Posted On July 20,2012,By Muthukumar
கல்லூரிகள்,
அலுவலகங்கள் ஆகியவற்றில் இன்று கலந்தாய்வுகள் மற்றும் விளக்கக்
கூட்டங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள
பவர்பாய்ன்ட் தொகுப்பாகும். பல காட்சித் தோற்றங்களை கருத்துக்கேற்றபடி
உருவாக்கிப் பார்ப்பவர் மனதில் நம் கருத்துக்களைப் பதியச் செய்வதற்கு
இதனைத் திறமையோடு பயன்படுத்தினால் போதும். கருத்துக்களை, சொல்லவரும் செய்தி
களை, திட்டவரைவுகளை, விரிவுகளை எழுத்துக்கள் கோர்வையாக டாகுமெண்ட்
தயாரித்து வழங்குவது ஒரு ரகம். அவற்றையே சிறிய வரை படங்களாக, முக்கிய
விஷயங்களின் கோர்வையாக, விதம் விதமான வண்ணங்களில் காட்டுவது இன்னொரு ரகம்.
கேட்பவர் மனதில் பார்ப்பதன் மூலமாக அவர்கள் மனதில் நம் கருத்துக்களைப் பதிய
வைப்பது இரண்டாவது ரகமே. அதற்கு உதவும் அருமையான அப்ளிகேஷன் புரோகிராம்
எம்.எஸ். ஆபீஸில் உள்ள பவர்பாய்ண்ட்.
பவர்பாய்ன்ட் தொகுப்பை இயக்குவது எளிது. அனைத்து நிலைகளிலும் என்ன செய்யலாம் என்பதற்கு ஆங்காங்கே குறிப்புகள் இருக்கும். இவற்றை அறிந்து கொள்ளுமுன் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்புடன் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்களைக் காணலாம்.
ஸ்லைட் ÷ஷா (Slide Show): முழுமையாக அமைக்கப்பட்ட ஒரு பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பு. இதனை இயக்குபவர் கண்ட்ரோல் செய்திடலாம்; அல்லது தானாக இயங்குமாறும் செட் செய்திடலாம்.
ஸ்லைட் (Slide): ஸ்லைட் ÷ஷாவில் ஒரு திரைத் தோற்றத்தில் காணப்படும் காட்சி.
பிரசன்டேஷன் பைல் (Presentation File): அனைத்து ஸ்லைட்கள், ஸ்பீக்கர் நோட்ஸ், பார்ப்பவர்களுக்கு உதவி புரிய தயாரித்து வழங்கப்படும் ஹேண்ட் அவுட்கள் மற்றும் சார்ந்த அனைத்தும் சேர்ந்தவற்றையே பிரசன்டேஷன் பைல் என அழைக்கின்றனர்.
ஆப்ஜெக்ட் (Object): பவர்பாயின்ட் ஸ்லைடில் இடம் பெறும் அனைத்தும் ஆப்ஜெக்ட் என அழைக்கப்படுகின்றன. அது கிளிப் ஆர்ட், டெக்ஸ்ட், டிராயிங்ஸ், சார்ட்ஸ், ஸ்பீச், ஒலி, வீடியோ கிளிப் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ட்ரான்சிஷன் (Transition): ஸ்லைட் ÷ஷாவின் போது ஒரு ஸ்லைடை அறிமுகப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஸ்பெஷல் எபக்ட். ஒன்று தேய்ந்து இன்னொன்று வருவது அல்லது முற்றிலுமாக மறைந்து புள்ளிகளாகத் தோற்றமெடுத்து பின் அமைவது போன்றவற்றைக் கூறலாம்.
இனி ஒரு ஸ்லைடை எப்படி உருவாக்குவது என்பதைச் சுருக்கமாகக் காணலாம்.
1. பவர்பாய்ன்ட் திறக்கப்படும்போதே புதிய பிரசன்டேஷன் ஒன்றுடன் திறக்கப்படும். புதிய டைட்டில் ஸ்லைட் ஒன்று கிடைக்கும்.
அல்லது ஏற்கனவே நீங்கள் பவர்பாய்ன்ட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தால் “Create a New Presentation Link” என்பதில் கிளிக் செய்து திறக்கலாம்.
2. கிடைக்கும் புதிய விண்டோவில் Blank Presentation என்பதில் கிளிக் செய்தால் ஸ்லைட் லே அவுட் விண்டோ திறக்கப்படும். இதில் உங்களுக்குப் பிடித்த லே அவுட்டினை தேர்ந்தெடுத்து அமைக் கலாம். தேர்ந்தெடுத்த லே அவுட் உடனே கிடைக்கப்பெற்று உங்கள் ஸ்லைட் ÷ஷாவினை நீங்கள் அமைத்திட பவர்பாய்ண்ட் தயாராக இருக்கும்.
3. அடுத்ததாக ஸ்லைடில் டெக்ஸ்ட் அமைத்தல். டைட்டில் டெக்ஸ்ட் பாக்ஸில் கிளிக் செய்தால் ஒரு திக் கிரே பார்டர் கிடைக்கப் பெற்று அது தயார் என்பதைக் காட்டும். அதில் டெக்ஸ்ட் டைப் செய்திடலாம். அடுத்ததாக சப் டைட்டில் டெக்ஸ்ட் பாக்ஸிலும் டைப் செய்திடலாம். இப்போது முதல் ஸ்லைடை உருவாக்கி விட்டீர்கள்.
4. அடுத்த ஸ்லைடை எப்படி உருவாக்குவீர்கள்? இன்ஸெர்ட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் நியூ ஸ்லைட் என்பதின் மேல் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் ஸ்லைடில் உள்ள டெக்ஸ்ட் பாக்ஸ்களில் முன்பு போல டெக்ஸ்ட் அமைக்கலாம்.
5. இப்படியே பல ஸ்லைடுகளை உருவாக்கி பிரசண்டேஷன் பைலை முடித்து விடலாம். இனி ஏதாவது ஒரு ஸ்லைடில் மாற்றம் செய்திட வேண்டும் என்றால் மேலாக உள்ள இரு அம்புக் குறிகளை அழுத்தினால் முன் அல்லது பின் உள்ள ஸ்லைடுகள் கிடைக்கும். அதில் மாற்றங்களை மேற்கொள்ளலாம். முடிவில் பைலுக்கு ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்தால் எளிமையான ஒரு ஸ்லைட் பிரசன்டேஷன் தயார்.
ஸ்லைட் பிரசன்டேஷன் தயார் செய்திட உதவியுடன் கூடிய வழி ஒன்றும் நமக்கு கிடைக்கிறது. அதற்கு Auto Content Wizard என்று பெயர். தொடக்க நிலையில் பவர்பாய்ண்ட் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல உத வியை வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக