Posted On April 13,2012,By Muthukumar

குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை இதன் தேடல் கட்டத்தில் சமர்பித்தால் அந்த தளம் போலவே உள்ள இணையதளங்களை இது தேடித்தருகிறது.எந்த ஒரு தளத்திற்கும் தொடர்புடைய அல்லது அதற்கான மாற்று தளங்கள் தேவைப்பட்டால் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தளங்களுக்களூக்கான மாற்று இணையதளங்களை தன்னகத்தே கொண்டிருப்பதாக பெருமைப்பட்டு கொள்ளும் இந்த தளம் மற்ற எந்த ஒரே மாதிரி தளங்களை தேடித்தரும் இணையதளத்தையும் விட துல்லியமான முடிவுகளை தருவதாகவும் தெரிவிக்கிறது.
கூகுல் துல்லியமான தேடலுக்கு பிரத்யேகமான உத்தியை பின்பற்றுவது போல ஒரே தனமையை கொண்ட தளங்களை தேடித்தருவதற்கான உத்தி இருப்பதால் இதனை நம்பிக்கையோடு இந்த தளம் சொல்கிறது.
தேவையான மாற்று தளங்களை தேடிப்பார்ப்பதோடு இங்கு ஏற்கனவே தேடிய தளங்களையும் ஒரு பார்வை பார்க்கலாம்.இது வரை தேடப்பட்ட தளங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.புதிய இணையதளங்களையும் எதிர்பாராத இணையதலங்களையும் அறிமுகம் செய்து கொள்ள இந்த பட்டியல் சுவாரஸ்யமான வழி.
இணையதள முகவரி;http://www.websiteslike.org/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக