வெள்ளி, 6 ஏப்ரல், 2012

மனங்களைக் கவரும் விண்டோஸ் -8

Posted On April 06,2012,By Muthukumar
நுகர்வோருக்கான முன் பயன்பாட்டிற்கான விண்டோஸ் 8 பதிப்பினைப் பலரும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில் நுட்பத்துறையில் இயங்குபவர்கள், இதனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டுத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். விண்டோஸ் 8 தொடுதிரை பயன்பாட்டினை எல்லாரும் பயன்படுத்திப் பார்க்க இயல வில்லை. ஆனால் அந்த அனுபவம் சிறப்பாக இருக்கும் என அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனால், தொடுதிரை வசதியுடன் கூடிய விண்டோஸ் 8 கம்ப்யூட்டரையே வாங்க வேண்டும் என முடிவு செய்து, பலர் அடுத்த கம்ப்யூட்டர் வாங்குவதனை ஒத்தி வைத்துள்ளனர். இவர் களின் மனதைக் கவர்ந்த, பயனுள்ள சில முக்கிய சிறப்புகளை இங்கே பட்டியலிடலாம்.
1. கேம்ஸ்: விண்டோஸ் போன் 7 சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பாக்ஸ் லைவ் சாதனத்திலிருந்து கேம்ஸ்களை மிக எளிதாக மாற்றும் வசதி தந்திருந்தது. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டமும் அதே கட்டமைப் பில் உருவாக்கப்பட்டிருப்பதால், அதே போன்று கேம்ஸ்களை எளிதாக மாற்ற முடிகிறது. இதனால், செலவும் குறைகிறது. குறிப்பாக, சிலர் வித்தியாசமான முறையில் சில பிரபலமாகாத விளையாட்டுக்களைத் தரவிறக்கம் செய்து விளையாட எண்ணு வார்கள். இவர்களுக்கு விண்டோஸ் 8, எக்ஸ்பாக்ஸ் லைவ் சாதனக் கூட்டு மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் அமைந்துள்ளது.
2. டேப்ளட்ஸ்: டேப்ளட் பிசிக்களை அனை வரும் பயன்படுத்தும் காலம் இப்போதைக்கு இல்லை என்றாலும், ஒரு நாளில் அது நடந்தே தீரும். அவ்வாறு மாறுபவர்களுக்கு விண்டோஸ் 8 நல்ல ஒரு வழித்தடமாக அமைந்துள்ளது. கவனத்தை ஈர்க்கிறது. இதன் தொடுதிரை பயன்பாடு, டேப்ளட் பிசிக்கு மக்களை மாற்றும் சிறப்பாக அமைந்துள்ளது. இதனைப் பயன்படுத்தியவர்கள், நிச்சயம் டேப்ளட் பிசிக்கு மாறுவது எளிமையாக வும் இனிமையாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உணர்வார்கள். விண்டோஸ் போன் 7ல் இந்த சிஸ்டத்தினைப் பயன் படுத்தியவர்களுக்கு, விண்டோஸ் 8 மிகவும் எளிதாகவும், பிடித்துப் போனதா கவும் அமையும்.
3. மெசேஜ் அனுப்புதல்: விண்டோஸ் 8 சிஸ்டம் பொதுவான சமூக தளங்களான, பேஸ்புக், லைவ் மற்றும் ட்விட்டர் தளங்களுடன் மெசேஜ் அனுப்பும் செயல் பாட்டில் இணைந்து இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் ஒரே இடத்தில் கிடைப்பது இதன் சிறப்பு. இதனால், வெவ்வேறு இணைய தளங்களைத் திறந்து இயங்கும் தேவை தவிர்க்கப்படுகிறது. பலவகையான தர்ட் பார்ட்டி புரோகிராம்களை இயக்கும் நிலை யும் தேவைப்படவில்லை. பல பிரபல மான தளங்களுடன் இணைந்த மெசேஜிங் சிஸ்டம் கிடைப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுவும் விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 8க்கு வந்த ஒரு வசதியாகும்.
4. அப்ளிகேஷன் ஸ்டோர்: விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்களுக்கென ஓர் அப்ளிகேஷன் ஸ்டோர் தனியே முன்பு இயங்கியது. அது பலர் அறியாமலேயே இருந்து வந்தது, ஒரு சிலர் மட்டும் மிக நன்றாகவே பயன்படுத்தி வந்தனர். விண்டோஸ் 8 சிஸ்டம் வந்த பின்னர், இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. மெட்ரோ அப்ளிகேஷன் புரோகிராம்களை மிக எளிதாக, விண்டோஸ் 8 மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அது மட்டுமின்றி, அவை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் வகையில் தரப் பட்டுள்ளன. இதனால், பலவகையான அப்டேட் அப்ளிகேஷன் களை காலத்தே இறக்கிப் பதிவதும், மிகப் பழைய நிலையில் அப்ளிகேஷன்களை இயக்குவதும் இனி நடக்கப்போவது இல்லை. எனவே, கம்ப்யூட்டரை மாற்றினால் கூட, இன்ஸ்ட லேஷன் டிஸ்க், ட்ரைவர் என எதனையும் தேட வேண்டிய தில்லை. அனைத்தையும் அப்ளிகேஷன் ஸ்டோரிலிருந்து இறக்கிக் கொண்டு பயன்படுத்தலாம்.
5. பாதுகாப்பின் ஸ்திரத்தன்மை: மெட்ரோ அப்ளிகேஷன்கள் அமைந்துள்ள WinRT API கட்டமைப்பு, இந்த அப்ளிகேஷன்கள் பயன்படுத்துபவர்கள் தரும் டேட்டா மற்றும் சிஸ்டம் இணைந்த செயல் பாட்டில் என்ன செய்திட வேண்டும் எனத் துல்லிதமாக வரையறை செய்கின்றன. மெட்ரோ வில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மற்ற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களை இயங்கவே விடாது. இது டெவலப்பர்களுக்கு ஒரு தடைச் சுவராக இருக்கலாம். ஆனால், பயனாளர்களுக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது. இதனால், தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் எதுவும் சிஸ்டத்தினைக் கெடுக்க முடியாது; பயனாளர்களின் டேட்டாவினை அறிந்தோ அறியாமலோ சீரழிக்க முடியாது.
6. இணைந்த இன்டர்பேஸ்: மைக்ரோசாப்ட் தன் அனைத்து சிஸ்டங்களையும் மெட்ரோ யூசர் இடைமுகத்துடன் இணைத்துக் கொண்டு வருகிறது. பெர்சனல் கம்ப் யூட்டர், போன், டேப்ளட் பிசி மற்றும் வீடியோ முனையங்கள் அனைத்தும் இதனைக் கட்டமைப்பாகக் கொண்டே இயங்கு கின்றன. இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எந்த ஒரு புதிய சாதனத்தைப் பயனாளர் ஒருவர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அவருக்கு அது ஏற்கனவே பழகிய ஒன்றாகத்தான் இருக்கும்.
7. க்ளவ்ட் இணைப்பு: விண்டோஸ் 8 சிஸ்டத்துடன், கிளவ்ட் அடிப்படையிலான செயல்முறை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால், லைவ் ஐ.டி. ஒன்றின் மூலம் விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர் ஒன்றில் பதிந்தால், அனைத்து இணைந்த டேட்டா வும் உடனே கிடைக்கும். எடுத்துக் காட்டாக, நான் விண்டோஸ் 8 நுகர்வோர் முன் பயன்பாடு இயக்கத்தில் இணைந்தவுடன், என்னுடைய ட்விட்டர், பேஸ்புக் மற்றும் லைவ் மெசஞ்சர் அக்கவுண்ட்கள் அனைத்தும் பதியப்பட்டன. ஏனென்றால், போனிலும் நான் அதே லைவ் ஐ.டி.யைப் பயன்படுத்துகிறேன். இதில் உள்ள எந்த டேட்டாவினை நான் மாற்றினாலும், உடனே அது மற்ற பயன்பாட்டு தொகுப்பு களிலும் அப்டேட் செய்யப்பட்டு காட்டப்படும். ஏதேனும் ஒரு சாதனத்தை மாற்றுகையில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஏனென்றால், ஒவ்வொரு இணைப்பினையும் புதிய தாகப் பதிய வேண்டியதில்லை. பதிந்த பின்னர் டேட்டாவினை மீண்டும் உருவாக்கத் தேவையில்லை.
8. ஒருங்கிணைந்த பிற தள சேவைகள்: விண்டோஸ் 8 சிஸ்டம், மற்ற தளங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு, அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனதிற்கு நிறைவினையும் தரும் வகையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்ட மை பிக்சர்ஸ் (My Pictures) இதுவரை ஒரு டைரக்டரியாக மட்டுமே செயல்பட்டது. இப்போது, இது ஆல்பம் மற்றும் லைப்ரரீஸ் (Album and Libraries) என்ற புதிய வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் படங்கள் எங்கிருந்து வந்தன என்ற தகவலை நாம் பெற முடியும். சேவைத் தளங்களான Flickr மற்றும் Facebook போன்றவை, Libraries என்ற வகையில் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக் கப்பட்டுள்ளன. மற்ற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களும் இந்த பிரிவில் இணைந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதே போல People Hub என்ற பிரிவில், நாம் பல்வேறு தளங்கள் (Facebook, email accounts, LinkedIn, போன்றவை)வாயிலாக அறிந்து வைத்திருக்கும் நபர்கள், நண்பர்கள் குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன.இதனால் நம் தகவல்கள், அப்ளிகேஷன்கள் அடிப்படையில் அமையாமல், நாம் பயன்படுத்தும் சிஸ்டத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன. எனவே நாம் பிற தளங்களுக்கு அடிக்கடி அனாவசியமாகச் சென்று வரும் வேலை மிச்சமாகிறது.
9. மின்னஞ்சல்: விண்டோஸ் போன் 7 சிஸ்டம் அதன் மிகச் சிறப்பான இமெயில் கிளையண்ட் அமைப்பிற்காகப் பல பாராட்டுதல்களைப் பெற்றது. இதே வசதி இங்கு விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பெரிய திரைக்கேற்ப வகையில் அமைக்கப் பட்டுள்ளது. பல இமெயில் அக்கவுண்ட்கள் இதில் ஒருங்கிணைக்கப் பட்டு, பயனாளர் களுக்கு அனைத்தும் ஒரே குடையின் கீழ் வழங்கப்படுகின்றன. இதனால் இவற்றை விரைவாகவும், எளிதாகவும் கையாள முடிகிறது.
10. எளிமை: விண்டோஸ் 8 சிஸ்டத்தின் ஒரு சிறப்பு அதன் மெட்ரோ அப்ளிகேஷன்கள். இவற்றுடன் நாம் இணைந்து பணியாற்றினால், இந்த சிஸ்டத்தின் எளிமை நமக்குப் புரிய வரும். இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில், ஒரே நேரத்தில், பல பணிகளை எடுத்துப் பலவாறாகப் பணியாற்றியவர்கள், பல நேரங்களில் தடுமாறிப் போனார்கள். ஒரு சில அப்ளி கேஷன்கள் தங்களுக்கு வேண்டிய இயக்க சூழ்நிலை கிடைக்கவில்லை என்றால், முடங்கிப்போயின. ஆனால், விண்டோஸ் 8 தரும் மெட்ரோ அப்ளிகேஷன்கள் இயக்கத்தில் முடங்கிப் போகும் சூழ்நிலையே ஏற்படாது. நம்பிக்கையோடு, அப்ளி கேஷன்களை இயக்கி வசதிகளை அனுபவிக்கலாம்.
அப்ளிகேஷன் ஸ்டோர் மூலம் எந்நேரமும் நமக்குக் கிடைக்கக் கூடிய புரோகிராம்கள், ஒரே இடத்தில் அனைத்து இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள், மெசேஜ் அனுப்ப ஒரே இடம், வெவ்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய தளங்களுக்கு அடிக்கடி மாறிச் சென்று இயக்க வேண்டாமல், ஒரே இடத்தில் இயக்க சூழ்நிலை பெறும் வசதி என அனைத்தும் எளிமையாக்கப் பட்டுள்ளன. தற்போது இருக்கிற சிஸ்டம் ட்ரே நோட்டிபிகேஷன், பஸ்ஸர், நாய்ஸ், டாஸ்க்பார் ஐகான்ஸ் என்ற வழக்கமான விண்டோஸ் சூழ்நிலை இல்லாமல், எளிமையான, வேகமான, வசதியான ஒரு சூழ்நிலைக்கு நம்மை அழைத்துச் செல்வதனால், பயனாளர்களைக் கட்டிப் போட்டு குஷிப்படுத்தும் கட்டமைப்பாக விண்டோஸ் 8 அனைவருக்கும் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக