Posted On July 10,2012,By Muthukumar
ஆண்டிராய்டு, ஐஃபோன் இரண்டிலும் Word Lens எனும் புதிய ஆப்ளிகேஷன் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
இதனை தரவிறக்கம் செய்து கொள்வதன் மூலம், உங்களது ஐஃபோன் கமெராவினால் நீங்கள் படம்பிடிக்கும் பொருளில் எழுதப்பட்டிருக்கும் வேற்று மொழிச்சொற்களை, உங்களுக்கு தேவையான மொழியில் மாற்றிக்காட்டுகிறது.
தற்போது ஸ்பானிஷ், இத்தாலி, பிரெஞ்சு, ஆங்கிலம் இந்நான்கு மொழிகளுக்காக முதற்கட்ட சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலக்கண, இலக்கிய படி மொழிமாற்றம் செய்யவோ, நீண்ட தொடர்களை ஒழுங்கு முறையின் கீழ் முறையான வசனமாக மாற்றவோ இந்த ஆப்ளிகேஷனில் வசதி இல்லை என்ற போதும், சின்ன சின்ன குறைவான சொற்களை சட்டென மாற்றிக்காட்டுகிறது.
நீங்கள் மொழி புரியாத வெளிநாடொன்றுக்கு சுற்றுலா செல்லும் போது அங்கு குறித்த மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் உணவுப்பொருள் பட்டியல், பாதை முகவரிகள், விளம்பர தகவல்களை சட்டென ஐஃபோன் கமெராவில் படம்பிடித்து இந்த wordlens இல் தொழிற்பட வைக்கும் போது, சட்டென அந்த சொற்களை உங்களுக்கு ஏற்ற மொழியில் மாற்றிக்காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக