சனி, 31 மார்ச், 2012

புரோகிராம்களை முறையாக மூடிட

Posted On March 31,2012,By Muthukumar
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.
சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், அனைத்து புரோகிராம் களையும் மூடிவிடவும் என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம் களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல் முடங்கிப் போய், தொடக்கத்தில் குறிப் பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டிய திருக்கும். இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச புரோகிராம் ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த புரோகிராம் ஒரு வேலையை நமக்காக, எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது. அது, இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடுவதுதான். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்து விட்டால், பின் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் மூடிவிடலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால், கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது. “x” பட்டனை அழுத்தினால், புரோகிராம்கள் மூடப்படுகின்றன. மண்டை ஓட்டுடன் எலும்புகளைக் கொண்டுள்ள அபாய சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால், அனைத்து புரோகிராம்களும் "கொல்லப்(kill)படுகின்றன'. இரண்டிற்கும் என்ன வேறுபாடு? என நீங்கள் கேட்கலாம். ஒரு புரோகிராமினை மூடுகையில், முறையாக அது மூடப்படும்.
ஆனால் அது முறை யாக மூடப்படாவிட்டால், அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது. இந்த End it All புரோகிராமினை www.docsdownloads.com/enditall1.htm என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கலாம்.

YOUTUBE தளத்தில் உள்ள வீடியோகளை தொலைக்காட்ச்சியில் பார்ப்பது போன்று பார்க்க


Posted On March 31,2012,By Muthukumar
மிக சிறந்த பொழுதுபோக்கு தளமாக விளங்கும் YOUTUBE தளத்தில் உள்ள வீடியோகளை தொலைக்காட்ச்சியில் பார்ப்பது போன்று பார்க்க YOUTUBE தளத்தின் அசத்தலான இலவச சேவையாக  YOUTUBE LEAN BACK விளங்குகின்றது . 

இந்த வசதி மூலம் உங்கள் கணினியின் முழுத்திரையிலும் வீடியோ பார்க்க முடிவத்துடன் மேலும் பல அட்டகாசமான வசதிகளையும் கொண்டுள்ளது . அவை 


DISCOVER CHANNELS - வீடியோகளின் உள்ளடக்க பிரிவுகளை தெரிவு செய்யும் வசதி 

SERCH - அனைத்து வகை வீடியோகளையும் தேடும் வசதி அத்துடன் HD தரத்திலான வீடியோகளை மிக இலகுவாக தேட முடியும் . 

MY YOUTUBE - ஏற்கனவே நீங்கள் பார்த்த வீடியோகளை இங்கே பார்கலாம் . 

RECOMMENDATIONS - நீங்கள் பரிந்துரை செய்த வீடியோகளின் தொகுப்பினை காட்டுகிறது . 

அத்துடன் PLAY,PAUSE,STOP, NEXT, FORWARD,PREVIOUS போன்ற வசதிகளை செயற்படுத்த முடிவதுடன் LIKE ,DISLIKE செய்யவும் முடியும் . 

மிக வேகமான செயற்பாட்டு திறன் கொண்டதாக உள்ளது . 

தள முகவரி LEAN BACK 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஷாட்கட் கீ தொகுப்புகள்

Posted On March 31,2012,By Muthukumar

F1 – உதவி பெற
F3 – சர்ச் பேனல் இயக்கவும் மூடவும்
F4 – அட்ரஸ் பார் கீழ் விரிக்க
F5 – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை ரெப்ரெஷ் செய்திட; மீண்டும் புதியதாய் இறக்கம் செய்திட.
F6 அட்ரஸ் பாருக்கு போகஸ் செய்திட
F11 – முழுத் திரைப் பயன்பாட்டினை இயக்கவும், நிறுத்தவும்.
Alt + (Left Arrow) – ஹிஸ்டரியில் பின்னோக்கி செல்ல; பேக் ஸ்பேஸ் கீ செயல்பாடுதான் இது
Alt + (Right Arrow)– ஹிஸ்டரியில் முன்னோக்கி செல்ல
Ctrl + A – அனைத்தையும் தேர்ந்தெடுக்க
Ctrl + C – தேர்ந்தெடுத்ததனை காப்பி செய்திட
Ctrl + E – தேடலுக்கான பேனல் கிடைக்கும்
Ctrl + F – இணையப் பக்கத்தில் தேடலுக் கான செயல்பாடு
Ctrl + H – ஹிஸ்டரி பேனல் இயக்கவும் மூடவும்
Ctrl + I – பேவரிட்ஸ் பேனல் மூடவும் இயக்கவும்
Ctrl + L – ஒரு பைலைத் திறக்க
Ctrl + N – புதிய பிரவுசர் விண்டோ ஒன்றைத் திறக்க
Ctrl + P – பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை அச்சில் எடுக்க
Ctrl + R– எப்5 கீ அழுத்திக் கிடைக்கும் ரெப்ரெஷ் பயன்பாடு
Esc – ஓர் இணையப் பக்கம் கம்ப்யூட்டரில் கிடைத்துக் கொண்டி ருக்கையில், அந்த செயல்பாட்டினை நிறுத்த
Ctrl + D – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை பேவரிட்ஸ் தளப் பட்டியலில் சேர்த்திட
Doubleclick (on a word) – ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்தால், அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும்
Tripleclick (on a word) – ஒரு வரி முழுவதும் தேர்ந்தெடுக்க
Wheel click – மெதுவாக பக்கம் ஸ்குரோல் முறையில் இயங்கிட
Hold Ctrl + Scroll Wheel forward – இணையப் பக்க டெக்ஸ்ட்டின் எழுத்தின் அளவை அதிகரிக்க
Hold Ctrl + Scroll Wheel backward – இணையப் பக்க டெக்ஸ்ட்டின் எழுத்தின் அளவைக் குறைக்க
Click one point then hold down Shift and then click another – தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இடங்கள் நடுவே உள்ளனவற்றைத் தேர்ந்தெடுக்க

வேர்ட் டிப்ஸ்-டூல்பாரினை விருப்பபடி மாற்ற

Posted On March 31,2012,By Muthukumar
டூல்பாரினை விருப்பபடி மாற்ற
வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.
இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
1.வேர்ட் தொகுப்பை இயக்கியபின், ஸ்கிரீனில் தெரியும் டூல்பாரில், மாற்ற விரும்பும் டூல்பாரில் ரைட்கிளிக் செய்திட வும். வேர்ட் உடனே ஒரு காண்டெக்ஸ்ட் மெனு (Context Menu) ஒன்றை அளிக்கும்.
2.இந்த மெனுவில் கீழாக உள்ள Customize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் வேர்ட் கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Toolbars என்ற டேப் செலக்ட் செய்யப்பட்டிருக்கும்.
3. இனி மீண்டும் வேர்ட் மெனு பார் சென்று மாற்ற விரும்பிய டூல்பார் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். இவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
4. இப்போது வேறு வகையான காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இதில் Change Button Image என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் வேர்ட் நீங்கள் தேர்ந்தெடுக்க பல கிராபிக் இமேஜ்களைக் காட்டும்.
5. எந்த கிராபிக் இமேஜைத் தற்போதுள்ள படத்திற்குப் பதிலாகப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். 6.இனி அதில் உள்ள டெக்ஸ்ட் உங்களுக்கு வேண்டாம் என்றால் தொடர்ந்து கீழே தரப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றவும். இல்லை என்றால் 9ல் தரப்பட்டுள்ள செயலுக்குச் செல்லவும்.
7.மீண்டும் மாற்ற விரும்பும் டூல்பார் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். Context Menu கிடைக்கும்.
8. Context Menu வில் Default Style என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி டூல்பார் பட்டனில் இமேஜ் மட்டும் இருக்கும்.
9. Customize டயலாக் பாக்ஸிலிருந்து வெளியேற குளோஸ் பட்டனை அழுத்தவும்.
இனி நீங்கள் மேற்கொண்ட மாற்றங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டிருப்பதனைக் காணலாம்.
புதிய போல்டரில் டாகுமெண்ட்
வேர்டில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி முடிக்கும் போதுதான் அதனைத் தனியாக ஒரு போல்டரில் வைத்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். இதற்கென மீண்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து அங்கு ஒரு போல்டரை உருவாக்கிப் பின் மீண்டும் டாகுமெண்ட் வந்து போல்டரைத் தேடித் திறந்து சேவ் செய்திட வேண்டியதில்லை. டாகுமெண்ட் வேலை முடிந்தவுடன் Ctrl+S அழுத்தவும். பின் Alt+5 அல்லது Create New Folder பட்டனை அழுத்தவும். போல்டரின் பெயர் கேட்டு ஒரு கட்டம் கிடைக்கும். இதில் போல்டருக்கு ஒரு பெயர் கொடுத்து எண்டர் அழுத்தவும். பின் பைலுக்கு ஒரு பெயர் கொடுத்து என்டர் அழுத்த புதிய போல்டரில் டாகுமெண்ட் சேவ் செய்யப்படும்.

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Posted On March 31,2012,By Muthukumar


1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற முடியுமா ???? – முடியும் !!!!
இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு  உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார் கள்.அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக  மாற்றலாம்.

1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.

2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம்  நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள் வது நல்லது
3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்




4. தரவிறக்கம்  செய்த மென் பொருளை ஓபன் செய்யும்போ து இது போன்ற வடிவில் காட் டும்.

5.  மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க  காட்டப்படும்  ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார் டை மட்டும் பயன் படுத்தவும் .
6. இப்போது உங்கள் மெமரி கார் டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட் டபடும்




7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்
8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லா ம் அழிந்து  2GB மெமரி கார்டாக மாறிவி டும்.

 9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினி யில் சொருகவும். மெமரி கார்டி ன் அளவு 1912MB என்று காட்டபடும்.

கூகுள் வெப் ஹிஸ்ட்ரியை அழிக்க

Posted On March 31,2012,By Muthukumar

சென்ற மார்ச் 1 முதல், கூகுள் நிறுவனம் தன் புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும். அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், அதில் நீங்கள் அக்கவுண்ட் உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜி ப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன் படுத்தப்படும்.
நாம் கூகுள் மெயில் அக்கவுண்ட் வைத் திருந்தால், கூகுள் நாம் மேற்கொள்ளும் இணைய தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும் தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் டேட்டா தளத்தில் பதிவாகும். தேவைப்படும் நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.
கூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்கவேண்டும் எனில், அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஜஸ்ட் ஒரு பட்டன் அழுத்தி மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து நுழைந்த பின்னர், https://www.google.com/history என உங்கள் பிரவுசரின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும். அல்லது கூகுள் சாதனங்களான, கூகுள் ப்ளஸ், அல்லது கூகுள் தேடல் தளத்தில், மேலாக வலது மூலையில் உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், கீழாக ஸ்குரோல் செய்து சென்று, Services என்ற இடத்திற்குச் செல்லவும். அடுத்து, “Go to web history” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் அண்மையில் சென்ற தளங்களின் முகவரி கள், மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக இருப்பதனைக் காணலாம். இங்கு உள்ள Remove all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின் இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின் கரங்களுக்குள் சிக்காது. பரவாயில்லை, கூகுளுக்குத் தெரிந்தால் நல்லதுதானே என்று எண்ணினால், மேலே தரப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று அதனை இயக்கி வைக்கவும்.

குறைந்த விலையில் மிகச்சிறிய கணினி: கூகுள்

குறைந்த விலையில் மிகச்சிறிய கணினி: கூகுள் தயாரிக்கிறது. அமேசான்.காம் மற்றும் ஆப்பிள் நிறுவன ங்கள் மிகச்சிறிய கணினியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. இத்தயாரிப்புகளுக்கு சவால் விடும் விதமாக ஆசிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கூகுள் நிறுவனமும் மிகச்சிறிய கணினியை தயாரிக்க இருக்க இருக்கிறது.
ஏழு இன்ச் அளவில் இந்த கணினி வடிவமைக்கப்பட இருக்கிறது. இதனை ஆசியாவைச் சேர்ந்த கணினியை உற்பத்தி நிறுவனங்க ளுடன் இணைந்து மிச்சிறிய கணினியை உருவாக்க இருப்பதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூகுள் நிறுவனம் தெரிவித் துள்ளது. டிஜிட்டிமஸ் மற்றும் வால்ஸ்டீரீட் பத்திரிக்கையில் தெரிவித்துள்ள தகவலின் படி, ஆன்ட்ராய்ட் மென்பொருள் நிறு வனம் சாம்சங் மற்றும் ஆசுச்டேக் நிறுவனங்களுடன் இணைந்து ஐ-பேடு மற்றும் கிண்ட்லே சாதனங்களுக்கு போட்டியாக இச்சிறிய கணினி உருவாக்கப்பட இருக்கிறது. இக்கணினி 199 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 10000 ரூபாய்) விலையில் வரும் மே மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று அச்செய்தியில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

கூகுள் பிளசில் உங்களின் போட்டோக்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ் கொடுக்க



Posted On March 31,2012,By Muthukumar
பிரபல போட்டோ எடிட்டிங் இணையதளமான பிக்னிக் இணையதளம் April 19 தேதியோடு மூட படுகிறது என்பதை நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். கூகுள் பிளஸ் தளத்தை பிரபலமாக்கும் நோக்கில் பல அதிரடி மாற்றங்களை செய்து வரும் கூகுள் நிறுவனம் பிக்னிக் தளத்தை மூடி அந்த வசதிகளை கூகுள் பிளஸ் தளத்தில் இணைத்து உள்ளது. இனி உங்கள் போட்டோக்களுக்கு விதவிதமான எபெட்களை கூகுள் பிளஸ் தளத்தில் கொடுக்கலாம். 
சிறப்பம்சங்கள்:
  • போட்டோக்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.
  • தலைகீழாக உள்ள போட்டோக்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.
  • படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை மாற்ற Exposure வசதி
  • போட்டோக்களின் அளவை குறைக்க Resize வசதி.
  • 20 க்கும் மேற்ப்பட்ட பல்வேறு வகையான எப்பெக்ட்களை கொடுத்து கொள்ளலாம். 
  • உங்கள் போட்டோக்களுக்கு Speech Bubbles, Masks, Sports மட்டும் பல்வேறு  வசதிகளை சேர்க்க கூடிய Decorate வசதி.
  • போட்டோவில் உங்களுக்கு விருப்பமான எழுத்துக்களை சேர்க்க Text வசதி என்று எல்லாமே நிறைந்து காணப்படுகிறது. 
வழிமுறை:
  • முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து Photos பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • போட்டோ பக்கம் திறந்ததும் Effects சேர்க்க விரும்பும் போட்டோவை க்ளிக் செய்து ஓபன் செய்யுங்கள்.
  • Lightbox Mode-ல் உங்கள் போட்டோ திறக்கும் அதில் உள்ள Creative Kit என்ற லிங்கை க்ளிக் செய்யவும். 
  • அடுத்து பிக்னிக் போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும் உங்கள் இணைய வேகத்தை பொருத்து திறக்க சில நிமிடங்கள் எடுத்து கொள்ளும் காத்திருக்கவும்.
  • அடுத்து போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும் அதில் உங்கள் போட்டோக்களுக்கு விதவிதமான எபெக்ட் கொடுத்து கொள்ளலாம். 

 அழகுபடுத்திய போட்டோக்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.

கூகுளுக்கும் பேஸ்புக்கிற்கும் இடையே நடக்கும் போட்டியில் வாசகர்களாகிய நமக்கு சில பயனுள்ள வசதிகள் கிடைத்தால் நலமே.

Thanks- How to add special effects to your photos in Google plus [Picnik into Plus]

ஆங்கில சொற்களின் அர்த்தத்தை வீடியோ மூலம் விளக்கும் தளம்.

Posted On March 31,2012,By Muthukumar

இணைய உலகில் எத்தனையோ தளங்கள் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன; இந்த இணைய தளங்கள் ஒவ்வொன்றும் எதோ ஓர் வகையில் நமக்கு பயன்படும் வகையிலே உருவாக்கபடுகின்றன . அந்த வகையில் இன்றைய தளம் மிக புதிய என்பதுடன் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆங்கிலம் கற்போருக்கும் மிக பயனுள்ள தளமாக வடிவமைக்கபட்டிருக்கிறது.

vifinition.com எனும் தளமானது ஆங்கில வார்த்தைகான விளக்கத்தை வீடியோக்கள் வாயிலாக தெளிவுபடுத்துகிறது. இந்த தளத்தின் ஊடக ஆங்கில சொல்லின் விளக்கத்தை மிக வேடிக்கையாக youtube தளத்தின் வீடியோக்கள் உதவியுடன் அறிந்து கொள்ள முடியும். 


உதாரணமாக circle என்பதற்கான விளக்கத்தை வீடியோ மூலம் அறிய வீடியோ பாருங்கள் . 
  

இது புதிய தளம் என்பதால் தற்போது அதிக சொற்களுக்கான அர்த்தத்தை அறிய முடியவில்லை . எனினும் இந்த தளத்தில் நீங்களும் சொற்களுக்கான அர்த்தத்தை கொண்ட வீடியோகளை சமர்பிக்க முடியும் . 




தளமுகவரி / http://vifinition.com/word/circle/

வெள்ளி, 30 மார்ச், 2012

மொபைல் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருள்

Posted On March 30,2012,By Muthukumar
தற்போது எதற்கும் எங்கும் காத்து கொண்டிருக்க மக்கள் விரும்பதில்லை. அனைத்து வேலைகளும் கஷ்ட படாமல் சுலபமாக முடியவேண்டும் என்றே எண்ணுகிறோம். மணிக்கணக்கில் வரிசையில் காத்து கிடந்து கவுண்டர் கிட்ட போனவுடன் டிக்கெட் காலி என்று சொன்னவுடன் நமக்கு வரும் கோபத்தை எழுத்தில் சொல்ல முடியாது. டிக்கெட் முன்பதிவு செய்யும் வேலையை சுலபமாக்க அனைத்து திரையரங்குகளிலும் இணையம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தனர். இதை மேலும் சுலபமாக்க உங்கள் மொபைலில் இருந்தே சினிமா டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய உதவும் ஐந்து இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருட்களை பற்றி இங்கு பாப்போம்.

Book My Show ஆன்லைனில் டிக்கெட்டுகள் வாங்க மிகப்பிரபலமான இணையதளமாகும். இந்த மென்பொருள் மூலம் சினிமா டிக்கெட்டுகள் மட்டுமின்றி விளையாட்டு சம்பந்தமான டிக்கெட்டுகளையும் வாங்கலாம். எந்த தியேட்டர்ல என்ன படம் போகுது, நேரம், விலை, என அனைத்தையும் இந்த இலவச மென்பொருள் மூலம் பார்க்கலாம். கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் ஆகியவை உபயோகித்து உங்களுடைய டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதனை உபயோகிக்கும் முறைகளை கீழே உள்ள படங்களை பாராது தெரிந்து கொள்ளுங்கள்.

1. கீழே உள்ள லிங்கில் செண்டு இந்த மென்பொருளை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த உடன் இந்த மென்பொருளை ஓபன் செய்து நீங்கள் டிக்கெட் எடுக்க விரும்புவதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

2. அடுத்து வரும் விண்டோவில் திரைப்படத்தையும் திரைப்பட நேரத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3. அடுத்து வரும் விண்டோவில் டிக்கெட் விலையையும், எண்ணிக்கையும் குறித்து கொண்டு Proceed அழுத்தியவுடன் இருக்கை மாதிரி தெரியும் அதில் மஞ்சள் நிறத்தில் காட்டியிருப்பது ஏற்க்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை விடுத்து உங்களுக்கு தேவையான இருக்கையை தேர்வு செய்து கொண்டு Proceed அழுத்தவும்.

4. முடிவில் உங்களுக்கான டிக்கெட்டுகள் தேர்வு செய்த உடன் Payment பகுதி வரும் அதில் உங்கள் ஈமெயில் ஐடியும் மொபைல் எண்ணையும் கொடுத்து உள்ளே நுழைந்து அதில் உள்ள card வசதிகளில் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து அதன் மூலம் உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
5. வெற்றிகரமாக டிக்கெட்டை முன்பதிவு செய்தவுடன் Booking History சென்று உறுதி படுத்தி கொள்ளலாம்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - https://market.android.com/details?id=com.bt.bms

சிடி / டிவிடி கவர் அட்டை நாமே வடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்.

Posted On March 30,2012,By Muthukumarநம்மிடம் இருக்கும் சிடி /டிவிடி – களுக்கு அழகான கவர் (அட்டை) நாமே உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நம் செல்லக்குழந்தையின் பிறந்த நாள் புகைப்படங்களை நாம் சிடி அல்லது டிவிடியில் சேமித்து வைத்திருப்போம் அதிகபட்சமாக சிடியின் மேல் பெயர் எழுதி  வைப்போம் ஆனால் சிடியின் மேல் நம் குழந்தையின் புகைப்படத்தை கவரகாக ஒட்டி வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி :http://elefantsoftware.weebly.com/dvd-slim-download.html
இத்தளத்திற்கு சென்று நாம் மென்பொருளை இலவசமாக தறவிரக்கி பயன்படுத்தலாம். மென்பொருளை தறவிரக்கி நம் கணினியில் நிறுவிய பின் மென்பொருளை இயக்கி சிடி அல்லது டிவிடி எதற்கு கவர் உருவாக்கப்போகிறோம்  என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அடுத்து நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை  தேர்ந்தெடுத்து கொண்டு சில நிமிடங்களில் அழகான கவர் உருவாக்கலாம். கவர் உருவாக்கிய பின் பிரிண்ட் என்பதை சொடுக்கி பிரிண்ட் செய்து சிடி அல்லது டிவிடி மேல் ஒட்டிவிட வேண்டியது தான் அழகான டிவிடி கவர் சில நிமிடங்களில் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.

போலி FACE BOOK கணக்குகளை அறிந்துகொள்ள வழிகள்

Posted On March 30,2012,By Muthukumar


இப்போதெல்லாம் நாளந்த செய்திகளில் போலி FACE BOOK பாவனையாளர்களின் ஏமாற்று வேலைகள் மற்றும் விசமத்தனமான செயற்பாடுகள் முக்கிய இடம் பிடிக்கின்றன . இத்தைகைய விசமத்தனமான மற்றும் ஏமாற்று வேலைகளில் இருந்து எம்மையும் எமது FACE BOOK கணக்கினையும் பாதுகாப்பது அவசியமாகிறது . 



சமீபத்தில் மேற்கொள்ளபட்ட ஆய்வு ஒன்றின் படி போலி கணக்குகளில் 97 % கணக்குகள் பால் நிலை பெண்களாக இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது . 

(ஓர் பெண்ணின் புகைப்படத்தில் பல பெண்களின் பெயரில் போலி  கணக்குகள் படம் _ அதிர்வு தளத்தில் இருந்து எடுக்கபட்டது . )


 சரியான கணக்கு வைத்திருப்போரின் நண்பர்களின் பட்டியல் எண்ணிக்கை சராசரியாக 130 அண்மித்ததாக அமையும் எனவும் போலி கணக்கு வைத்திருப்போரின் நண்பர்களின் எண்ணிக்கை 726 சராசரியாக இருக்கும் என கூறபட்டுள்ளது . ( இது வெளிநாட்டில் செய்யப்பட்ட ஆய்வு அதுதான் இப்படி இதே நம்ம நாட்டில செய்தால் எப்பிடியும் 1500 க்கு அதிகமாகவே நண்பர்களின் பட்டியல் இருக்கும் . )

போலி கணக்கினை வைத்திருப்போர் தங்களின் சுய விபரத்தினை முழுமையாக வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள் . அதாவது தங்களின் பொழுதுபோக்கு , விருப்பங்கள் போன்றவற்றை பெரும்பாலான போலி கணக்குகள் கொண்டிருக்காது . 


கீழே உள்ள விளக்கப்படம் போலி FACE BOOK கணக்கிற்கும் உண்மையான கணக்கிற்கும் உள்ள வேறுபாட்டினை தெளிவுபடுத்துகின்றது. 




போலி கணக்கு வைத்திருப்போரின் புகைப்பட அல்பங்களில் ஒன்று அல்லது இரண்டு அவரின் முகப்பு படங்களாக இருக்கும் மேலதிக படங்கள் காட்சிகள்  மற்றும் நடிகர்களின்  படங்களாக  இருக்கும் . உண்மையான கணக்கு உடையவரின் புகைப்பட  அல்பத்தில் சொந்த    படங்கள் மற்றும் குடும்ப   படங்கள் இருக்கும் . அதே போன்று உண்மையான கணக்கு உடையவர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் தங்கள் வாழ்வோடு தொடர்புடைய படங்களையே நண்பர்களுக்கு TAG  செய்வார்கள் போலி கணக்கு வைத்திருப்போர் பெரும்பாலும் காட்டூன் மற்றும் காட்சிகளையே TAG செய்வார்கள் . 

ஆண்களுக்கு  தெரியாத பெண் ஒருவரிடம் இருந்து நண்பராக இணைவதற்கான அழைப்பு வருமாயின் அது போலி கணக்காக இருக்கும் .

இவற்றின் மூலம் போலி கணக்குகளை அறிந்துகொள்ள முடியும்.



பிளாக்கரில் புதிய வசதி "Image Properties" [SEO Tricks]



Posted On March 30,2012,By Muthukumar
தேடியந்திரங்கள் தான் அனைத்து வலைப்பூக்களுக்கும் முதுகெலும்பு என்று கூறலாம் ஏனென்றால் பெரும்பாலான வாசகர்கள் தேடியந்திரங்கள் மூலமாக தான் வலைப்பூக்களுக்கு வருகின்றனர். உங்கள் பதிவுகள் தேடலில் முதல் பக்கத்தில் வர தேடியந்திரங்களுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களை உங்கள் வலைப்பூக்களில் செய்ய வேண்டும். இது SEO(Search Engine Optimization) என்று அழைக்கப்படுகிறது. தேடியந்திரங்களில் புகைப்பட தேடல் (IMAGE SEARCH) என்பதும் முக்கியமான ஒன்று. இந்த பகுதியில் உங்கள் பதிவில் உள்ள போட்டோக்களை வரவைப்பதன் மூலம் கணிசமான வாசகர்களை பெற முடியும்.
போட்டோக்களில் ALT மற்றும் TITLE tag சேர்ப்பதன் மூலம் Image Search பகுதியில் நம் பதிவின் போட்டோக்களை வரவைக்க முடியும். இப்பொழுது பிளாக்கர் தளம் "Image Properties" என்ற புதிய வசதியை அறிமுகபடுத்தி உள்ளது. இதன் மூலம் Title மற்றும் ALT சொற்களை சுலபமாக நம் வலைப்பூ போட்டோக்களுக்கு கொடுக்கலாம்.

Image Properties பயன்படுத்துவது எப்படி?

முதலில் பிளாக்கரில் New Post பகுதிக்கு சென்று Insert image பட்டனை கிளிக் செய்து வழக்கம் போல போட்டோவை உங்கள் பதிவில் அப்லோட் செய்து கொள்ளுங்கள்.
பின்பு அந்த போட்டோ மீது செய்யுங்கள் அதில் Properties என்ற புதிய வசதி இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். 
Image Properties
உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் TITLE மற்றும் ALT என்ற இரு கட்டங்கள் காணப்படும் அதில் போட்டோவுக்கு சம்பந்தமான சொற்களை கொடுத்து SAVE செய்து விடவும். 
Image Properties
இனி உங்களுடைய போட்டோக்கள் சுலபமாக தேடியந்திரங்களில் திரட்டப்படும்.

வேர்ட் டிப்ஸ்-எழுத்துக்களை அகலப்படுத்த

Posted On March 30,2012,By Muthukumar
எழுத்துக்களை அகலப்படுத்த
வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து சற்று அகலமாக்கும் வழி. முதலில், நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + டி (Ctrl+D) கொடுத்து பாண்ட் விண்டோவினைப் பெறவும். இதனை மெனு பாரில் Format கிளிக் செய்து முதல் பிரிவாக இருக்கும் Font என்பதனையும் தேர்ந்தெடுக்கலாம். இந்த விண்டோவில் பல டேப்கள் கிடைக்கும். இதில் Character Spacing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் குஞிச்டூஞு என்பதற்கு அருகில் உள்ள அளவு கட்டத்தில் ஏற்கனவே 100% என இருக்கும். இதனை 200% என அமைத்து ஓகே கிளிக் செய்து பார்த்தால் தேர்ந்தெடுத்த சொல்லில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் அகலமாக மாற்றப்பட்டு இருக்கும். இது உங்களுக்கு அதிகமாகத் தெரிந்தால் அகல அளவின் சதவிகிதத்தைக் குறைக்கலாம்; கூடுதலாக வேண்டுமென்றால் உயர்த்தலாம்.
திரையின் தொடக்கத்திற்கு கர்சர்
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!

கிரிக்கெட் விளையாட்டினை நேரடியாக பார்க்க உதவும் தளங்கள்

Posted On March 30,2012,By Muthukumar

நம்மவர்களை மிகவும் கவர்ந்த விளையாட்டுக்களில் கிரிக்கெட் மிக முக்கியமான விளையாட்டாகும். தீவிரமான கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடக இந்தியா விளங்குகிறது என்று சொன்னால் மிகையாகது. 

நேரடியாக கிரிக்கெட் விளையாட்டுக்கள் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பப்படும் போது தொலைக்காட்ச்சியில் தொடர்ச்சியாக பார்ப்பது என்பது சிரமமானதே. உங்கள் கணினியில் இணைய இணைப்பின் மூலம் ஆன்லைனில் நேரடியாக கிரிக்கெட் விளையாட்டுக்களை பார்த்து ரசிக்க மிக சிறந்த தளங்களின் தொகுப்பு. 



தற்போது நடைபெறும் போட்டிகளை நேரடியாக பார்க்க இந்த தளம் உதவுகிறது. 
இந்த தளத்தில் சேனல்களை தெரிவு செய்து பார்க்க முடியும் . 



இந்த தளத்தின் முகப்பிலே நேரடி ஒளிபரப்பு காட்டப்படுகிறது. அத்துடன் எதிர்வரும் போட்டிகளின் விபரங்களையும் இந்த தளம் தருகிறது. 


இந்த தளத்தில் உள்ள லிங்க் களை கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக போட்டிகளை உங்கள் கணினி திரையில் பார்க்கலாம் . 

இந்த தளத்தில் HD தரத்தில் வீடியோ பார்க்க முடியும் . இந்த தளத்தினை திறந்த உடனே தற்போது இடம் பெறும் போட்டி காண்பிக்கப்படும் .


நண்பர்களே WATCH ONLINE CRICKET. IN இந்த தளத்திலும் நேரடியாக பார்க்க முடியும் . நான் பரீட்சித்து பார்த்த போது எனக்கு வீடியோ தோன்ற நீண்ட நேரம் எடுக்கிறது . நீங்கள் பரீட்சித்து பாருங்கள் .


இந்த தளத்தில் சென்று தற்போது நடைபெறும் போட்டியின் இணைப்பினை கிளிக் செய்து பின்னர் எதாவது ஒரு சர்வர் தெரிவு செய்து CONTINUE என்பதை கிளிக் செய்து பார்க்க முடியும் .


பிரவுசர்களும் அதன் பயன்பாடும்

இணையத் தொடர்புக்குப் பயன்படுத்த பல பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடனோ, வசதிகளுடனோ அமைக்கப்படுவதில்லை. சில வேகமாக இயங்கும்; பல பிரவுசர் கள் தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும். பாதுகாப்பு தருவதில் சில பிரவுசர்களை மற்றவை மிஞ்ச முடியாது. சிலவற்றைப் பயன்படுத்திப் பார்த்து அதில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தருகிறோம். உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, உங்களுக்கான பிரவுசரைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களு டைய தேவைகளை முன்னிறுத்தி, அதில் வெற்றி பெற்ற பிரவுசரைத் தேர்ந் தெடுத்துப் பயன்படுத்துங்கள். இந்த தேர்வின் போது ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எந்த பிரவுசரும், அது இயக்கப்படும் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் அமைப்பைப் பொறுத்தே இயங்கும். எனவே, உங்கள் ஹார்ட்வேர் வடிவமைப்புகளையும் கருத்தில் கொண்டு, பிரவுசர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நாம் பயன்படுத்திப் பார்க்க எடுத்துக் கொண்டவை அண்மைக் காலத்தில் தரப்பட்ட Chrome 17, Firefox 10, Internet Explorer 9 ஆகிய வையாகும். வேகம், பாதுகாப்பு, கூடுதல் வசதிகள் மற்றும் ஆட் ஆன் தொகுப்புகள் ஆகியவற்றின் அடிப் படையில் இவற்றைத் தர வரிசைப் படுத்தி னோம். முதல் இடத்தை, அடுத்து வந்த பிரவுசரை மிகக் குறுகிய மதிப் பெண் களில் முந்திக் கொண்டு பிடித்தது கூகுளின் குரோம் பிரவுசர் பதிப்பு 17. இதன் ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கம், இணையப் பக்கம் இறங்குவதில் வேகம், சிறப்பான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பல ஆட் ஆன் புரோகிராம்கள் இதற்கு முதல் இடத்தை வழங்கியுள் ளன. மொஸில்லா வின் பயர்பாக்ஸ் பதிப்பு 10 அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. இதன் எச்.டி.எம்.எல்.5 கிராபிக்ஸ் இயக்கம் மற்ற எந்த பிரவுசரைக் காட்டிலும் கூடுதல் வேகத்தினைத் தருகிறது. இதன் இன்னொரு தனிச் சிறப்பு, இதற்கென உருவாக்கப் பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான ஆட் ஆன் புரோ கிராம்கள். இவற்றின் மூலம் இணையத்தில் உலா வருவது எளிதாகவும், வேடிக்கையான ஓர் அனுபவமா கவும் உள்ளது.
மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9, சற்று குறைவான மதிப் பெண் களே பெற்றது. உங்கள் பிரவுசருக்கான தீம் எதனையும் இது தருவ தில்லை. இந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தருகி றது. மேலும் விண்டோஸ் லைவ் மெஷ் பயன்படுத்தாமல், நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் பேவரிட் தளங்களின் முகவரிகளை இணைக்க முடியாது. ஆனால், பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை இது சிறப்பாகவே இயங்கு கிறது. எச்.டி.எம்.எல். 5 குறியீடுகளை மிக வேகமாக இயக்குகிறது. இந்த இரண்டின் செயல்பாட்டில் இது மற்ற பிரவுசர்களுக்கு இணையாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.
இனி ஒவ்வொரு பிரவுசரின் நிறை குறைகளைக் காணலாம்.
1. கூகுள் குரோம் பதிப்பு 17: மொத்தத்தில் முதல் இடம் பிடித்துள்ள பிரவுசர். இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவை முடங்கிப் போனால் பிரவுசரின் இயக்கத்திறனை நிறுத்தாமல், அவற்றை மட்டும் மூடும் சிறப்பினை இந்த பிரவுசர் கொண்டுள்ளது. இதன் பல அடுக்கு பாதுகாப்பு (Sandbox) கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைத் தடுக்கிறது. மனதைக் கவராத அம்சங்கள் என்று எடுத்துக் கொண்டால், ஆர்.எஸ்.எஸ். ரீடர் இணைத்துத் தரப்படாததனைச் சொல்லலாம்; அடுத்து இதன் டிசைன் மிகவும் அழகாக இல்லாதது இணையப் பயனாளர்களைக் கவர்வதில்லை.
இதன் மற்ற சிறப்பம்சங்கள்: பயன்படுத்துவதில் எளிமை, அதிக எண்ணிக் கையில் எக்ஸ்டன்ஷன் வசதிகள், ஆட் ஆன் புரோகிராம்கள், மிகச் சிறந்த இயக்கம் ஆகியவை. இவை அனைத்தும் தொடக்க நிலை இணையப் பயனாளருக்குத் தெரியாமலோ, தேவை இல்லாமலோ இருக்கலாம். ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பு களை இது நிறைவேற்றுகிறது. இணை யப் பக்கங்களை, அவற்றில் எத்தனை கிராபிக்ஸ் ஆப்ஜெக்ட் கள் இருந் தாலும், நான்கு விநாடிகளில் இறக்கித் தருகிறது. பிப்ரவரியில் வெளி யான இதன் பதிப்பில், இணைய முகவரியை டைப் செய்திடத் தொடங்குகையிலேயே அந்த பக்கத்தைத் தருவது இதன் அதிமுக்கிய சிறப்பாக உள்ளது.
வேறு மொழிகளில் உள்ள இணைய தளம் இறங்குகிறது எனில், உடனே அதனை மொழி பெயர்த்துத் தரும் பணியில் குரோம் இறங்குகிறது. மொழி பெயர்ப்பு மிகச் சரியாக இல்லை என்றாலும், அப்பக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள இது உதவுகிறது.
2. மொஸில்லா பயர்பாக்ஸ் பதிப்பு 10: பலவகைச் சிறப்புகளைக் கொண்ட ஓர் அருமையான பிரவுசர். எச்.டி. எம்.எல். 5 இயக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் புரோ கிராம் கள் இதன் சிறப்புக்கு அடிப்படை. ஆனால் தேவையற்ற அல்லது அதிக மான ஆட் ஆன் தொகுப்புகள், பிரவுசரின் வேகத்தை மட்டுப்படுத்து வது இதன் பலஹீனமே. மார்ச், 2011 ல் பதிப்பு 4 வந்த பின்னர், இன்று வரை ஆறு பதிப்புகள் வந்துள்ளன, மொஸில்லா வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தொடர்ந்து கணித்து வருவதனைக் காட்டுகிறது. இதில் டேப்களை குழுக்களாக அமைத்துப் பிரித்து வைத்து எளிதாக இயக்க லாம். பாப் அப் பில்டர், பிரைவேட் பிரவுசிங் போன்றவை இதன் மற்ற சிறப்புகள்.
3. இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 9: பாதுகாப்பில் இதன் தனித் தன்மையை மற்ற பிரவுசர்கள் கொண்டி ருக்கவில்லை. எச்.டி.எம்.எல். 5 இயக்கத்தில் இதுவே அதிக வேகம் கொண்டுள்ளது. இதன் டேப்களைக் கை யாள்வதில் சற்று சிரமமாக உள்ளது. எளிமையில் மிகவும் பின் தங்கி உள்ளது.
ஒவ்வொரு தனி நபருக்குமாக, குறிப்பிட்ட தளங்களைத் தொடர்ந்து தடுத்துவிடும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் புக்மார்க்குகளை மற்ற வற்றில் இணைப் பதில் இன்டர்நெட் எக்ஸ்பு ளோரர் எதுவும் செய்ய வில்லை என்பது தீராத குறையாக உள்ளது. தீம்கள் மற்றும் ஸ்பெல் லிங் செக் செய்திடும் வசதி இல்லாதது, பலருக்கு ஏமாற்றத்தைத் தரும்.

பயனுள்ள சந்திப்புகளுக்கான இணையதளம்.

Posted On March 30,2012,By Muthukumar
இணையமே சந்திப்புகளுக்கும் பகிர்வுகளுக்குமான இடமாகி கொண்டிருக்கிறது.புதிய நண்பர்களை தேடிக்கொள்வதும் நண்பர்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் சுலபமாகி இருக்கிறது.எல்லாம் சமூக வலைப்பின்னல் தளங்களின் தயவு.
இந்த வகையில் தொழில் முறையிலான தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள உதவும் நோக்கத்தோடு எய்ட்டிபை பை பிப்டிபை என்னும் தளம் உதயமாகியிருக்கிறது.
இந்த தளத்தை சாட் ரவுலெட்டும் லின்க்டு இன்னும் இணைந்த கலவை என்று வர்ணிக்கலாம்.அதன் பயனாக மிகவும் சுவாரஸ்யமான முறையில் அதே நேரத்தில் பயனுள்ள தொட்ர்புகளை இந்த தளம் தேடித்தருகிறது.
லின்க்டு இன் தொழில் முறையினருக்கான பேஸ்புக்.இதன் மூலம் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு தொழில் முறையிலான நட்பை வளர்த்து கொள்கின்றனர்.
சாட் ரவுலெட் குலுக்கல் முறையில் புதியவர்களோடு தொடர்பு கொண்டு இணைய அரட்டையில் ஈடுபட உதவும் தளம்.அடிப்படையில் இந்த சேவை மிகவும் சுவாரஸ்யமானது.எப்போது இந்த தளத்தில் நுழைந்தாலும் குத்து மதிப்பாக யாராவது ஒரு உறுப்பினரோடு வெப்கேம் வழியே இணைய அரட்டையில் ஈடுபடலாம்.ஒவ்வொரு முறையும் அரட்டை அறையில் தோன்றும் நபர் மாறிக்கொண்டே இருப்பார்.இப்படி முற்றிலும் அறிமுகம் இல்லாவதவரோடு எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அரட்டை அடிக்க வாய்ப்பு உண்டாக்கி தருவதே இந்த தளத்தின் சுவாரஸ்யம்.
ஏறக்குறைய இதே தன்மையை தொழில் முறையிலான நண்பர்களை தேடிக்கொள்வதற்காக பயன்படுத்தி கொள்கிறது எய்ட்டிபை பை பிப்டிபை இணையதளம்.
எப்படி சாட் ரவுலெட் அறிமுகம் இல்லாத புதியவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிறதோ அதே போல இந்த தளம் அறிமுகம் இல்லாத நபர்களை இணையம் மூலம் சந்தித்து பேச வைக்கிறது.ஆனால் இந்த அறிமுகம் இல்லாதவர்கள் ‘யாரோவாக’ இல்லாமல் தொழில் முறையிலானவர்களாக இருப்பார்கள்.அதாவது லின்க்டு இன் உறுப்பினர்கள் என்றும் வைத்து கொள்ளலாம்.(லின்க்டு இன் அல்லது வர்த்தக நிறுவன இமெயில் முகவரி மூலம் தான் இதில் உறுப்பினராக முடியும்)
அதாவது வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தி தரும் உத்தியை இந்த தலம் கொஞ்சம் தலை கீழாக திருப்பி போட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
வழக்கமாக தொழில் முறையிலான தொடர்புகளை விரும்புகிறவர்கள் ஒத்த கருத்து அல்லது பொது தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே புதியவர்களை சந்திக்க விரும்புவார்கள்.ஆனால் இந்த தளமோ அதற்கு நேர் மாறாக தொழில் முறையிலானவர்களில் யாரோ ஒருவரோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிறது.
இப்படி அறிமுகம் செய்யப்படும் நபரோடு வெப்கேம் வழியே அரட்டை அடிக்கலாம்.இந்த அரட்டையின் மூலம் இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு நண்பர்களாகலாம்.இந்த நட்பு தொழில் ரீதியாக பயனுள்ளதாகவும் அமையலாம்.ஆக நட்புக்கு நட்பும் கிடைக்கும் வர்த்தக தொடர்பும் சாத்தியமாகும்.
அறிமுகமாகும் நபர்களோடு அதிக பட்சம் இரண்டு நிமிடங்களே அரட்டை அடிக்க முடியும் என்பது தான் முகவும் சுவாரஸ்யமானது.அதோடு இந்த தளத்தின் நோக்கத்தோடும் பொருத்தமானது.பெரும்பாலும் பிசியாக இருப்பவர்களே இந்த சேவையை பயன்படுத்த போவதால் அவர்களால் அரட்டை அடிப்பதில் அதிக நேரத்தை செலவிட முடியாது .புதிய நண்பர்கள் கிடைத்தாலும் வெட்டிக்கத்தை பேச அவர்களுக்கு நேரம் இருக்காது.எனவே இரண்டு நிமிடம் என்ற கட்டுப்பாட்டை அவர்கள் விரும்பக்கூடும்.
இரண்டு நிமிடத்திற்குள் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டு விட வேண்டும்.அதன் பிறகு விருப்பம் இருந்தால் அந்த புதிய நண்பரை தொடர்பு கொள்வதற்கான வசதியும் இருக்கிறது.அதே போல யாரை எல்லாம் சந்தித்தோம் என்னும் விவரம் உறுப்பினர்களின் தகவல் பக்கத்தில் சேமித்து வைக்கப்படும்.எப்போது விரும்பினாலும் அரட்டை அடித்தவரை தேடி கண்டு பிடித்து விடலாம்.
இந்த தளத்தில் ஒவ்வொரு முறையும் ஒருவரை சந்திக்கலாம்,ஆனால் ஒரு முறை சந்தித்தவரை மறுமுறை சந்திக்க முடியாது.அது தான் இதன் தனித்தன்மை.
யாரை சந்திக்க போகிறோம் என்று தெரியாமல் இருப்பது இந்த சேவையின் சிறப்பு .ஆனால் யாரை சந்தித்தாலும் பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் சிறப்பு!.
இணையதள முகவரி;http://85by55.com/

Download Firefox 10.0 final latest stable version [Download Links]

Posted On March 30,2012,By Muthukumar
Mozilla Firefox is a fast, full-featured web browser that makes browsing more efficient than ever before. Nowadays mozilla releases more firefox updates to tackle browser war with google chrome. Now mozilla releases another version of firefox is v10.0 final. It has more new feature especially Developers. see the below new features which is include in v10.0 final version.


What's New:
  • The forward button is now hidden until you navigate back
  • Most add-ons are now compatible with new versions of Firefox by default
  • Anti-Aliasing for WebGL is now implemented 
  • CSS3 3D-Transforms are now supported
  • New element for bi-directional text isolation, along with supporting CSS properties
  • Full Screen APIs allow you to build a web application that runs full screen (see the feature page)
  • We've added IndexedDB APIs to more closely match the specification
  • Inspect tool with content highlighting, includes new CSS Style Inspector
  • Mac OS X only - after installing the latest Java release from Apple, Firefox may crash when closing a tab with a Java applet installed
  • Some users may experience a crash when moving bookmarks
Download Links for English version
Windows - Download
Mac OSX- Download
Linux - Download
do you want any other language version click here to download

ரகசியமான செய்திகளை அனுப்ப ஒரு இணையதளம்.

Posted On March 30,2012,By Muthukumar
ரகசியமாக இமெயில் அனுப்பி வைக்க உதவும் பிரைவ் நோட் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்,அதே போலவே இன்னொரு இணையதளமும் இருக்கிறது.பர்ன் நோட் என்னும் அந்த தளமும் படித்தவுடன் செய்திகள் அழிக்கப்படுவதாக தெரிவிக்கிறது.
நீங்கள் யாருக்கு செய்தி அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே அந்த செய்தியை படிக்க கூடிய அளவுக்கு பாதுகாப்பாக செய்திகளை அனுப்புவதாக கூறும் இந்த தளம் தான் சாத்தியமாக்கும் ரகசியம் மற்றும் நம்பகத்தன்மையை மிக மிக விரிவாகவே உறுதி செய்கிறது.
முகப்பு பக்கத்தில் உள்ள பகுதியில் செய்தியை டைப் செய்தவுடன் அதற்குறிய இணைப்பு முகவரி ஒன்றை தருகிறது.இந்த முகவரியை யாருக்கு அனுப்பி வைக்கிறோமோ அவர்கள் மட்டும் தான் அதனை படிக்க முடியும்.அவர்களும் கூட குறிப்பிட்ட நேரம் வரை தான் படிக்க முடியும்.அதன் பிறகு அந்த செய்தி இணைய வெளியில் மறைந்து விடும்.
செய்தியை எத்தனை நொடிகள் பார்க்கலாம் என்ப‌தையும் அதற்கு பாஸ்வேர்டு தேவையா என்பதை கூட அனுப்புகின்றவரோ தேர்வு செய்து கொள்ளலாம்.பாஸ்வேர்டு பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு மட்டும் தான்.ஆனால் செய்தி அனுப்ப உறுப்பினராக வேண்டும் என்ற நிபந்தனையில்லை.
எந்த செய்தியும் ஒரே ஒரு முறை மட்டுமே படிக்க முடியும்.பர்ன் நோட்டும் தனது சர்வர்களில் எந்த செய்தியையும் சேமித்து வைப்பதில்லை என்று உறுதி அளிப்பதால் அந்த செய்தியின் ஆயுள் அவ்வளவு தான்.அதனை மீண்டும் உயிர்பிக்க செய்வது எந்த வகையிலும் எவருக்கும் சாத்தியமில்லை என்றும் சொல்லப்படுகிறது.உறுப்பினராக இருந்தால் செய்தி படிக்கப்பட்டு விட்டதா என்னும் பதிலை தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு.
படித்தவுடன் கிழித்து எரிந்து விடவும் என்று சில கடித்தங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லவா அந்த வகையான செய்திகளுக்கு இந்த தளம் மிகவும் ஏற்றது.
ரகசிய செய்திகளை யாரும் ந‌கலெடுக்கவோ அல்லது அந்த இணைய பக்கத்தையோ மொத்தமாக ஸ்கிரின்ஷாட் போல சேமிப்பதோ சாத்தியமில்லை என்றும் இந்த தளம் உறுதி அளிக்கிறது.இந்த செய்திக்கான பக்கத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்தாலும் அந்த பக்கம் காலியாக தான் இருக்குமாம்.
யாருக்கு அனுப்பபட்டதோ அவரால் செய்தி பார்க்கபடவில்லை என்றாலும் 72 மணி நேரத்தில் செய்தி தானாக மறைந்து விடுமாம்.
நம்பகமான முறையில் தகவல்களை அனுப்ப இதனை பயன்படுத்தலாம்.ஆனால் சட்ட ரிதியிலான காரணங்களுக்காக செய்தியின் நகலை பாதுக்காக்க வேண்டிய தேவையிருந்தால் இந்த சேவையை பயன்படுத்துவது ஏற்றதல்ல.இது போன்ற விஷயங்களுக்கு எதற்கும் ஒரு முறை இந்த தளத்தின் பிரைவசி கொள்கையை படித்து விடுவது நல்லது.
இணையதள முகவரி;https://burnnote.com/#/

பேஸ்புக் போட்டோக்களை ஒன்றிணைத்து வீடியோ உருவாக்க - Timeline Movie Maker


Posted On March 30,2012,By Muthukumar
 பிரபல சமூக இணையதளமான பேஸ்புக்கில் ஏராளமான போட்டோக்கள் தினமும் பகிரப்படுகிறது. நீங்கள் சுற்றுலா செல்லும் போது எடுத்த போட்டோக்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான போட்டோக்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறீர்கள். இந்த போட்டோக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து அட்டகாசமான பேக்ரவுண்ட் மியுசிக்குடன் கூடிய வீடியோவாக உருவாக்குவது எப்படி என இங்கு காண்போம்.

முதலில் இந்த timelinemoviemakerதளத்திற்கு செல்லவும். சென்றால் கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Make your Movie என்ற பட்டனை அழுத்தவும்.
  • இந்த பட்டனை அழுத்தியவுடன் பேஸ்புக் permission கேட்கும் Allow கொடுக்கவும்.
  • பிறகு உங்களுடைய Timeline movie தயாராகும். உங்களுடைய கணக்கில் உள்ள போட்டோக்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வீடியோ தயாரிக்கும். 
  • உங்கள் கணக்கில் குறிப்பிட்ட அளவு போட்டோக்கள இல்லை என்றால் போட்டோவை சேருங்கள் என்ற அறிவிப்பை வெளியிடும். 
  • முடிவில் உங்களுடைய வீடியோ தயாராகிவிடும். இந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி கொள்ளலாம். 
இப்பொழுது உங்களுக்கு பிடித்த மாதிரி வீடியோவாக உருவாக்கியதும் Share என்ற பட்டனை அழுத்தி அந்த வீடியோவை உங்கள் கணக்கில் பகிருங்கள்.  

ஆபீஸ் 2010ல் பழைய மெனு

Posted On March 30,2012,By Muthukumar
பல ஆண்டுகளாக எம்.எஸ். ஆபீஸ் 2003 ஐத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு, எம்.எஸ். ஆபீஸ் 2010 தரும் ரிப்பன் வழி இன்டர்பேஸ் சிறிது தடுமாற்றத்தினைக் கொடுக்கும்.
ஆபீஸ் 2007 வெளியானவுடன், அதனு டைய ரிப்பன் இன்டர்பேஸ் வசதியினை ஒரு சிலர் புகழ்ந்தாலும், பலர் அதனை வரவேற் கவில்லை. தடுமாற்றத்துடன் தொடங்கிய பலரும், இதனை ஏன் மாற்றினார்கள்? எது எங்கு இருக்கிறது என்று தெரிய வில்லையே? என்ற கேள்விகளுடன் இயங்குகிறார்கள். ஒரு சிலர், ஆபீஸ் 2003 தொகுப்பே போதும் என அதற்கு மாறிக் கொள்கிறார்கள். இப்போது வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்பில், ரிப்பன் இன்டர்பேஸ் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலும் பழைய படி மெனு எதிர்பார்ப்பவர்கள் அதிக பிரச்னையைச் சந்திக்கின்றனர். கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டியுள்ளதே என கவலைப்படுகின்றனர்.
இவர்களின் சிரமத்தினைப் போக்கும் வகையில், பழைய எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பில் எப்படி மெனு இருந்ததோ, அதே போல வசதியினை எம்.எஸ். ஆபீஸ் 2010லும் கிடைக்கச் செய்திட வழி கிடைத்துள்ளது. க்ஆடிtMஞுணத என்ற புரோகிராம் இதற்கான தீர்வைத் தருகிறது. புதிய தொகுப்பில் உள்ள ரிப்பன் இன்டர்பேஸ் வசதியுடன், பழைய வகை மெனுக்களையும், டூல் பார்களையும் தருகிறது. கூடுதலாக நாம் எண்ணும் அனைத்து ரிப்பன் இன்டர் பேஸ் வகை அனைத்தையும் நீக்கிவிடலாம். இந்த புரோகிராம் http://www.ubit.ch/software/ ubitmenu-languages/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதனைத் தரவிறக்கம் செய்து எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம்.
புரோகிராம் ஒன்றினை எப்படி தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவோமோ அதன் படி யுபிட் மெனுவினையும் அமைத்துக் கொள்ளவும். இது மிகவும் சிறிய புரோகிராம். இன்ஸ்டால் செய்திட மிகக் குறுகிய நேரமே எடுத்துக் கொள்கிறது. இதனை இன்ஸ்டால் செய்கையில் அனைத்து எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களையும் மூடிவிடுங்கள். ஒன்று கூட இயங்கக் கூடாது. இன்ஸ்டால் செய்த பின்னர், வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் என ஏதேனும் ஒரு புரோகிராமினை இயக்கவும். ரிப்பனில், Home மெனு அடுத்து புதிய மெனு ஒன்று கிடைப்பதனைப் பார்க்கலாம். இந்த மெனு மூலம், உங்கள் பழைய ஆபீஸ் 2003 தொகுப்பில் கிடைத்த மெனு, கட்டளைகள் அனைத்தும் கிடைப்பதனைப் பார்க்கலாம், பயன்படுத்தலாம். புதிய தொகுப்பில் தரப்பட்டுள்ள SmartArt போன்ற வசதிகளும், இந்த வகை மெனு வில் காட்டப்படுவதனைக் காணலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து இயக்கினால், புதிய PivotTable மற்றும் PivotCharts ஆகியவற்றிற்கான சப்போர்ட் இருப்பதையும் பார்க்கலாம். ஒரு வித்தியாசம் இங்கு தென்படும். அனைத்து டூல் பார்களும் ஒரு கீழ்விரி மெனுவிற்குள் சுருக்கமாக அடைபட்டிருக்கும். இதனால், உங்கள் ஸ்கிரீன் ரெசல்யூசன் மிகவும் குறைவாக செட் செய்தவர்களுக்கு, இதன் தோற்றத்தைச் சற்று வித்தியாசமாகக் காண்பார்கள். இதனைச் சற்றுப் பெரிதான தோற்றத்தில் இருக்குமாறு விரும்புவார் கள்.
இதற்கு Menu டேப்பில், Tools தேர்ந்தெடுத்து, பின்னர் Word Options தேர்ந்தெடுக்கவும். இடது பக்கம் உள்ள பாரில், Customize Ribbon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, வலது பக்கம் நீங்கள் மறைக்க விரும்பும் அனைத்து வசதிகளுக்கும் எதிரே உள்ள கட்டங்களில் டிக் அடையாளத்தினை நீக்கி விடவும். இவற்றை முடித்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த வேலை நடைபெறும் போதே, இன்டர்பேஸ் வண்ணத்தினையும் மாற்றலாம். ஆனால் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் எந்த புரோகிராமில் (வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட்) வண்ண மாற்றத்தினை ஏற்படுத்தினாலும், அந்த மாற்றங்கள் மற்ற புரோகிராம்களிலும் காட்டப்படும்.
இப்போது ரிப்பனில் இரண்டு டேப்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம். புதிய தோற்றத்தைக் காட்ட File டேப்; அடுத்து தற்போது இன்ஸ்டால் செய்த யுபிட் மெனு டேப். இதில் கிட்டத்தட்ட பழைய ஆபீஸ் 2003 தொகுப்பின் அனைத்து மெனுக்களும் இருப்பதனைக் காணலாம். இந்த மெனு மூலம் புதிய ஆபீஸ் 2010 தொகுப்பின் அனைத்து வசதிகளையும் பெறலாம் என்பது இதன் சிறப்பு.
இது போன்ற செட்டிங்ஸ் மாற்றத்தினை, வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் என அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்களை ஆபீஸ் 2007 தொகுப்பிலும் மேற்கொள்ளலாம். தனிநபர் பயன்பாட்டிற்கு யுபிட் மெனு இலவசமாகக் கிடைக்கிறது. வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த, இதனை கட்டணம் செலுத்திப் பெற வேண்டும்.

புரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.

Posted On March 30,2012,By Muthukumarஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தன் திறமையைக் காட்டி பணம் சம்பாதிக்க எண்ணும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும் ஆம் ஆன்லைன் மூலம் புரோகிராமர் பணம் சம்பாதிக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
விளம்பரத்தை சொடுக்கினால் போதும் மாதம் இவ்வளவு பணம் என்று ஏமாற்றும் பல கும்பல்களை நம்பி இனியும் ஏமாற வேண்டாம். கணினியில் புரோகிராம் எழுத்தெரியுமா ? உங்கள் புரோகிராம்கள் விலை போகாமல் இருக்கிறதா ? இனி எந்த கவலையும் வேண்டாம் உங்கள் புரோகிராம்களை எளிதாக ஆன்லைன் மூலம் விற்று பணம் சம்பாதிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.binpress.com
ஆன்லைன் மூலம் கணினித்துறையில் இருக்கும் பல நண்பர்கள் பணம் சம்பாதிப்பது எப்படி என்று  இமெயில் மூலம் நம்மிடம் கேட்கும் கேள்விக்கு பதிலாக இந்தப்பதிவு இருக்கும். கணினி மொழிகளில் உங்களுக்கு எந்த மொழி தெரிந்தாலும் அந்த மொழியில் நீங்கள் எழுதும் புரோகிராம் Code -ஐ வாங்க  பல பேர் காத்திருக்கின்றனர். C முதல் VB வரை , ஜாவா முதல் ஆண்டிராய்டு வரை , C# முதல் PHp  வரை உங்கள் புரோகிராமை ஆன்லைன் மூலம் இத்தளத்தில் விற்பனைக்கு வைக்கலாம்.  விலையையும் நாமே நிர்ணயம் செய்து கொள்ளலாம். நாம் உருவாக்கிய புரோகிராம் தேவைப்படும்  நபர்கள் ஆன்லைன் மூலம் தேடி நம் புரோகிராம் அவர்களுக்கு பிடித்திருந்தால் நாம் தெரிவித்துள்ள பணத்தை செலுத்தி நம் புரோகிராமை வாங்கிக்கொள்கின்றனர். இப்போது அதிகமாக ஆண்டிராய்டு அப்ளிகேசன் தொடர்பான புரோகிராம்களை பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இத்தளத்தில் சென்று தேடி பலரது புரோகிராம்களை வாங்குகின்றனர் என்பதும் கூடுதல் செய்தி. இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம் புரோகிராமையும் விற்பனை செய்யலாம்.  ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்.

Posted On March 30,2012,By Muthukumar
புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக  மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கணினி மேல் கொண்ட காதலால் பலர் இன்னும் கட்டற்ற பல மென்பொருட்களை இலவசமாக கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். புதிதாக கணினி மொழி கற்க விரும்பும் அனைவருக்கும் எளிதாக கணினி மொழி கற்றுக்கொடுக்கவும் இயக்கி பார்க்கவும் ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி: http://www.programr.com
இத்தளத்திற்கு சென்று நாம் கணினி மொழியில் எந்த மொழியில் திறமையானவர்களாக மாற வேண்டுமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும் தான் நம் வேலை அடுத்து வரும் திரையில் புதிதாக மொழி கற்பவர்கள் என்னென்ன அடிப்படை  புரோகிராம்கள் உள்ளன என்பதை ஒவ்வொன்றாக சொடுக்கி பார்ப்பது மட்டுமல்லாமல் அதை இயக்கியும் ( RUN) பார்க்கலாம். ஏற்கனவே புரோகிராம் எழுதியவரின் கோடிங் Download என்பதை சொடுக்கி தரவிரக்கியும் நமக்கு தேவையென்றால் மாற்றம் செய்தும்   பார்க்கலாம். கணினியின் அனைத்து முக்கிய மொழிகளுக்காக நேரடியான புரோகிராம் பயிற்சி நம்மை குறிப்பிட்ட அந்த மொழிகளில் வல்லவர்களாக்கிவிடுகிறது. இதைத்தவிர புரோகிராம் எழுத தெரிந்தவர்களுக்கு போட்டியும் வைக்கிறது இத்தளம், சவால் விடும் பல கோடிங்களும் இத்தளத்தில் எளிதாக கிடைக்கிறது, புரோகிராம் எழுதுபவர்களுக்கும் புதியவர்களுக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்



Posted On March 30,2012,By Muthukumar
கூகுள் நவீன உலகில் மனித வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. நமக்கு தேவையான பல அறிய விஷயங்களையும் அறிந்து கொண்டு நம் அறிவை வளர்க்க உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் கூகுள் தேடியந்திரதினால் மனித மூலையில் ஞாபக சக்தியும், யோசிக்கும் திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் Columbia University, Wisconsin-Madison University, Harvard University  உள்ள உளவியல் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.



இணையத்தில் ஏதோ ஒரு தகவலை கூகுளில் பார்த்து படித்து தகவலை அறிந்து கொள்கிறார்கள். அதே தகவல் மீண்டும் தேவை பட்டாலும் திரும்பவும் கூகுளுக்கு சென்று தான் தேடுகிறார்களே தவிர மாறாக முன்பு பார்த்ததை ஞாபகம் வைத்து கொள்வதோ அது என்ன தகவல் என யோசித்து பார்ப்பதோ இல்லை. கூகுளில் கொடுத்தால் நொடிப்பொழுதில் தகவலை அறிந்து கொள்ளலாம் அதற்க்கு என் யோசித்து நேரத்தை வீனடிக்கணும் என்ற மன நிலையில் தான் மக்கள் விரும்புவதில்லை. அதே சமயம் அவர்களின் மூளைக்கு எந்த வேலையும் கொடுப்பதில்லை ஆதலால் யோசிக்கும் திறந வெகுவாக பாதிக்கப்படுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் மக்கள் ஒரு தகவல் சரியாக தெரிந்திருப்பினும் அதை மற்றவர்களிடத்தில் தைரியமாக கூறாமல் எதற்கும் கூகுளில் தேடி சரியா என பார்த்து கொள்ளலாம் என்று தான் பலபேரின் மனநிலை உள்ளதாம் இதனால் அவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கூகுள் மட்டுமல்ல மனித வாழ்க்கையில் இயந்திரங்களின் பங்கு அதிகமாகி விட்டதால் மக்களின் மூளை சோம்பேறியாக மாறிவிட்டது என்பது என் கருத்து. சிறிய உதாரணம் சிறிய கணக்குகளுக்கும் கணினியையும், கால்குலேட்டரையும் தேடும் இன்றைய தலைமுறை சற்றே பின்னோக்கி நம் முந்தைய தலைமுறையை பாருங்கள் மனதிற்குள்ளேயே கணக்கு போட்டு ஒரே வினாடியில் பதிலை சொல்வார்கள். இது போல நிறைய உதாரணங்கள் இருக்கு. நம்மால் ஏன் அது முடியவில்லை நீங்களே சொல்லுங்க நண்பர்களே. 

கூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்

Posted On March 30,2012,By Muthukumar
கூகுள் தேடல் இஞ்சினில் நாளுக்கு நாள் ஏதாவது சிறப்பு வசதிகள் தரப்படுகின்றன. மக்களுக்கு முதன் முதலில் பிரபலமான தன் தேடல் சாதனத்தின் நற்பெயரை கூகுள் தக்க வைக்க ஏதேனும் வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. கூகுள் 64.6% பேரிடமும், அடுத்த இடத்தில் உள்ள யாஹூ 19.3% பேரிடமும் உள்ளது என்றாலும், கூகுள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதுவரை வந்த கூகுள் கூடுதல் வசதிகள் நாம் மனதில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சில கூறுகளை இங்கு காணலாம்.
வழக்கமான தேடுதல் விடைகளுடன், கூகுள் அப்போதைய நேரத்தைக் கூறும் திறன் கொண்டது. நாம் இருக்கும் இடத்தின் நேரம் மட்டுமல்ல; உலகின் எந்த ஊரின் நேரத்தையும் காட்டும். எடுத்துக்காட்டாக time madurai என்று கொடுத்தால் மதுரை நேரத்தையும், time tokyo என்று கொடுத்தால் அதே நேரத்தில் டோக்கியோ நகரின் நேரத்தையும் காட்டும். இது மட்டுமின்றி அந்த ஊரில் நிலவும் சீதோஷ்ண நிலையையும் காட்டும். weather delhi எனக் கொடுத்தால் அந்த ஊரின் சீதோஷ்ணநிலை மற்றும் வர இருக்கும் சீதோஷ்ணநிலை மாற்றங்கள் குறித்தும் தகவல் கிடைக்கும்.
கூகுள் தேடல் விண்டோவினை, கால்குலேட்டர் விண்டோவாகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் கால்குலேட்டராகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இது தரப்படுத்தப்பட்டுள்ளது. 94/36*(sqrt 34)^3 என்று கொடுத்தாலும் சரியான விடை கிடைக்கும். சில கணக்கிடும் அடையாளங்களுக்குச் சொற்களையும் தரலாம். எடுத்துக்காட்டாக 96 divided by 36 times (sqrt34)^3 என்றும் தரலாம்.
சில அலகுகளுக்கிடையே மாற்றங்களையும் இதில் கண்டறியலாம். mm to inch, Fahrenheit to Celsius எனக் கொடுத்து யூனிட் மாற்றத்தையும் அறியலாம்.
ஒரு சிலர் அலுத்துக் கொள்ளலாம். நாம் எதனைக் கொடுத்தாலும், சரியாக அதனை மட்டும் கொடுக்காமல், சார்ந்த அனைத்தையும் தருகிறதே என்று பலர் இது குறித்து சொல்வதைக் கேட்கலாம். நம் தேடல்களைக் குறிப்பிட்ட ஒன்றின் அடிப்படையில் மட்டும் கிடைக்கும்படி தேடலை அமைக்கலாம். அவற்றில் சில:
+ கொடுத்தால் சில குறிப்பிட்ட சொற்களைக் குறிப்பாகத் தேடும்படி அமைக்கலாம். எ.கா.––netbook +11.6 +ion- (மைனஸ் அடையாளம்) கொடுத்தால் குறிப்பிடும் சொற்களைத் தவிர்த்து தேடுக என்று பொருள். எ.கா. – gaming keyboard logitech
* இதனை கம்ப்யூட்டர் சார்ந்த சொற்களுடன் குறிப்பிடுவார்கள். அதாவது தெரியாத சொற்களுக்கான அடையாளம். traditional * food என்று கொடுத்தால் (*) இந்த அடையாளம் உள்ள இடத்தில் வேறு எந்த சொல்லையும் சேர்த்து தேடிக் கொடு என்று பொருள்.
~ இந்த அடையாளம் கொடுத்தால் அடுத்துள்ள சொல் வழக்கமாக எந்த சொற்களுடன் ஜோடியாகப் பயன் படுத்தப்படுமோ அவை எல்லாவற்றையும் தேடி எடுத்துக்கொடு என்று கட்டளை அமைக்கிறோம். எ.கா. first computer build ~help எனக் கொடுத்தால் அது அனைத்து வகையான ஹெல்ப் வகைகளும் பட்டியலிடப்படும்.
.. குறிப்பிட்ட எண் வரிசை தொடர்ச்சி யாக வேண்டுமா? எடுத்துக் காட்டாக விலை ரேஞ்ச், தேதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எ.கா. – halo pc $0..$15
ஏதேனும் ஒரு சொல், முதல் எழுத்துக்கள் அடங்கிய சுருக்குச் சொல் போன்றவற்றின் சிறப்பு விளக்கம் பெற ஞீஞுஞூடிணஞு என்ற சொல்லைக் கொடுத்துப் பின் பொருள் தேடும் சொல்லைக் கொடுக் கலாம். எடுத்துக்காட்டாக define algorithm / define WHO என்று கொடுக்கலாம்.
குறிப்பிட்ட பைல் வகைகளை மட்டும் தேடிக் கொடுக்கும்படி filetype: என்ற சொல் கொண்டு தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக filetype: pdf எனத் தரலாம்.
ஓர் இணைய தளத்தினைத் தேடக் கட்டளை கொடுக்கையில் அதே பொருளில் உள்ள மற்ற தளங்களைக் காட்டும்படியும் தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக related:sciencetv.com என அமைக்கலாம்.
site: என்ற சொல் கொடுத்து குறிப்பிட்ட தளத்தில் மட்டும் ஒன்றைத் தேடும்படி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக mango site:vegetables.com எனக் கொடுத்து அந்த தளத்தில் மட்டும் இந்த சொல் எங்கு உள்ளது எனத் தேடலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பரேட்டர் அடையாளங்களை இøணைத்தும் கொடுத்துத் தேடலாம். எடுத்துக்காட்டாக +microsoft +yahoo ~talks “Matthew DeCarlo” site:techspot.com எனக் கொடுக்கலாம்.

டிவிட்டர் நண்பர்களை வகைப்படுத்தி வகைக்க உதவும் பயனுள்ள தளம்.

Posted On March 30,2012,By Muthukumarடிவிட்டரில் இருக்கும் நம் நண்பர்கள் அனைவரையும் வகைப்படுத்தி வைத்து தேவைப்படும் நேரங்களில் எளிதாக ஒவ்வொருவரையும் எளிதாக தொடர்பு கொள்ள உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
டிவிட்டரில் இருக்கும் பல வகையான நபர்களில் சொந்தங்கள் முதல் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரையும் Organize செய்து வைப்பதற்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.peepnote.com
இத்தளத்திற்கு சென்று Sign in using Twitter என்ற பொத்தானை சொடுக்கி நம் டிவிட்டர் கணக்கை கொடுத்து உள்நுழைய வேண்டும் பின் எளிதாக நம் டிவிட்டர் Follower களை எளிதாக வகைப்படுத்த ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு Contact -க்கும் அதற்கு தொடர்பான பெயரை கொடுத்து வைக்கலாம், இதே போல் நம் டிவிட்டர் Tag -களை கூட எளிதாக Organize செய்து வைக்கலாம். இதோடு கூடுதல் சேவையாக Search Your peeps என்பதில் நம்மை பின் தொடர்பவர்கள் முதல் Notes என அனைத்தையும் எளிதாக தேடலாம்.  டிவிட்டர் பயனாளிகளுக்கு இந்தப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வீடியோக்களை விதவிதமாக எடிட் செய்ய

வீடியோக்களை விதவிதமாக எடிட் செய்ய நிறைய சாப்ட்வேர்கள் உள்ளன. அதில் இந்த சாப்ட்வேரும் ஒன்று. 6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான வீடியோவினை டிராப் & டிராக் முறையிலோ - பைல்மூலமோ தேர்வு செய்யலாம். 
இதில் கீழே உள்ள settings கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள போனுக்கு தேவையான பார்மெட்டினை தேர்வுசெய்யலாம்.


 இதில் உள்ள Profile கிளிக் செய்ய நமக்கு தேவையான வீடியோ கோடக் - ஆடியோ கோடக் - ப்ரேம் ரேட்- என விதவிதமான ஆப்ஷன்கள் கிடைக்கும். தேவையானதை தேர்வுசெய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 அனைத்து செட்டிங்ஸ் முடிந்ததும் நாம் ப்ரிவியு பார்க்கும் வசதியும் உள்ளது:.
 இறுதியாக இதன் கீழே உள்ள Start பட்டனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இந்த சின்ன சாப்ட்வேர் மூலம் வீடியோவினை எடிட் செய்ய. சேர்க்க,பிரிக்க.யூ-டியூபிலிருந்து பதிவிறக்கம் செய்ய - ரிங்டோன உருவாக்க என எண்ணற்ற பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.