வெள்ளி, 13 ஏப்ரல், 2012

அன்பை தெரிவிக்க ஒரு இணைய‌ விண்ணப்ப படிவம்

Posted On April 13,2012,By Muthukumar
இந்த தளத்தை பற்றி அறிவதற்கு முன்பாக உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் ரீவைன்டு செய்து கொள்ளுங்கள்.வாழ்கையில் யாருக்கு நீங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள் என்று யோசித்து பாருங்கள்.அதாவது யார் உங்கள் மீது அதிக தாக்கம் செலுத்தியுள்ளனர் என்று நினைத்து பாருங்கள்.
யாரை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள்,உயர்வாக கருதுகிறீர்கள் என்றெல்லாம் யோசித்து பார்த்து கொள்ளுங்கள்.
காரணம் இந்த தளம் உங்கள் வாழ்வில் உள்ள இத்தகைய நபர்கள் மீதான உங்கள் அன்பை பகிர்ந்து கொள்வதற்கானது.
நீங்கள் யாரை மிகவும் நேசிக்கிறீர்களோ அவர்களிடம் அதனை தெரிவியுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் நாளை என்பது இல்லாமலேயே போய்விடலாம் என்பதால் இன்றே உங்கள் அபிமானத்தை சொல்லி விடுங்கள் என்று அச்சுறுத்துவது போலவும் சொல்கிறது.
இந்த எச்சரிக்கை கொஞ்சம் சோகமயமாக அமைந்தாலும் இந்த தளம் தூண்டுகோளாக அமையும் விஷயம் கொஞ்சம் அற்புதமானது.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்கையில் யாரை முக்கியமாக கருதுகின்றனறோ அவர்கள் மீதான அன்பையும் பாதிப்பையும் பகிர்ந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
சாதனையாளர்கள் மற்றும் நட்சத்திரங்கள் பேட்டிகளின் போது தங்கள் வாழ்கையில் மாற்றியமைத்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்வது உண்டல்லவா?
அதே போல கூட நமது வாழ்க்கையிலும் முக்கியமான நபர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.பள்ளி பருவத்தில் நமது திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்த ஆசிரியராக,நண்பன் போல பழகி தோளில் கைப்போட்டு நல்ல விஷயங்களை அடையாளம் காட்டிய சகோதரனாக,இலக்கிய உலகிற்கான ஜன்னலை திறந்து விட்ட நண்பனாக,அன்பின் மொழியை கற்றுத்தந்த ஸ்நேகிதியாக,பொறுமையின் அருமையை உபதேசித்த சித்தப்பா என வாழ்க்கையில் நம்மை பாதித்தவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
கொஞ்சம் யோசித்தால் இப்படி நமக்கான குனங்களையும் தருணங்களையும் சுட்டிக்காட்டிய அன்பான மனிதர்கள் பலர் இருக்கலாம்.இவர்கள் மீதான நமது அன்பையும் நன்றி பெருக்ககையும் ஏன் மனதுக்குள் பூட்டி வைக்க வேண்டும்.அவர்களிடமே பகிர்ந்து கொண்டால் என்ன?
ஆனால் இது அத்தனை சுலபமானது அல்ல தான்.திடீரென ஒருவரிடம் போய் அவர்கள் மீதான அபிமானத்தை வெளிப்படுத்த தயக்கமாக இருக்கலாம்.ஆனால் சொல்லமலே விட்டு விட்டால் அது இழப்பு தானே.அதோடு இதற்கான நேரம் வரும் என்றும் காத்திருக்க முடியாதே!.
இந்த தளம் சொல்வது போல இத்தகைய அன்பை ஒரு எஸ் எம் எஸ் மூலமோ ஒரு இமெயில் மூலமோ தெரிவிப்பது மிகவும் செயற்கையாக இருக்கலாம்.டிவிட்டரில் சொல்ல்வது மிகவும் பகிரங்கமாகி விடலாம்.அதனால் தான் நம்மை பாதித்தவர்கள் மீதான அன்பையும் நேசத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான அழகான வழியை இந்த தளம் உருவாக்கியுள்ளது.
யாருக்கு அன்பை சொல்லப்போகிறோம் என்பதை மட்டும் தீர்மானித்து கொண்டால் போதும் மற்ற விஷய‌ங்களுக்கு எல்லாம் இந்த தள‌மே வழி செய்கிறது.
இதற்காக‌ என்றே விண்ணப்ப படிவம் போன்ற ஒரு படிவம் இருக்கிறது.அதில் யாருக்கு அன்பை சொல்லப்போகிறோமோ அவரது பெயரை குறிப்பிட்டு விட்டு அதன் கிழே உள்ள கட்டங்களில் நமது உணர்வுகளை தெரிவிக்கலாம்.
உள்ளத்து உணர்வை தெரிவிக்க வார்த்தைகளுக்கும் வாக்கியங்களுக்கும் தடுமாற நேராமல் சுலபமாக அவற்றை தெரிவிக்கும் வகையில் வரிசையாக இந்த கட்டங்கள் அமைந்துள்ளன.
முதல் கட்டம் நான் என்று ஆரம்பமாகிற‌து.அதில் நான் ஏன் உங்களை முக்கியமாக கருதுகிறேன் என்ற‌ விவர‌த்தை தெரிவித்து விட்டு நீங்கள் என துவங்கும் அடுத்த கட்டத்தில் அவர்கள் நம் மீது தாக்கம் செய்த வித்ததை குறிப்பிடலாம்.
நாம் என துவங்கும் அடுத்த கட்டத்தில் இருவரும் இணைந்து அனுபவித்த உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம்.
தொடர்ந்து மறக்க முடியாதவை மற்றும் நன்றிக்குறியவற்றை பகிர்ந்து கொள்ள்லாம்.அப்படியே அவர்களிடம் பிடித்தவற்றையும் நேசிப்பவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்.
பக்கம் பக்கமாக் எழுதினாலும் சொல்ல முடியாதவற்றை இந்த படிவத்தை பூர்த்தி செய்வது மூலம் வெளிப்படுத்தி விடலாம்.
எல்லாவ‌ற்றையும் முடித்து விட்டு உங்கள் அன்புக்குறிய என்று கையெசுத்திட்டு உரியவருக்கு அனுப்பி வைக்கலாம்.
அன்பை சொல்வது நல்லது தானே.
இணையதள முகவ‌ரி;http://www.wyah.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக