Posted On July 23,2012,By Muthukumar
நாம்
தயாரிக்கும் ஆவணங்களை பி.டி.எப். பைல்களாக மாற்றி வைத்துக் கொள்ளுதல் பல
வகைகளில் நமக்கு நன்மை தரக் கூடியது. ஆனால் இவற்றை மாற்றிட ஏதுவான
சாப்ட்வேர் அப்ளி கேஷன் நமக்கு தேவை. எம்.எஸ். ஆபீஸ் 2007 தொகுப்பில்
இதற்கான வசதி தரப் பட்டுள்ளது. பைல்களை உருவாக்கி சேவ் செய்த பின்னர்,
கூடுதலாக அவற்றை பி.டி.எப். பைலாகவும் சேவ் செய்திடலாம். ஆனால்
எல்லாரிடமும் இந்த தொகுப்பு கம்ப்யூட்டரில் இருக்கும் என்று சொல்ல இயலாது.
மேலும் இதனை எப்படி மாற்றுவது என அறியாதவர்களும் பலர் உள்ளனர்.
இணையத்தில் பல தளங்களில் இந்த சேவையினை வழங்கும் தளங்களும் இருக்கின்றன. அவற்றில் மிகச் சிறந்ததாக அண்மையில் ஒரு தளத்தினைப் பார்க்க நேர்ந்தது. இதனைப் பயன்படுத்திப் பார்க்கையில், இதன் செயல் திறனும் வேகமும் நம் நேரத்தையும், சாப்ட்வேர் தேவையையும் மிச்சப்படுத்துகின்றன. DocPdf converter என்ற இந்த சாதனம், http://www.docpdf.net/ என்ற முகவரியில் கிடைக்கிறது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் ஓப்பன் ஆபீஸ் பைல்களை பி.டி.எப். பைல்களாக மாற்றலாம். வேர்ட் டாகுமெண்ட் மட்டுமின்றி, எக்ஸெல், பவர்பாய்ண்ட் பைல்களையும் மாற்றலாம். இதன் சிறப்பான வசதிகள் பின்வருமாறு:

1.
doc/docx பைல்களை, அவை எந்த அளவில் இருந்தாலும், சிரமமின்றி இதில்
மாற்றலாம். டாகுமெண்ட்டின் தன்மை மாறாது. கம்ப்யூட்டரில், பிளாஷ் மெமரி
கார்டுகளில் எளிதாக ஸ்டோர் செய்திட லாம்.
2.
xls/xlsx பைல்களையும் பி.டி.எப். பைல் களாக மாற்றலாம். இதில் எவ்வளவு
பெரிய டேபிள்கள் இருந்தாலும், அவற்றின் தன்மை மாறாமல் மாற்றப்படுகின்றன.
3.
odt/ods பைல்களையும் மாற்றலாம். டெக்ஸ்ட் டாகுமெண்ட், பிரசன்டேஷன்
பைல்கள், வரைபடங்கள், டேபிள்கள், போட்டோக்கள் ஆகிய அனைத்தும் எந்த
பிரச்னையும் இன்றி தெளிவாகக் கிடைக்கின்றன.
மேலும் ஒரே பி.டி.எப். பைல்களில் அனைத்தையும் மாற்றி வைத்திடும் வசதியும் இதில் உள்ளது.
மேலும் ஒரே பி.டி.எப். பைல்களில் அனைத்தையும் மாற்றி வைத்திடும் வசதியும் இதில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக