திங்கள், 19 மார்ச், 2012

பேஸ்புக் வாசகர்களை அதிகரிக்க அழகான Popup Facebook Like Box விட்ஜெட்



Posted On March 19,2012,By Muthukumar
கூகுள் பிளாக்கர் தளங்களை இலவசமாக கொடுத்தாலும் அதை பிரபல படுத்த நாம் கொடுக்கும் செலவு அதிகமே. நேரத்தோடு ஒப்பிடுகையில் பணம் பெரிதான காரியம் அல்ல. திரட்டிகளிலும் சமூக தளங்களும் நம் பதிவுகள் பலரை சென்றடைய உதவுகிறது. இதில் சமூக தளங்களில் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தான் வாசகர்களின் எண்ணிக்கையும் உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆதலால் சமூக தளங்களில் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது பதிவர்களின் முதன்மையான செயலாகும். அந்த வகையில் பிரபல சமூக தளமான பேஸ்புக்கில் வாசகர்களை அதிகரிக்க ஒரு சூப்பர் விட்ஜெட்டை உங்களை பிளாக்கில் சேர்ப்பது எப்படி என பார்க்கலாம்.
  • பிளாக்கில் Design ==> Edit Html செல்லவும். எதற்கும் உங்கள் டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து </body> இந்த வரிக்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும். 
 
  • இதில் vandhemadharam என்று இரண்டு இடத்தில் இருக்கும் அதை அளித்து விட்டு பதிலாக உங்கள் பேஸ்புக் பயனர் பெயரை கொடுக்கவும்.
  • அடுத்து Timeout:20 என்ற இடத்தில் உங்களுக்கு விட்ஜெட் தெரிய வேண்டிய கால அளவை தேர்வு செய்து கொள்ளவும்.

சரியான மாற்றங்களை செய்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை அழுத்தி உங்கள் விட்ஜெட்டை சேமித்து கொண்டு உங்கள் பிளாக்கை ஓபன் செய்து பாருங்கள் அழகான பேஸ்புக் விட்ஜெட் பாப்-அப் விண்டோவில் தோன்றுவதை காணலாம்.
இதில் Close பட்டனுடன் Automatic Close(Timeout)  வசதியும் உள்ளதால் வாசகர்களுக்கு அதிகளவு பிரச்சினை கொடுக்காது.
இந்த அருமையான விட்ஜெட்டை வழங்கிய mybloggertricks தளத்திற்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக