சில சமயங்களில் ஒரு பதிவை எழுத நினைக்கும் போது இவ்வளவு சிறியதாக உள்ளதே இதை ஒரு பதிவாக எழுத வேண்டுமா என்று நினைத்தது உண்டு. அப்படி நினைத்தவற்றை தொகுத்து ஒரே பதிவாக இங்கே தந்துள்ளேன்.
1. Photoshop க்கு ஐந்து மாற்று மென்பொருட்கள்
நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருளான போட்டோஷாப்
நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. போட்டோஷாப்பில் நாம் செய்யும் வேலைகளை
மற்ற பல மென்பொருட்கள் மூலமும் நம்மால் செய்ய இயலும். அவை,
2. Non-Market Android Apps-களை இன்ஸ்டால் செய்வது எப்படி?
Android அலைபேசிகளை
பயன்படுத்தும் அனைவரும், பயன்பாடுகளை Google Play-யில் இருந்து மட்டுமே
தரவிறக்கம் செய்து இருப்போம். வேறு இடத்தில் இருந்து தரவிறக்கம் செய்தவற்றை
பயன்படுத்த கீழே உள்ளது போல செய்யவும்.
Menu -> Settings -> Applications இதில் "Unknown Sources" என்பதை கிளிக் செய்து விடவும்
இப்போது உங்கள் "File Manager" ஐ ஓபன் செய்து தரவிறக்கம் செய்த பயன்பாட்டை
இன்ஸ்டால் செய்து விடலாம். உங்கள் File Manager ஒத்துழைக்க மறுத்தால் ASTRO File Manager என்ற பயன்பாட்டை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
3. Opera Extension-கள் இப்போது அலைபேசிக்கும்
இணைய உலவிகளை பயன்படுத்தும் எல்லோரும் ஏதேனும் ஒரு
Extension (நீட்சி )பயன்படுத்தி இருப்போம். எல்லா உலவிகளிலும் இந்த வசதி
உள்ளது. Opera ஆனது அலைபேசிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் உலவி
ஆகும். இது இப்போது Extension-களை அலைபேசியிலும் பய்னபடுத்த வழி வகை
செய்துள்ளது. இதனால் நிறைய புதிய வசதிகள் அலைபேசிக்கும் கிடைக்கும்.
இதை Android அலைபேசியில் பயன்படுத்த - Opera Mobile Labs build with extensions for Android (.apk)
4. உங்கள் இணைய இணைப்பின் வேகத்தை கண்டுபிடிப்பது எப்படி?
- Speedtest.net
- Broadband reports
- Speakeasy Speed Test
- Toast net Performance Test
- YourSpeed
- WUGNET
- Bandwidthplace Speed Test
- McAfee Internet Connection Speedometer
- CNET Bandwidth Meter
5. ஜிமெயிலில் Chat Box இடத்தை Right Side க்கு மாற்றுவது எப்படி?
நிறைய
பேர் தங்கள் ஜிமெயில் கணக்கில் நிறைய நண்பர்களை கொண்டுள்ளனர். அது இடது
பக்கம் கீழே இருந்தால் ஆன்லைனில் உள்ள அனைவரையும் உங்களால் பார்க்க
முடியாது. அதை தவிர்க்க வலது பக்கம் உங்கள் Chat Box ஐ வைத்து கொள்ளலாம்.
இதற்கு Settings >> Labs என்பதில் "Right-side chat" என்பதை "Enable" செய்து விடவும்.
6. ஆன்லைனில் தமிழ் புத்தகங்கள் வாங்க நம்பிக்கையான தளங்கள்
இணையத்தில் நிறைய புத்தக பிரியர்கள் உள்ளனர்.
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வது குறித்து நிறைய பேருக்கு பயமும் உள்ளது.
அப்படி வாங்க சில நம்பிக்கையான தளங்கள் கீழே
- Udumalai.Com
- விகடன் - விகடன் நிறுவன புத்தகங்கள் மட்டும்
- கிழக்கு பதிப்பகம் - முதலில் அவர்கள் பதிப்பக புத்தங்கள் மட்டும் தந்தவர்கள் இன்று அனைத்து பதிப்பகமும் கிடைக்க வழிவகை செய்துள்ளனர்.
உங்களுக்கு தெரிந்த மற்றவற்றை பின்னூட்டத்தில் நீங்கள் கூறலாம்.
7. ஆன்லைனில் வாங்கும் பொருட்களின் தற்போதைய விலை அறிய
முன்பெல்லாம் கணினியோ, அலைபேசியோ வாங்க வேண்டும் என்றால் கடைக்கு சென்று பல
மாடல்களை அலசி விட்டு பின்னர் வாங்குவோம். ஆனால் இன்று அனைத்தும் ஆன்லைன்
மூலம் வாங்கும் நிலைக்கு வந்து விட்டோம். அப்படி வாங்கும் போது எந்த தளம்
குறைந்த விலைக்கு தருகிறது என்று பார்த்து வாங்க MySmartPrice தளம்
உதவுகிறது.
8. ஆன்லைன் போட்டோஷாப் தளங்கள்
போட்டோ
எடிட் செய்யும் எந்த கணினியும் இல்லாத கணினிகளை பயன்படுத்தும் போது இணைய
இணைப்பு இருந்தால் பின் வரும் தளங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
9. ஒன்பது சிறந்த Cloud Storage தளங்கள்
கூகுள்
டிரைவ் வந்த பின் நிறைய பேர் Cloud Storage பற்றி தெரிந்துள்ளனர்.
ஆன்லைனில் உங்கள் Files, Folder சேமித்து வைக்கும் இவை இப்போது நிறைய
உள்ளன, அவற்றில் சிறந்த ஒன்பது தளங்களை பார்ப்போம்.
- Google Drive - 5GB வரை இலவசம்
- Dropbox - 2GB வரை இலவசம்
- Box - 5GB வரை இலவசம்
- SugarSync - 5GB வரை இலவசம்
- Cubby - 5GB வரை இலவசம்
- CX - 10 GB வரை இலவசம்
- Mozy Stash - 2GB வரை இலவசம்
- Wuala - 5GB வரை இலவசம்
- Bitcasa
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக