Posted On March 2,2012,By Muthukumar
ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவது உடனடி உலக வானிலையை இந்த தளம் வழங்குகிறது.
இப்போது உலகின் எந்த மூளையில் வெய்யில் காய்கிறது அல்லது மழை பெய்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான பதிலை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணைய சேவை தான் இந்த மெட்விட்.
இந்த தளத்தை பொருத்தவரை பயனாளியும் நீங்கள் தான் பங்கேற்பாளரும் நீங்கள் தான்.அதாவது உலகம் முழுவதும் உள்ள உங்களை போன்றவர்கள் சமர்பிக்கும் வானிலை விவரங்களை வைத்து உலக வானிலை வரைபடத்தை இந்த தளம் வழங்குகிறது.
இதற்காக பயனாளிகள் வானிலை ஆய்வாளராக எல்லாம் மாற வேண்டியதில்லை.தங்கள் ஊரில் இப்போது வாபிலை எப்படி இருக்கிறது என்ற தகவலை குறும்பதிவாக டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டாலே போதும்.அந்த தகவலை அழகாக உலக வரைபடத்தில் அந்த இடத்தின் மீது அழகாக தோன்றச்செய்கிறது மெட்விட்.
டிவிட்டர் குறும்பதிவுகள் தகவல் சுரங்கமாக இருப்பது பலவிதங்களில் உணரப்பட்டிருக்கிறது.புதிதாக வெளீயான திரைப்படம் எப்படி இருக்கிறது என்ற பொது கருத்தை அறிய விரும்பினாலோ அல்லது பங்குச்சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்று அறிய விரும்பினாலோ டிவிட்டர் குறும்பதிவுகளை அகழ்வாராய்ச்சி செய்தாலோ போதுமானது.
இதற்கேற்ற சேவைகளும் அறிமுகமாகியிருக்கின்றன.
இப்போது உலக வானிலையையும் இதே முறையில் தெரிந்து கொள்ள உதவும் நோக்கத்தோடு மெட்விட் உருவாக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை என்றாலே கொஞ்சம் வில்லங்கமானது தான்.வானிலை அறிக்கையின் துல்லியம் குறித்து பலவிதமான விமர்சங்களும் துணுக்குகளும் இருக்கின்றன.வானிலை நிபுணர்கள் மழை பெய்யும் என்றால் அன்று வெய்யில் காயும் என்று நாம் கிண்டல் செய்வதை மீறி வானிலை அறிக்கையை நாமும் ஆவலோடு எதிர்பார்க்கும் தருணங்கள் இல்லாமல் இல்லை.குறிப்பாக வெளியூர் பயணங்களின் போது அங்கே வானிலை நிலவர, எப்படி என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோம்.
இது போன்ற நேரங்களில் வானிலையை தெரிந்து கொள்ள வழிகளும் இல்லாமல் இல்லை.வானிலை விவரங்களை வழங்கும் இணையதளங்களும் இருக்கின்றன.
ஆனால் இவையெல்லாமே உத்தேசமானவையே.வானம் மேகமூட்டமாக காணப்படும்,கடலோரங்களில் குளிர் காற்று வீசும் என்பதெல்லாம் மிகவும் பொதுவானவை.வெளியூர் செல்பவர்கள் எதிர்பார்ப்பது,அங்கே இப்போது மழை பெய்கிறதா என்பது போன்ற அவர்களின் பயணத்தை பாதிக்ககூடிய இன்னும் துல்லியமான விவரங்களை தான்.
இது போன்ற தகவல்களை பெற் அந்த ஊரில் இருக்கும் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்பது தான் சிறந்த வழி.ஆனால் எல்லோருக்கும் எல்லா ஊர்களிலும் நண்பர்கள் இருக்க வாய்ப்பில்லை.இருக்கும் நண்பர்களையும் தேவையான நேரத்தில் தொடர்பு கொள்வது சாத்தியமில்லை.
ஆனால் டிவிட்டர் மூலம் அப்போதைய வானிலை பற்றி பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் பதிவுகள் இத்தகைய விவரங்களை தரக்கூடும்.
மெட்விட் இந்த அற்புதத்தை தான் சாத்தியமாக்குகிறது.
மெட்விட் மூலம் பகிரப்படும் வானிலை பதிவுகளை அந்த அந்த நகரங்களின் மீது உலக வரைபடத்தில் கொடி போல பறக்கவிடப்படுகிறது.அதிலும் மிக அழகாக வானிலையின் தனமையை உணர்த்தக்கூடிய வகையிலான சுவார்ஸ்யமான அடையாளங்களோடு இடம்பெறுகின்றன.
உதாரணத்திற்கு மழை பெய்வதற்கு ஒரு அடையாளம்.வெய்யிலுக்கு ஒரு அடையாளம்.
ஆக வானிலையை அறிய விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உள்ள வரைபடத்தில் தாங்கள் தேடும் நகரின் மீது மவுசை கொண்டு சென்றால் போதும் அந்த இடத்தில் இருந்து பகிரப்பட்ட வானிலை குறும்பதிவுகளை காணலாம்.
அவை பெரும்பாலும் அப்போதைய விவரங்களாக இருக்கும் என்பதால் இதோ இந்த நொடியில் உலகின் எந்த பகுதியில் என்ன நிலைமை என்பதை இந்த வரைபடத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நகரில் திடிரென பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டால் அதனை டிவிட்டரில் பகிர்ந்து கொள்வது பலரது இயல்பு.அந்த தகவல்களை ஒருங்கிணைத்து மேலும் பயனுள்ளதாக ஆக்குகிறது மெட்விட்.நீங்களும் கூட இதில் பங்கேற்று உங்கள் நகர வானிலையை பதிவு செய்யலாம்.ஏற்கனவே பகிரப்பட்ட விவரங்களோடு கூடுதல் தகவல்களை அளிக்கலாம்.முடிந்தால் புகைப்படத்தையும் இணைக்கலாம்.
மழை பெய்கிறது என்ற விவரத்தோடு மழை பெய்யும் காட்சியை புகைப்படமாக பார்க்கும் போது அதன் தீவரம் தெளிவாக புரியும் தானே.
உங்கள் டிவிட்டர் அல்லது பேஸ்புக் கணக்கு மூலமே இந்த தளத்தில் குறும்பதிவுகளை வெளியிடலாம்.
இணையதள முகவரி;http://metwit.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக