப்பட்டது குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக