Posted On April 07,2012,By Muthukumar |
நீங்கள்
`பேஸ்புக்'கில் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் அழகான, கவரக்கூடிய
படத்தை அதில் இடம்பெறச் செய்யுங்கள். இதுபோன்ற சமூக வலைத்தளங்களைப்
பயன்படுத்துவோர், பிறரைப் பற்றிப் படித்துப் பார்க்காமல் அவர்களின்
படங்களைக் கொண்டே ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர் என்கிறது ஒரு புதிய
ஆய்வு.
இந்த
ஆய்வை மேற்கொண்ட ஓஹையோ ஸ்டேட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இயல்பான
விஷயங்களைவிட, எதிர்மறையான செய்திகளில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்
என்றும் தெரிவித்துள்ளனர்.
`பேஸ்புக்'கில்
காணப்படும் ஒரு புகைப்படமே அவரைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ள
பார்வையாளர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. அவர்களுக்கு எந்த
வார்த்தைகளும் தேவைப்படுவதில்லை என்கிறார்கள்.
இது
தொடர்பான ஓர் ஆய்வில், சக மாணவர் ஒருவரின் புகைப்படத்தை `பேஸ்புக்கில்'
பார்த்த சில கல்லூரி மாணவர்கள், அவரைத் `தம்பட்டம் அடிப்பவர்' என்று
கிண்டல் செய்தனர். ஆனால் அந்த மாணவரின் புரொபைலில், `பிறருடன் கலந்து
பழகுவதில் ஆர்வமில்லாதவர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு
படம் வழக்கத்துக்கு மாறானதாகவோ, ஏதாவது எதிர்மறை அம்சத்தைக் காட்டுவதாகவோ
இருந்தால் மட்டுமே அவரைப் பற்றிய புரொபைலை படித்து, அவர் எப்படிப்பட்ட நபர்
என்று தெரிந்துகொள்ள மற்றவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறார்கள்
ஆய்வாளர்கள்.
``சமூக
வலைத்தளங் களில் ஒருவரைப் பற்றிய கருத்தை உருவாக்கும் அடிப்படையான
விஷயமாகப் புகைப்படங்கள் உள்ளன என்பது எங்கள் ஆய்வின் மூலம் சந்தேகத்துக்கு
இடமின்றி உறுதியாகியிருக்கிறது'' என்கிறார், ஆய்வுக்குத் தலைமை வகித்த
பிராண்டன் வான் டெர் ஹெய்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக