Posted On July 23,2012,By Muthukumar
கம்ப்யூட்டருடன்
எல்.சி.டி., எல்.இ.டி. மற் றும் பழைய வகை சி.ஆர்.டி.ட்யூப் கொண் ட
டிவிக்களில் இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக் க
வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட்
வசதி இருக்க வேண்டும். அந்த போர்ட்கள் எவை எனக் காணலாம்.
1.எச்.டி.எம்.ஐ. (HDMI):
புதிதாய்
வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படு கிறது. இதன்
வழியாக, அதற்கான சரியான கேபிள்களை வாங்கி, டிவியுடன் இணைக்கலாம்.
கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது
டிவியில், HDMI இன்புட் சேன லைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.
2. டி.வி.ஐ. (DVI):
இதற்கான
அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணை க்கப்படும்போதும்,
நல்ல டிஜிட்டல் இமே ஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சன ல் கம்ப்யூட்டரில்
காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம்.
டிவியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என் றால், DVI to HDMI
கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
3. வி.ஜி.ஏ. (VGA):
இப்போது
வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன்க ளிலும், மற்றும் அனைத்து வகைக் கம்ப்யூ
ட்டர்களிலும், பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ
கேபிள்களும் குறைந்த விலையில் எளிதா கக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்
டரிலும், இன் னொன்றை டிவியிலும், ஜஸ் ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம்.
டிவி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை
மற க்க வேண்டாம்.
4. எஸ்-வீடியோ (Svideo):
இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெ ன்றால்,
இதன்மூலம் கிடைக்கும் காட் சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொ துவாக இந்த
வகை இணைப்பு சி.ஆர்.டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர்களி ல் கிடைக்கும்.
கம்ப்யூட்டரில் உள்ள எஸ் -வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து,
மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக் கும் மஞ்சள் நிற இன்புட்
சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின் னர், இதற்கான சரியான சேனலை, டிவியில்
தேர்ந்தெடுக்க வேண் டும்.
ஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். DVI, VGA அல்லது
SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்துகையி ல், படங்கள் மட்டுமே
டிவியில் கி டைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட் டர் ஸ்பீக்கரில் கிடைக்கும்
ஒலி மட்டுமே இருக்கும். ஏனென் றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கடத்திச்
செல்லும்.
ஆனால்
HDMI கேபிள் இணைப்பி ல், இந்த குறை இல்லை. டிவியி ல், ஒலி வேண்டும்
என்றால், தனி யே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ.
மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும்.
எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவை ப்படும் நீளத்தில் கிடைக்கின்றன.
இவ்வாறு
இணைத்த பின்னர், சில லேப்டாப்களில், கட்டளை வழியா க மாற்றங்களை ஏற்படுத்த
வேண் டும். பொதுவாக, அனைத்து லேப் டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn
+ F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும். இல் லை எனில், குறிப்பிட்ட
லேப் டாப் பின் மேனுவலைப் பார்த்து அறிந் து கொள்ளவும். அதே போல, கம்ப்
யூட்டரின் ரெசல்யூசனையும் மாற் ற வேண்டியதிருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக