வெள்ளி, 16 மார்ச், 2012

ஆன் லைனில் உங்களது பயோடேட்டாவை உருவாக்குவது எப்ப‍டி?


Posted on  by muthukumar

என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோடேட் டா (Bio-data) உருவாக்க வேண்டும் என்றால் பலபேரின் பயோடேட்டாக்களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிறதோ அதன்படி தான் பலபேர் பயோடேட்டா உருவாக்குகின்றனர்.
ஆனால் மேலதிகாரிகளை ஈர்க்கும்படி நமக்கு பயோடேட்டாவை 10 நிமிடத்தில் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது.
பலமணி நேரம் செலவு செய்தாலும் சரி யாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள் கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மேலதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி நமக்கு பயோ டேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம் www.resumesimo.com இத்தளத்திற்கு சென்று முகப்பில் இருக்கும்
Get Started என்ற பொத்தானை சொடுக்கி நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்கலாம். நம் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இதர தகுதிக ள் என ஒவ்வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும் துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத் தால் சிறப்பாக இருக்குமோ அப்படி கொடுக்கிறது.
பல்வேறு வகையான பயோடேட்டாவின் மாடல்கள் இங்கு இருக்கி றது இதில் எது வேண்டுமோ அதை நாம் ஒரே சொடுக்கில் தேர்ந் தெடுத்துக் கொள்ள்லாம்.
மேலதிகாரிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என் று அழகாக வகைப்படுத்தி கண் ணால் பார்பதற்கு அழகாகவும் சிறப்பாகவும் பயோடேட்டா உரு வாக்கி கொடுக்கிறது.
எந்தவிதமான கட்டணமும் இல் லை எங்கு வேண்டுமானாலும் எப் போது வேண்டுமானாலும் இணையம் வழியாக அனைவரும் பார்க்கும் வண்ணமும் தேவைப் படும் போது பிரிண்ட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக