ஞாயிறு, 18 மார்ச், 2012

கூகுள் பிளஸ் தளத்தை தமிழில் மாற்றுவது எப்படி?


Posted On March 18,2012,By Muthukumar

பொதுவாக அனைவருக்கும் பிடித்த விஷயம் அவர்களின் தாய்மொழி மற்ற மொழிகளில் படித்து அறிந்து கொள்வதை விட தாய்மொழி என்றால் சுலபமாக படித்து விடுவர். ஆதலால் இணையதளங்களும் தங்களது தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்று விரும்புவர்.  இதனை கருத்தில் கொண்டு மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான கூகுள் பிளஸ் தற்பொழுது 60 மொழிகளில் கிடைக்கிறது. இதற்க்கு முன் 44 மொழிகளில் கிடைத்தது. இந்திய அளவில் தமிழ், மலையாளம், மராத்தி, குஜராத்தி, கன்னடம், பெங்காலி, தெலுங்கு, இந்தி ஆகிய எட்டு மொழிகளில் கிடைக்கிறது. இனி நம் தாய்மொழியான தமிழ் மொழியில் உங்களின் கூகுள் பிளஸ் தளத்தை மாற்றுவது எப்படி பார்க்கலாம்.


  • கூகுள் பிளஸ் தளத்தை திறந்து Settings என்பதை கிளிக் செய்யவும். அடுத்து Languages என்பதை கிளிக் செய்யவும்.
  • பிறகு அங்கு உள்ள Languages கட்டத்தில் கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யவும். 
  • தேர்வு செய்த பிறகு உங்களின் கூகுள் பிளஸ் கணக்கை மூடி விட்டு மறுபடியும் திறந்தால் நீங்கள் தேர்வு செய்த மொழிக்கு உங்கள் கூகுள் பிளஸ் கணக்கு மாறி இருப்பதை காணலாம். 

இனி உங்களுக்கு பிடித்த மொழியிலேயே கூகுள் பிளஸ் கணக்கை உபயோகிக்கலாம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக