செவ்வாய், 17 ஏப்ரல், 2012

மைக்ரோசாப்ட் பிங் தேடுபொறி நடத்தும் Deal shopping பயனுள்ள தகவல்.

Posted On April 17,2012,By Muthukumar
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தேடுபொறி இணையம் வழியாக பொருட்களை விற்பனை செய்வதற்காக Shopping என்ற புதிய பக்கத்தை அறிமுகம் செய்துள்ளது இதில் நாம் விரும்பும் பொருட்களை குறைந்த விலையிலும் தரமான நிலையிலும் வாங்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

இணையம் வழியாக பொருட்களை விற்பதற்கு என்று பல இணையதளங்கள் இருந்தாலும் சில முக்கிய நிறுவனம் நடத்தும் Shopping தளங்களில் இருந்து பொருட்களை வாங்குவது தற்போது அதிகமாகிவருகிறது அந்த வகையில் பிங் தளம் தற்போது Deal Shopping என்ற பக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.bing.com/shopping

மைக்ரோசாப்ட் தேடுபொறியான பிங் அறிமுகப்படுத்தியிருக்கும் இத்தளத்திற்கு சென்று Shopping என்ற பக்கத்தில் இருக்கும் பல வகைப்பட்ட துறைகளில் இருந்து எந்தத்துறை சார்ந்த பொருட்கள் வாங்க வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்துக்கொண்டு பின் என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். பல நிறுவனங்களின் பொருட்கள் விலையுடன் காட்டப்பட்டிருக்கிறது,  பல நிறுவனத்தின் பொருட்களை ஓப்பிட்டு பார்த்து எந்த நிறுவனத்தின் பொருள் நமக்கு சரியாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு வாங்கலாம். எந்தப்பொருள் நமக்கு வேண்டுமோ அதை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வாங்கும் வசதியும் இருக்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க விரும்புபவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

QR Codes இல் படங்களை இணைத்து அழகாக்குங்கள்.


Posted On April 17,2012,By Muthukumar

QR Codes என்றால் தனியே கறுப்பு வண்ணத்தில்
மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை.

அதற்குள் படங்களை இணைத்து அழகு பார்க்க http://www.qrhacker.com/  என்ற இணையத்தளம் உதவுகின்றது.

இத்தளத்தின் மூலம் QR Codes இலுள்ள ஒவ்வொரு பிக்ஸலையும் வண்ணமயமாக மாற்றவும் முடியும்.

படத்தில் தெரிவது Zuckerberg  இன் முகம் பேக்கரவுண்டில் தெரிவது போல் உருவாக்கப்பட்ட QR Codes ஆகும்.

இப்படத்தை QR code  app மூலம் ஸ்மார்ட் போன்களில் ஸ்கான் செய்தால் பேஸ்புக் இணையத்தளத்தை பார்வையிடலாம்.

இத்தளத்தின் மூலம் நீங்கள் விரும்பியவாறு QR code  களை உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணைப்பு - http://www.qrhacker.com/ 

Microsoft released "Bored To Death" HTML5 Free Online Game

Posted On April 17,2012,By Muthukumar



Microsoft IE team released the new animated HTML5 online Game Bored to Death. It supports all major web browsers IE, Chrome, Firefox and Opera. Microsoft previously feleased Cut the Rope online Game for all modern browsers.



According to Micorsoft blog Bored To Death is an arcade style brawler intended as a throwback to arcade games of the past and powered by JavaScript and HTML5.. The game has our bored Marshmallow people running around the playing environment trying to keep themselves from literally being bored to death. Even cooler, a second player can join the game on the same physical keyboard. For those interested in the arcade setup, we’ll be taking the Marshmallow People on the road at events around the US over the coming months to give developers a chance to get hands on with the arcade.

Player1 Controls:

  • W - Move Up
  • S - Move Down
  • D - Move Right
  • A - Move Left
  • F - Punch
  • G - Kick
  • H - Fire

Player2 Controls:

  • Up Arrow - Move Up
  • Down Arrow - Move Down
  • Left Arrow - Move Left
  • Right Arrow - Move Right

உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects

Posted On April 17,2012,By Muthukumar
கடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது சோதனை பதிப்பில் உள்ள மைக்ரோசாப்டின் புதிய இணையதளம் Touch Effects. தொடர்ந்து வேலை செய்து சோர்வாகி இருக்கும் பொழுது இது போன்ற தளங்களுக்கு சென்றால் உங்கள் மனம் புத்துணர்ச்சி அடையும்.
இந்த தளத்தை ஓபன் செய்தால் புள்ளிகளுடன் ஒரு இணையதளம் வரும் அதில் உங்கள் மவுஸ் கர்சரை பயன்படுத்தி க்ளிக் செய்தும், Drag செய்தும் பாருங்கள். அங்குள்ள புள்ளிகளில் நடக்கும் ஜாலத்தை பாருங்கள். 
கீழே உள்ள போட்டோக்களை பாருங்கள்.
உங்களின் மவுசை திரையின் மீது வைத்து அழுத்தி இழுத்தால் அதற்கேற்ப உங்கள் திரை வண்ணமயமாக ஜொலிப்பதை காணலாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் IE உலவிகளில் நன்றாக வேலை செய்கிறது.
இந்த தளத்திற்கு செல்ல - Touch Effects

மௌஸ் இல்லாமல், மௌஸ் கர்ஸரை மூவ் செய்வது எப்ப‍டி?

முதலில் Alt+shift+numlock அழுத்தவும்

அதில் செட்டிங்க்ஸ் அழுத்தவும்

அதில் mouse செலக்ட் பண்ணி அதில் உள்ள செட்டிங்க்ஸ் அழுத்தவும்

மேல் உள்ள படத்தில் உள்ளது போல தேர்வு செய்யவும் பின்னர் ஓகே கொடுக்கவும். மீண்டும் ஓகே கொடுக்கவும். 7,8,9,4,6,1,2,3 இதில் எதனும் ஒன்றை அழுத்தி பிடிக்கவும். டைம்பார் அருகில் ஒரு mouse தெரிவும். அதில் -(minus) அழுத்தினால் அது ரைட் கிளிக் பக்கம் செல்லும் அப்போது 5 அழுத்தி, ரைட் கிளிக் செய்வும். அதில் /(divide) அழுத்தினால் அது left கிளிக் பக்கம் செல்லும் அப்போது 5 அழுத்தினால் அது left கிளிக் செய்வும்௦ 0 அழுத்தி விட்டு எதனும் ஒரு திசை என் அழுத்தவும். அது செலக்ட் செய்வும். numlock அழுத்தினால் அந்த mouse ஆப் ஆய் விடும். மீண்டும் Alt+shift+numlock அழுத்தினால் அது போய்விடும்.

பயர்பாக்ஸ் நம் வசமாக

Posted On April 17,2012,By Muthukumar
அனைத்து பிரவுசர்களிலும் குரோம் மிக வேகமாகச் செயல்படுகிறது என்றாலும், பழக்கத்தின் காரணமாக, பலர் பயர்பாக்ஸ் பிரவுசரையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. இந்த பிரவுசருக்கென தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படும் ஆட் ஆன் தொகுப்புகள், இந்த பிரவுசரைப் பயன்படுத்துவதில் நமக்குப் பல வசதிகளை அளிக்கின்றன. இவற்றை நாம் விரும்பும்படி அமைப்பதும் மிக எளிதாக உள்ளது.
இவை மட்டுமின்றி, அடிப்படையிலேயே, பயர்பாக்ஸ் பிரவுசரை நாம் நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். இந்த வசதிகளைத் தரும் about:config பக்கம் பலர் செல்வதே இல்லை. இது ஏதோ மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பக்கம் என்றே நாம் ஒதுங்கி விடுகிறோம். இது மறைந்திருப்பதற்குக் காரணம், இதில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், பயர்பாக்ஸ் இயக்கத்தினைப் பெரிய அளவில் மாற்றும் என்பதால் தான்.
ஆனால் இந்தப் பக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதும், மீண்டும் அதனைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் மிக எளிது. இந்தப் பக்கத்தில் கிடைக்கும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் நாம் குறிப்பிட்ட மதிப்பினை ஒதுக்கினால், அதற்கேற்ப பயர்பாக்ஸ் பிரவுசர் செயல்படும். இந்த மதிப்பு எண்ணாகவோ, பெயராகவோ, சொல்லாகவோ இருக்கலாம். இவ்வாறு நம் வசதிகளுக்காக நாம் இதில் ஏற்படுத்தக் கூடிய சில மாற்றங்களை இங்கு காணலாம்.
முதலில் இந்த மாற்றங்களைக் கொண்டுள்ள மாறா நிலையில் உள்ள பைலுக்கு ஒரு பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளலாம். அப்போதுதான், ஏதேனும் தேவைப்படாத மாறுதல் ஏற்பட்டு, பயர்பாக்ஸ் வழக்கமாக, நாம் எதிர்பார்ப்பிற்கு மாறாக இயங்கினால், பேக் அப் பைலைக் கொண்டு வருவதன் மூலம், பழைய நிலைக்குக் கொண்டு செல்லலாம். இந்த பைலின் பெயர் prefs.js. இந்த பைல் மூலம் பழைய நிலைக்குச் செல்ல முடியவில்லை என்றால், பிரவுசரை மீண்டும் இன்ஸ்டால் செய்து வழக்கம் போல செயல்படலாம்.
முதலில் about:config பக்கத்திற்கு எப்படிச் செல்வது? பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, அதன் முகவரிக் கட்டத்தில் prefs.js என டைப் செய்திடவும். உடனே எச்சரிக்கை செய்தி ஒன்று கிடைக்கும். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால், வாரண்டி கிடையாது; இதன் இயக்கம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போய்விடும். உங்கள் செயல்பாடு குறித்து நீங்கள் உறுதியாக இருந்தால், தொடரவும் -- என்று இந்த எச்சரிக்கை சொல்லும். அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மனதில் எண்ணிக் கொண்டு, கிளிக் செய்து செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் filter என்று ஒரு கட்டம் கிடைக்கும். இதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த தேவையான கட்டளை வரியைப் பெறலாம். இனி about:config பக்கத்தில் நாம் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களைக் காணலாம்.
1. பிரவுசரை வேகப்படுத்த: பிரவுசரின் வேகத்தை அதிகப்படுத்த ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டது போல செயல்படவும்.
network.http.pipelining: இங்கே true என மாற்றவும்.
network.http.proxy.pipelining: இங்கே true என மாற்றவும்.
network.http.pipelining.maxrequests: இங்கே 8 என மாற்றவும். அடுத்து maxconnections என்பதனைத் தேடிப் பெறவும். இதில் network.http.maxconnections என்பதைப் பெறுவீர்கள். இதனை 96 என மாற்றவும். அடுத்து கிடைக்கும் network.http.maxconnectionsperserver என்பதில் மதிப்பை 32 என மாற்றவும்.
2. ஆண்ட்டி வைரஸ் ஸ்கேன் செய்வதை நிறுத்த: நீங்கள் பெரிய அளவிலான பைலை டவுண் லோட் செய்கையில், அதனை ஸ்கேன் செய்வது, பயர்பாக்ஸ் இயக்கத்தினை தாமதப்படுத்தும். எப்படி இருந்தாலும், டவுண்லோட் செய்த பின்னர் தனியாக அதனை ஸ்கேன் செய்யப் போகிறீர்கள். எனவே டவுண்லோட் செய்கையில் ஸ்கேனிங் செயல்பாட்டினை நிறுத்தலாமே. இதற்கு “scan Whendone” என்பதனைத் தேடிப் பெறவும். இந்த கட்டளை வரி browser.download.manager.scanWhenDone என இருக்கும். இதன் மதிப்பை “false” என மாற்றவும்.
3. பாப் அப்களை டேப்களாக மாற்ற: பாப் அப் விண்டோக்கள் டேப்களாக இயங்க முடியாத நிலையில் இருந்தால், பயர்பாக்ஸ் அவற்றை பாப் அப் பெட்டிகளாகவே நடத்தும். இவற்றைத் தனி டேப்களில் திறக்கும் படி செட் செய்துவிடலாம். இதற்கு newwindow எனத் தேடவும். மூன்று முடிவுகள் வரிகளாகக் கிடைக்கும். இதில் browser.link. open_newwindow.restriction என்ற வரியின் மதிப்பை 0 என மாற்றவும்.
4. ஸ்பெல் செக்: மாறா நிலையில், பயர்பாக்ஸ் பல வரிகள் கொண்ட பாக்ஸ் களில் அமைக்கப்படும் டெக்ஸ்ட்டை மற்றுமே ஸ்பெல்லிங் செக் சோதனைக்கு உட்படுத்தும். இதனை மாற்றி அனைத்து வகை டெக்ஸ்ட் பாக்ஸ்களிலும் ஸ்பெல் செக் மேற்கொள்ள, spellcheckdefault எனக் கொடுத்து தேடவும். layout.spellcheckDefault என்ற கட்டளை வரியின் மதிப்பை 2 என அமைக்கவும்.
5. சர்ச் கட்ட முடிவுகளை புதிய டேப்பில் பெற: நாம் சர்ச் கட்டத்தினைப் பயன்படுத்தி தேடுகையில், முடிவுகள் அதே டேப்பில் கிடைக்கும். இது நாம் விரும்பாத ஒன்று; ஏனென்றால், இந்தப் பக்கத்திலிருந்து உடனடியாக நீங்கள் தேடிய பக்கத்திற்குச் சென்றுவிடுவீர்கள். இதற்குப் பதிலாக புதிய டேப்பில் திறக்கப்பட்டால், அனைத்தும் நாம் பயன்படுத்த அப்படியே கிடைக்கும். இதற்கான செட்டிங்ஸ் அமைக்க, openintab எனக் கொடுத்துத் தேடவும். browser.search.openintab என்ற கட்டளை வரிக்கான மதிப்பை true என அமைக்கவும்.
6. தானாக புக்மார்க்குகளைக் கொண்டு வர: பயர்பாக்ஸ் தானாகவே புக்மார்க்குகளை சேவ் செய்து, இன்னொரு புரோகிராமிற்கு மாற்றுகிறது. இந்த மாறா நிலை ஏற்பாட்டில், இவை வசதியான bookmarks.html என மாற்றப்படாமல், places.sqlite என மாற்றப்படுகிறது. எளிதாக இன்னொரு இடத்திற்கு மாற்ற, autoExportHTML என்று டெக்ஸ்ட் கொடுத்துத் தேடவும். browser. bookmarks.autoExportHTML என்ற கட்டளை வரியின் மதிப்பை true என மாற்றவும்.
7. எக்ஸ்டன்ஷன் இன்ஸ்டலேஷன் தாமதம்: பயர்பாக்ஸ் பிரவுசர் அதன் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களுக்குப் பெயர் பெற்றவை. ஆனால் ஒவ்வொரு முறை ஒரு எக்ஸ்டன் ஷனை இன்ஸ்டால் செய்கையில், இதன் தாமதத்தினைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுள்ளது. இதனை மாற்றி அமைக்கலாம். enable_delay என டைப் செய்து தேடவும். security.dialog_enable_delay என்ற கட்டளை வரி கிடைக்கும். இதன் மதிப்பை 0 என மாற்றவும்.
8. சோர்ஸ் கோட் எடிட்டரில் திறக்க: ஓர் இணைய தளத்தின் சோர்ஸ் கோடினைப் பார்க்க விரும்பி, அதனைத் திறக்க முயற்சிக் கையில், அது பிரவுசரின் பாப் அப் விண்டோவில் காட்டப்படுகிறது. பொதுவாக இதனை ஒரு எடிட்டரில் மட்டுமே மாற்ற முடியும். எனவே இந்த பாப் அப் விண்டோவில் வருவதனைக் காப்பி செய்து, பின் எடிட்டரில் பேஸ்ட் செய்து, மாற்ற முயற்சிப்போம். இதற்குப் பதிலாக, இது நேரடியாக எடிட்டர் புரோகிராம் ஒன்றில் திறக்கப்பட்டால், நம் வேலை எளிதாகும் இல்லையா? இதற்கு view_source.editor என டைப் செய்து தேடினால், view_source.editor. external என்ற கட்டளை வரி கிடைக்கும். இதன் மதிப்பை true என மாற்றவும். அடுத்து கிடைக்கும் view_source.editor.path என்ற வரியில் நீங்கள் விரும்பும் எடிட்டரை அமைக்கவும்.
9. அதிக ஆட் ஆன் தொகுப்புகள்: ஆட் ஆன் தொகுப்புகளை பிரவுசரில் தேடுகையில், ஐந்து தொகுப்புகள் அதிக பட்சமாகக் காட்டப்படும். இது இன்னும் கூடுதலாக இருக்க நாம் விரும்புவோம். இதனை செட் செய்திடலாம். getAddons என டைப் செய்து தேடவும். extension.getAddons.maxResults எனக் கிடைக்கும் கட்டளை வரியில் எத்தனை முடிவுகள் காட்டப்பட வேண்டும் என்பதை அமைக்கலாம். இதனை 10 அல்லது அதற்கும் அதிகமாக அமைக்கலாம்.
10. பேக் ஸ்பேஸ் பட்டன் இயக்க: பயர்பாக்ஸ் பிரவுசரில் பேக் ஸ்பேஸ் பட்டனை அழுத்தி, நாம் பார்த்த இணையப் பக்கங்களில் ஒன்று முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ செல்லும்படி அமைக்கலாம். backspace என டைப் செய்தால் browser.backspace_action என்ற வரி கிடைக்கும். முன் சென்ற பக்கம் வேண்டும் என்றால் இதன் மதிப்பை 0 ஆகவும், பின் சென்ற பக்கம் வேண்டும் என்றால் இதன் மதிப்பை 1 ஆகவும் அமைக்கவும்.

அழகான பொத்தான் (Button) எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம்.

Posted On April 17,2012,By Muthukumar
நம் இணையதளத்திற்கு என்று நம் விருப்பப்படி ஒரு பொத்தான் (Button) உருவாக்க வேண்டும் என்பவர்கள் இதற்காக புதிதாக எந்த மென்பொருளையும் தேடிச்சென்று படிக்க வேண்டாம் சில நிமிடங்கள் அழகான பொத்தான் உருவாக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இணையதளத்திற்கு Button என்ற ஒன்று மிக முக்கியமான ஒன்று அனைவரையும் கவர்ந்து இழுக்கவும், சொல்ல வேண்டிய செய்திகளின் தலைப்பை கொண்டும் நாம் எளிதாக பொத்தான் உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://buttonparty.com/latest
இத்தளத்திற்கு சென்று நாம் Make Your Own Sound Button என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையவும் அடுத்து வரும் திரையில் Button name என்பதில் என்ன பெயரில் Button இருக்க வேண்டுமோ அந்த பெயரை கொடுக்கவும் அடுத்து Button Color என்று இருப்பதில் எந்த வண்ணத்தில் பொத்தான் இருக்க வேண்டுமோ அந்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கவும் அடுத்து Button Sound என்பதில் பொத்தானை சொடுக்கினால் ஏதாவது சத்தம் வர வேண்டும் என்றால் அதையும் தேர்ந்தெடுக்கவும் அடுத்து Button Url என்பதில் Button பெயரை ஆங்கிலத்தில் கொடுக்கவும் அடுத்து இருக்கும் Email Address என்பதில் நம் இமெயில் முகவரியை கொடுத்து Create Button என்பதை சொடுக்கினால் போதும் சில நிமிடங்களில் நாம் வடிவமைத்த அழகான பொத்தான் உருவாக்கப்பட்டு நம் இமெயில் கிடைக்கும்.கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

சிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்

Posted On April 15,2012,By Muthukumar

உங்கள் குழந்தைகள் இணையத்தில் பயன்பெறுவதற்கு மிகச்சிறந்த வலைத்தளங்கள் சிலவற்றை இங்கு தொடர்ச்சியாக தரவிளைகிறோம்.
இதுவரை இத்தளங்கள் பற்றி அறிந்திருக்காவிடின் முதலில் நீங்கள் சென்று பாருங்கள், பின்னர் இத்தளங்களில் உள்ள வசதிகளை புரியும் வகையில் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். நிச்சயம் பயனுடையதாக இருக்கும்.

Funbrain (funbrain.com): கலப்பின கல்வி என சொல்லக்கூடிய பலவகை கல்விகளை கொண்டுள்ள சிறார்களுக்கான பொழுதுபோக்கு தளம்தான் இது. வேடிக்கை விளையாட்டுக்கள் மூலம் கணிதம், ஆங்கில இலக்கணம் போன்ற பாடங்களை இலகுவாக கற்றுக்கொடுக்கிறது. அதோடு  நிக்கெலோடியோன் கிட்ஸ் 'சாய்ஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட Wimpy Kid மற்றும் 'Amelia Writes Again' போன்ற நாட்குறிப்பு புத்தகங்கள், இணைய புத்தகங்கள், காமிக்ஸ் கதைகள் என பலவற்றையும் இங்கு வாசிக்கலாம்.
சிறார்களுக்கென அகராதிகள், இணையத்தள இணைப்புக்களும் வினாடி வினாக்கள் கூட இங்கே காணலாம். அதுமட்டுமல்லாமல் தங்களது சிறார்களை எப்படி கவனிப்பது எப்படி பாடங்களை சொல்லிக்கொடுப்பது போன்ற விளக்கங்களுடன் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் என தனியே உதவிகளும் உள்ளது. ஆக உங்களது சிறார்களின் அறிவுத்திறனை வளர்க்கவேண்டுமாயின் இத்தளத்தை நாடுங்கள்.
இணைப்பு:http://www.funbrain.com/

ரூபாய் 2,500 மதிப்புள்ள WinX DVD Copy Pro மென்பொருள் முற்றிலும் இலவசமாக


Posted On April 14,2012,By Muthukumar
ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி Digiarty நிறுவனம் DVD Copy Pro என்ற மென்பொருளை முற்றிலும் இலவசமாக வாசகர்களுக்கு வழங்குகிறது. வழக்கமாக இந்த மென்பொருளின் விலை ரூபாய் 2500 ஆகும். ஆனால் வரும் 16 Apr தேதிக்கு முன்னர் இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருள் மூலம் DVD இருந்து DVD காப்பி செய்து கொள்ளலாம். DVD இல இருந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை தனித்தனியாக பிரித்தெடுக்கலாம். DVD யை ISO இமேஜாக மாற்றலாம். மற்றும் பல வசதிகள் உள்ள இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே தொடருங்கள்.

முதலில் இந்த லிங்கில் www.winxdvd.com/giveaway சென்று சலுகை தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் சில முட்டைகள் காணப்படும் அதில் ஒவ்வொரு முட்டையாக கிளிக் செய்து சரியான  முட்டையில் மறைந்து இருக்கும் DVD Copy Pro மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் செய்தவுடன் அதில் உள்ள லைசன்ஸ் கீயை காப்பி செய்து இதனை இன்ஸ்டால் செய்யும் பொழுது கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

சனி, 14 ஏப்ரல், 2012

Google Chrome20.0.1096 Dev released

Posted On April 14,2012,By Muthukumar


Google Chrome is a popular web browser that combines a minimal design with sophisticated technology to make the web faster, safer, and easier. Now Google update chrome dev channel 20.0.1096 with some bug fixed.



  • Updated V8 - 3.10.0.5
  • file: downloads allowed again.
  • Enable the Chrome To Mobile page action for users with compatible registered devices.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்தை ஆன்லைனில் கண்டறியும் வசதி



Posted On April 13,2012,By Muthukumar
இந்தியாவின் மிகப்பெரிய லாபகரமாக இயங்கி கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே தினமும் 11,000 ரயில்களை இயக்கி கொண்டு உள்ளது. இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய வசதிகளை அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகபடுத்தும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே துறை தொழில்நுட்ப மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இனி பயணிகள் ஒரு குறிப்பிட்ட ரயில் சரியாக எங்கு சென்று கொண்டு இருக்கிறது என்று அறிய முடியும்.  
இந்த வசதியின் மூலம் ஒரு ரயில் கடந்து வந்த கடைசி இரண்டு ரயில் நிலையங்களையும், மற்றும் அடுத்த ரயில் நிலையத்திற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவு உள்ளது இன்னும் எவ்வளவு நேரத்தில் அந்த ரயில் நிலையத்தை அடையும் போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். 

இந்த தளத்திற்கு சென்று நீங்கள் ட்ராக் செய்ய விரும்பும் ரயிலின் எண் அல்லது ரயிலின் பெயர் அல்லது குறிப்பிட்ட இரண்டு ரயில் நிலையங்களை குறிப்பிட்டால் போதும் அந்த ரயில் இருக்கும் இருப்பிடம், கடந்த இரு நிலையங்கள், அடுத்த இரு நிலையங்கள் போன்ற விவரங்களை பார்த்து கொள்ளலாம்.
இந்த வசதி பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இன்னும் பீட்டா(சோதனை) நிலையில் தான் உள்ளதேஹு. ஆதலாம் சில பிழைகள் ஏற்ப்படலாம். 
இந்த தளத்திற்கு செல்ல - www.trainenquiry.com/searchtrain.aspx

ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்தை ஆன்லைனில் கண்டறியும் வசதி



Posted On April 13,2012,By Muthukumar
இந்தியாவின் மிகப்பெரிய லாபகரமாக இயங்கி கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே தினமும் 11,000 ரயில்களை இயக்கி கொண்டு உள்ளது. இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய வசதிகளை அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகபடுத்தும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே துறை தொழில்நுட்ப மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இனி பயணிகள் ஒரு குறிப்பிட்ட ரயில் சரியாக எங்கு சென்று கொண்டு இருக்கிறது என்று அறிய முடியும்.  
இந்த வசதியின் மூலம் ஒரு ரயில் கடந்து வந்த கடைசி இரண்டு ரயில் நிலையங்களையும், மற்றும் அடுத்த ரயில் நிலையத்திற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவு உள்ளது இன்னும் எவ்வளவு நேரத்தில் அந்த ரயில் நிலையத்தை அடையும் போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். 

இந்த தளத்திற்கு சென்று நீங்கள் ட்ராக் செய்ய விரும்பும் ரயிலின் எண் அல்லது ரயிலின் பெயர் அல்லது குறிப்பிட்ட இரண்டு ரயில் நிலையங்களை குறிப்பிட்டால் போதும் அந்த ரயில் இருக்கும் இருப்பிடம், கடந்த இரு நிலையங்கள், அடுத்த இரு நிலையங்கள் போன்ற விவரங்களை பார்த்து கொள்ளலாம்.
இந்த வசதி பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இன்னும் பீட்டா(சோதனை) நிலையில் தான் உள்ளதேஹு. ஆதலாம் சில பிழைகள் ஏற்ப்படலாம். 
இந்த தளத்திற்கு செல்ல - www.trainenquiry.com/searchtrain.aspx

மாற்று இணையதளங்களை தேட!


Posted On April 13,2012,By Muthukumar
ஒரே மாதிரியான இணையதளங்களை தேட உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன.இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள தளம் வெப்சைட்ஸ்லைக்.ஆர்ஜி.
குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை இதன் தேடல் கட்டத்தில் சமர்பித்தால் அந்த தளம் போலவே உள்ள இணையதளங்களை இது தேடித்தருகிறது.எந்த ஒரு தளத்திற்கும் தொடர்புடைய அல்லது அதற்கான மாற்று தளங்கள் தேவைப்பட்டால் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தளங்களுக்களூக்கான மாற்று இணையதளங்களை தன்னகத்தே கொண்டிருப்பதாக பெருமைப்பட்டு கொள்ளும் இந்த தளம் மற்ற எந்த ஒரே மாதிரி தளங்களை தேடித்தரும் இணையதளத்தையும் விட துல்லியமான முடிவுகளை தருவதாகவும் தெரிவிக்கிறது.
கூகுல் துல்லியமான தேடலுக்கு பிரத்யேகமான உத்தியை பின்பற்றுவது போல ஒரே தனமையை கொண்ட தளங்களை தேடித்தருவதற்கான உத்தி இருப்பதால் இதனை நம்பிக்கையோடு இந்த தளம் சொல்கிற‌து.
தேவையான மாற்று தளங்களை தேடிப்பார்ப்பதோடு இங்கு ஏற்கனவே தேடிய தள‌ங்களையும் ஒரு பார்வை பார்க்கலாம்.இது வரை தேடப்பட்ட தளங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.புதிய இணையதள‌ங்களையும் எதிர்பாராத இணையதலங்களையும் அறிமுகம் செய்து கொள்ள இந்த பட்டியல் சுவாரஸ்யமான வழி.
இணையதள முகவரி;http://www.websiteslike.org/

குழந்தைகள் குதுகலமாக வரைந்துமகிழ

Posted On April 13,2012,By Muthukumar
விடுமுறை விட ஆரம்பித்துவிட்டார்கள். குட்டி குழந்தைகள் இனி வீட்டில் சும்மா இருக்கமாட்டார்கள்.விதவிதமாக சுவரில் படங்களை வரைந்துவைப்பார்கள்.அவர்கள் சுவரில் விதவிதமாக படங்களை வரையாமல் கணிணியில் வரைய இந்த சின்ன சாப்ட்வேர் உதவும்.20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஓப்பன் புக் என்னும் டேபை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள படத்தை தேர்வு செய்து அருகில் உள்ள டிக் மார்க்கை கிளிக் செய்யுங்கள்.
புகைப்படம் ரெடி.இப்போது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நிறத்தை நிரப்பவும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
நீங்கள் வண்ணங்களை நிரப்ப உங்களுக்கு பக்கெட் டூல் .கிரையான் டூல்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் Songs என்னும் டேபை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள 6 பாடல்களில் எதை கிளிக் செய்கின்றோமோ அதற்கேற்ப பாடல் நமது கர்சர் மூவ்க்கு ஏற்ப ஒலிக்க ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு பாடலுடன் படம் வரைவது மகிழ்ச்சியை அளிக்கும்.
இதில் ஸ்டாம்ப் டூலும் உள்ளது. விதவிதமான ஸ்டாம்ப் கொண்டுவருவதுடன் விதவிதமான அளவிலும் கொண்டுவரலாம்.
விலங்குகள் என எடுத்துக்கொண்டால் விதவிதமான விலங்குகள் உள்ளது.ஒவ்வொன்றையும் கலர்கொடுத்து மகிழலாம்..அதைப்போல ஏஞ்சல் என எடுத்துக்கொண்டால் விதவிதமான தேவதைகள் படங்கள் கிடைக்கும். அனைத்தையும் கலர்கொடுத்து மகிழலாம். சேமிக்கலாம்.பிரிண்ட் எடுத்துகொள்ளலாம்.அப்புறம் என்ன - குழந்தைகளுக்கு டவுண்லோடு செய்து விளையாட கொடுங்கள.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.;


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

அன்பை தெரிவிக்க ஒரு இணைய‌ விண்ணப்ப படிவம்

Posted On April 13,2012,By Muthukumar
இந்த தளத்தை பற்றி அறிவதற்கு முன்பாக உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் ரீவைன்டு செய்து கொள்ளுங்கள்.வாழ்கையில் யாருக்கு நீங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள் என்று யோசித்து பாருங்கள்.அதாவது யார் உங்கள் மீது அதிக தாக்கம் செலுத்தியுள்ளனர் என்று நினைத்து பாருங்கள்.
யாரை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள்,உயர்வாக கருதுகிறீர்கள் என்றெல்லாம் யோசித்து பார்த்து கொள்ளுங்கள்.
காரணம் இந்த தளம் உங்கள் வாழ்வில் உள்ள இத்தகைய நபர்கள் மீதான உங்கள் அன்பை பகிர்ந்து கொள்வதற்கானது.
நீங்கள் யாரை மிகவும் நேசிக்கிறீர்களோ அவர்களிடம் அதனை தெரிவியுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் நாளை என்பது இல்லாமலேயே போய்விடலாம் என்பதால் இன்றே உங்கள் அபிமானத்தை சொல்லி விடுங்கள் என்று அச்சுறுத்துவது போலவும் சொல்கிறது.
இந்த எச்சரிக்கை கொஞ்சம் சோகமயமாக அமைந்தாலும் இந்த தளம் தூண்டுகோளாக அமையும் விஷயம் கொஞ்சம் அற்புதமானது.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்கையில் யாரை முக்கியமாக கருதுகின்றனறோ அவர்கள் மீதான அன்பையும் பாதிப்பையும் பகிர்ந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
சாதனையாளர்கள் மற்றும் நட்சத்திரங்கள் பேட்டிகளின் போது தங்கள் வாழ்கையில் மாற்றியமைத்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்வது உண்டல்லவா?
அதே போல கூட நமது வாழ்க்கையிலும் முக்கியமான நபர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.பள்ளி பருவத்தில் நமது திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்த ஆசிரியராக,நண்பன் போல பழகி தோளில் கைப்போட்டு நல்ல விஷயங்களை அடையாளம் காட்டிய சகோதரனாக,இலக்கிய உலகிற்கான ஜன்னலை திறந்து விட்ட நண்பனாக,அன்பின் மொழியை கற்றுத்தந்த ஸ்நேகிதியாக,பொறுமையின் அருமையை உபதேசித்த சித்தப்பா என வாழ்க்கையில் நம்மை பாதித்தவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
கொஞ்சம் யோசித்தால் இப்படி நமக்கான குனங்களையும் தருணங்களையும் சுட்டிக்காட்டிய அன்பான மனிதர்கள் பலர் இருக்கலாம்.இவர்கள் மீதான நமது அன்பையும் நன்றி பெருக்ககையும் ஏன் மனதுக்குள் பூட்டி வைக்க வேண்டும்.அவர்களிடமே பகிர்ந்து கொண்டால் என்ன?
ஆனால் இது அத்தனை சுலபமானது அல்ல தான்.திடீரென ஒருவரிடம் போய் அவர்கள் மீதான அபிமானத்தை வெளிப்படுத்த தயக்கமாக இருக்கலாம்.ஆனால் சொல்லமலே விட்டு விட்டால் அது இழப்பு தானே.அதோடு இதற்கான நேரம் வரும் என்றும் காத்திருக்க முடியாதே!.
இந்த தளம் சொல்வது போல இத்தகைய அன்பை ஒரு எஸ் எம் எஸ் மூலமோ ஒரு இமெயில் மூலமோ தெரிவிப்பது மிகவும் செயற்கையாக இருக்கலாம்.டிவிட்டரில் சொல்ல்வது மிகவும் பகிரங்கமாகி விடலாம்.அதனால் தான் நம்மை பாதித்தவர்கள் மீதான அன்பையும் நேசத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான அழகான வழியை இந்த தளம் உருவாக்கியுள்ளது.
யாருக்கு அன்பை சொல்லப்போகிறோம் என்பதை மட்டும் தீர்மானித்து கொண்டால் போதும் மற்ற விஷய‌ங்களுக்கு எல்லாம் இந்த தள‌மே வழி செய்கிறது.
இதற்காக‌ என்றே விண்ணப்ப படிவம் போன்ற ஒரு படிவம் இருக்கிறது.அதில் யாருக்கு அன்பை சொல்லப்போகிறோமோ அவரது பெயரை குறிப்பிட்டு விட்டு அதன் கிழே உள்ள கட்டங்களில் நமது உணர்வுகளை தெரிவிக்கலாம்.
உள்ளத்து உணர்வை தெரிவிக்க வார்த்தைகளுக்கும் வாக்கியங்களுக்கும் தடுமாற நேராமல் சுலபமாக அவற்றை தெரிவிக்கும் வகையில் வரிசையாக இந்த கட்டங்கள் அமைந்துள்ளன.
முதல் கட்டம் நான் என்று ஆரம்பமாகிற‌து.அதில் நான் ஏன் உங்களை முக்கியமாக கருதுகிறேன் என்ற‌ விவர‌த்தை தெரிவித்து விட்டு நீங்கள் என துவங்கும் அடுத்த கட்டத்தில் அவர்கள் நம் மீது தாக்கம் செய்த வித்ததை குறிப்பிடலாம்.
நாம் என துவங்கும் அடுத்த கட்டத்தில் இருவரும் இணைந்து அனுபவித்த உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம்.
தொடர்ந்து மறக்க முடியாதவை மற்றும் நன்றிக்குறியவற்றை பகிர்ந்து கொள்ள்லாம்.அப்படியே அவர்களிடம் பிடித்தவற்றையும் நேசிப்பவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்.
பக்கம் பக்கமாக் எழுதினாலும் சொல்ல முடியாதவற்றை இந்த படிவத்தை பூர்த்தி செய்வது மூலம் வெளிப்படுத்தி விடலாம்.
எல்லாவ‌ற்றையும் முடித்து விட்டு உங்கள் அன்புக்குறிய என்று கையெசுத்திட்டு உரியவருக்கு அனுப்பி வைக்கலாம்.
அன்பை சொல்வது நல்லது தானே.
இணையதள முகவ‌ரி;http://www.wyah.com/

புதன், 11 ஏப்ரல், 2012

கன‌வுகளை புரிந்து கொள்ள‌ ஒரு இணையதளம்!

Posted On April 12,2012,By Muthukumar

எல்லோரும் கனவு காண்கிறோம்.அவற்றை எல்லோரும் பெரும்பாலும் மறந்து போய் விடுகிறோம்.இதற்கு மாறாக கனவுகளை குறித்து வைத்து கொண்டால் எப்படி இருக்கும்?அப்படியே கனவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு கனவுகளுக்கான பொருளை தெரிந்து கொண்டால் எப்படி இருக்கும்?
‘டிரீம் சோன்’ இணையதளம் இந்த இரண்டையும் சாத்தியமாக்குகிறது.இந்த இரண்டும் கலந்திருப்பதே இந்த தளத்தை சுவாரஸ்யமாக்குகிறது.
காரணம் கனவுகளை குறித்து வையுங்கள் என்றால் பலருக்கு அதில் ஆர்வம் இருக்காது.ஆனால் நேற்று கண்ட கனவு உணர்த்துவது என்ன என்பதை அறிந்து கொள்வதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் இருக்கும்.கனவின் பொருளை அறிய அதனை உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்ள முன் வருவார்கள்.
இந்த நோக்கத்துடன் தான் டிரீம் சோன் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அடிப்படையில் இந்த தளம் எளிமையானது.
நேற்று இரவு நீங்கள் கண்ட கனவு என்ன? என்பதை இந்த தலத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.இதற்காகவே பேஸ்புக் கட்டம் போல ஒரு கட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் கனவில் கண்ட காட்சியை விவரித்து விட்டு அந்த கனவின் வகையையும் குறிப்பிட வேண்டும்.இதற்கான பட்டியலும் அருகிலேயே இருக்கிறது.
கனவினை பகிர்ந்து கொண்ட பின் சக உறுப்பினர்கள் அதனை படித்து பார்த்து தாங்கள் அறிந்த வகையில் கனவிற்கான விளக்கத்தை வழங்குவார்கள்.விளக்கம் அளிப்பவர்கள் கனவுகளை அலசி ஆராய்வதில் உளவியல் புலிகளாக இருக்கலாம்,அல்லது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே விளக்கம் தருபவராக‌வும் இருக்கலாம்.
எது எப்படியோ நேற்று கண்ட கனவின் பொருள் தெரியாமல் குழம்பித்தவிக்காமல்,அதற்கான அர்த்தத்தை யாரிடம் கேட்பது என தடுமாறாமல் கனவின் பொருளை அறிந்து கொள்ளலாம்.
நாம் கண்ட கனவில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டுமா என்ன?,மற்றவர்கள் கண்ட கனவுகளையும் படுத்து பார்க்கலாமே என்று நினைத்தால் தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கனவுகளையும் கூடவே அவற்றுக்கு மற்றவர்கள் அளித்த விளக்கங்களையும் படித்துப்பார்க்கலாம்.
அந்த ஆர்வம் வந்து விட்டால் இந்த தளம் கனவுகளின் பொக்கிஷமாக காட்சி தரும்.
சமீபத்தில் பகிர்ந்து கொண்ட கனவுகள்,பிரபலமான கனவுகள் ஆகிய தலைப்புகளில் கனவுகளை படிக்க முடிவதோடு கனவுகளை வகைகளுக்கு ஏற்ற தலைப்புகளின் கீழும் கனவுகளை படிக்கலாம்.
விசித்தரமானது முதல் வியப்பூட்டக்கூடியது வரை வித‌விதமான கனவுகளை படிக்கும் போது மனித மனதின் ஆழத்தையும் விசாலத்தையும் தெரிந்து கொள்ளலாம்.அப்படியே கனவுகளுக்கான விளக்கங்களை படித்துப்பார்க்கும் போது உளவியல் நோக்கில் அவற்றை எப்படி புரிந்து கொள்வது என்பதற்கான குறிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆர்வமும் அனுபவமும் நாமும் கூட பிறரது கனவுகளை பகுத்தாய முற்பட வைக்கலாம்.அந்த ஆர்வம் ஏற்பட்டால் இன்னும் விளக்கப்படாத கனவுகளின் பட்டியலை பார்க்கலாம்.
அதிக அளவில் கனவுகளுக்கு விளக்கம் அளித்த முன்னிலை பெற்றவர்களி பட்டியலும் இதற்கு ஊக்கம் அளிக்கிறது.
ஆக இந்த தளத்தில் கனவுகளை பகிர்ந்து கொள்ளலாம்,கனவுகளுக்கு விளக்கம் தரலாம்.
விரும்பினால் கனவு டைரியை துவங்கி தினம் காணும் கனவுகளை குறித்து வைக்கவும் செய்யலாம்.
நாம் காணும் கனவுகளில் 90 சதவீதம் மறக்கப்பட்டு விடும் நிலையில் கனவுகளை பகிர்ந்து கொண்டு அவற்றை சேகரித்து வைப்பது மிகவும் அவசியமாகிறது என இந்த தளத்திற்கான முன்னுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த வகையில் கனவுகளை பகிர்ந்து கொண்டு அதனை புரிந்து கொள்வதற்கான இருப்பிடமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனவுகளை பகுப்பாய்வதற்கான உளவியல் இயந்திரமாக விளங்க வேண்டும் என்ற நோக்கமும் கொண்டுள்ள இந்த தளம் இதில் பாய்ந்தோடு கனவுகளின் பிரவாகத்தில் மனித குலத்தின் ஆழ் மன செயல்பாட்டை புரிந்து கொள்ளவும் வழி வகுக்கும் என்று நம்புகிறது.
உளவியல் அமைப்பின் இணையதளம் போல உள்ள இந்த இணையதளத்தை இரண்டு நண்பர்கள்(கனவுகளில் ஆர்வம் கொண்ட இரு நண்பர்கள்.) உருவாக்கியுள்ளனர் என்பது கொஞ்சம் வியப்பானது தான்.
கனவுகளை பகிரவும் அவறை மற்றவர்களால் விளக்கம் தரப்படவும் வாருங்கள் என்று அழைப்பும் விடுக்கும் இந்த தளம் கனவுகளை புரிந்து கொளவதற்கும் விளக்கம் தருவதற்குமான உளவியல் பால பாடத்தையும் சுருக்கமாக வழங்குகிறது.
அருமையான தளம்.தூக்கத்தில் நாம் மேற்கொள்ளும் புதிரான பயணங்களை பகிர்ந்து கொள்ளவதற்கான இடமாக விளங்கும் இதில் உள்ள ஒரே குறை கனவுகளுக்கான மந்திர சாவியை தந்து இன்டர்பிரடேஷன் ஆப் டிரீம்ஸ் என்னும் புத்தகத்தின் மூலம் வழங்கிய உளவியல் தந்தை சிமன்ட பிராய்டு பற்றிய எந்த குறிப்பும் இல்லாததே!
இணையதள முகவரி;http://dreamdoze.com/

புகைப்படங்களில் சிலைட்ஷோ உருவாக்க


Posted On April 11,2012,By Muthukumar
நமது புகைப்படங்களில் விதவிதமான வீடியோ எபெக்ட் கொண்டுவர பலவிதமான சாப்ட்வேர்கள் உள்ளன. ஆனால் சிறிய அளவில் நிறைந்த பலன்கள் கொடுக்கக்கூடியதாக இந்த சாப்ட்வேர் உள்ளது. உங்கள் குழந்தைகள் கூட இந்த சாப்ட்வேர் மூலம் சிலைட் ஷோ உருவாக்க்லாம். 2 எம.பி. கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய  இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் வலதுகை கீழ்புறம் + குறியீட்டுடன் புகைப்படம் இருக்கும். அதனை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.அதன் கீழேயே இசைகுறியீட்டுடன் உள்ளதை தேர்வு  செய்து உங்கள் புகைப்படத்திற்கு என்ன பாடல்வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள்.
Moleskinsoft SlideShow Maker screenshot 1 - This is the main window of Moleskinsoft SlideShow Maker, where you will be able to add the images of interest.
ஒவ்வொரு புகைப்படத்திற்கும் புகைப்படம் தோன்றும் நேரத்தை நாமே நிர்ணயிக்கலாம்.
இதில் உள்ள Visual effects கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் மொத்தம் ஆறுடேப்புகள் உள்ளன.புகைப்படத்திற்கு பெயர் கொண்டுவருவதில் இருந்து  தேவையான எபெக்ட்களை நாம் எடுத்துவரலாம்.Framing வேண்டிய அளவில் கொண்டுவரலாம்..
Moleskinsoft SlideShow Maker screenshot 2 - Moleskinsoft SlideShow Maker will also enable you to personalize your slideshows with a few visual effects.
Text கொண்டுவர:-
Brightness கொண்டுவர:-
Moleskinsoft SlideShow Maker screenshot 5
Colour Effects :-கொண்டுவர
Moleskinsoft SlideShow Maker screenshot 6
ஒவ்வொரு ப்ரேமும் தோன்றும் நேரம் கொண்டுவர:-
Moleskinsoft SlideShow Maker screenshot 7
நாம் அனைத்து பணிகளும் செய்துமுடி த்தவுடன் இதிலிருந்து நேரடியாக சிடியாக மாற்றும் வசதியும் இதில் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்...

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

நீங்களூம் ரீமிக்ஸ் செய்யலாம்.

Posted On April 10,2012,By Muthukumar
பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெயரையே கோலிவுட் இசையமைப்பாளர்கள் கெடுத்து வைத்துள்ளனர்.
ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.ரீமமிக்ஸ் செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சொல்லும் இந்த கட்டுரை இசை உலகில் மேக்னெடிக் டேப் மூலம் அறிமுகமான தொழில்நுட்பமே ரீமிக்ஸ் கலைக்கும் வாய்ப்பளித்ததாக தெரிவிக்கிறது.
இசையில் மட்டும் அல்ல கலையிலும் இலக்கியத்திலும் கூட ரீமிக்ஸ் இருப்பதாக இந்த கட்டுரை சொல்கிறது.
இவை ஒரு புறம் இருக்க இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்வது என்பது வேறு ரசிகர்கள் ரீமிக்ஸ் செய்வது என்பது வேறு.ரீமிக்ஸ் மூலம் ரசிகர்களூக்கு தாங்கள் ரசிக்கும் பாடல்கள் மீது கூடுதல் உரிமை கிடைக்கிறது.
இந்த கருத்தில் உங்களூக்கும் உடன்பாடு இருந்து நீங்களும் ரீமிக்ஸ் செய்ய விரும்பினால் மாஷ்ரூம் தளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
மாஷ்ரூமில் இசைப்பிரியர்கள் தாங்கள் விரும்பும் எந்த பாடலையும் இஷ்டம் போல ரீமிக்ஸ் செய்யலாம்.
இதற்கு அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த பாடலில் யூடியூப் கோப்பை பதிவேற்றுவது மட்டும் தான்.இதற்கும் கூட கஷடப்பட வேண்டாம்.பாடலில் யூடியூப் முகவரியை சமர்பித்தாலே போதும்.
அதன் பிறகு அந்த பாடலில் விரும்பிய ஒலிகளை சேர்த்து அவற்றின் அளவை ஏற்றி இறக்கி முற்றிலும் புதிய பாடலை உருவாக்கி கொள்ளலாம்.இப்பைட் ரீமிக்ஸ் செய்த பாடலை இந்த தளத்திலேயே கேட்டி ரசிப்பதோடு அதனை பேஸ்புக் டிவிட்டர் வழியே நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://mashroom.fm/
———
இசை தொடர்பான இன்னொரு சுவாரஸயமான சேவை ;http://cybersimman.wordpress.com/2012/04/02/songs-3/

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்




 சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

Dailymotion

Yahoo
மேலே உள்ளது நண்பர்கள்  பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் பேஸ்புக்கில் வந்த செய்தி. இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்,


எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும். அதாவது உங்கள் பேஸ்புக் கணக்கை அந்த அப்ளிகேசன் அணுகுவதற்கு அனுமதி கேட்கும். மேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள்.

This app may post on your behalf, including videos you watched, films you watched and more.
அதாவது  நீங்கள் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் இருந்து செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும். இதன் மூலம் Spam செய்திகளை அனுப்புவதற்கு நீங்களே அனுமதி அளிக்கிறீர்கள்.

அவ்வாறு  க்ளிக் செய்த பின் அது அந்த தளத்திற்கு சென்றுவிடும். அங்கு நீங்கள் எதை க்ளிக் செய்கிறீர்களோ அவையும், சில சமயம் க்ளிக் செய்யாதவைகளும் நீங்கள் பார்த்ததாக உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிடும்.

இதனை  தவிர்ப்பது எப்படி?

இவற்றிலிருந்து தவிர்க்க வேண்டுமெனில் இது போன்ற சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். தவறுதலாக க்ளிக் செய்தாலும் Dailymotion, Yahoo போன்ற Third-Party Applications-களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே நீங்கள் க்ளிக் செய்து அனுமதி கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த அப்ளிகேசன்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்கிவிடுங்கள்.

அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account settings என்பதை க்ளிக் செய்து, இடது புறம் உள்ள Apps என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திவரும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும்.


மேலே உள்ள Dailymotion, Yahoo என்பதற்கு பக்கத்தில் உள்ள X குறியீடை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள். இது போன்ற அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுவது சிறந்தது.

என் பரிந்துரை: எக்காரணம் கொண்டும் Third Party Application-களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சிறு வேண்டுகோள்: இது பேஸ்புக்கில் தற்போது பரவிவரும் முக்கிய பிரச்சனை என்பதால் தாங்கள் பேஸ்புக்கில் இதனை பகிர்ந்தால் பலர் இதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.




தட்டச்சு செய்யும் வார்த்தைகளை ஒலி கோப்பாக வாசிக்கும் பயனுள்ள தளம்.

Posted On April 10,2012,By Muthukumar
தட்டச்சு செய்த வார்த்தைகளை படிக்க நாளும் ஒரு இலவச மென்பொருளும் பல இணைய தளங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளம் நாம் தட்டச்சு செய்த வார்த்தையை அழகான தரமான ஆடியோவாக மாற்றி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நம் பெயரை அல்லது நம் நிறுவனத்தின் பெயரை வெளிநாட்டினர் படித்தால் எப்படி இருக்கும் கூடவே நாம் பேசும்விதமும் அவர்கள் வார்த்தையை உச்சரிக்கும் விதமும் சற்றுவித்தியாசமாக இருக்கும். இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் நாம் தட்டச்சு செய்த வார்த்தைகளை ஆண் குரலில் படித்தால் எப்படி இருக்கும் என்றும் பெண் குரலில் படித்தால் எப்படி இருக்கும் என்றும் அழகாக படித்துக் காட்டுகிறது.
இணையதள முகவரி : http://www.abc2mp3.com/convert.php
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Text to Convert என்பதில் நாம் எந்த வார்த்தையை ஒலி கோப்பாக மாற்ற வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுக்க வேண்டும் அதிகபட்சமாக 2000 வார்த்தைகள் வரை தட்டச்சு செய்யலாம். தட்டச்சு செய்து முடித்தபின் Email Address என்பதில் நம் இமெயில் முகவரியை கொடுக்க வேண்டும். இமெயில் மூலம் தான் நமக்கு ஆடியோ கோப்பு கிடைக்கும் அதனால் சரியான இமெயில் முகவரியை கொடுக்க வேண்டும். அடுத்து இருக்கும் Voice to Use என்பதில் ஆண் குரல் அல்லது பெண் குரல் யார் குரல் வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து Speed என்பதில் வார்த்தைக்கான வேகம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்து பின் Sucrity image இல் இருக்கும் வார்த்தையை தட்டச்சு செய்து Submit என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். நாம் கொடுத்த வார்த்தைகள் ஒலி கோப்புகளாக மாற்றப்பட்டு நமக்கு இமெயில் அனுப்ப்பட்டுவிடும். கண்டிப்பாக இந்தத்தளம் எழுத்து வடிவ கோப்புகளை ஒலி கோப்புகளாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பொதுமக்கள்,குழந்தைகளின் காதுக்கு இனிய ஒலியைத் தரவிரக்கலாம்.
20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.
மடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம்
உங்கள் தளத்திற்கு நிமிடத்தில் கவிதை எழுதி கொடுக்கிறது ஒரு தளம், ஆடியோவுடன் கவிதையை கேட்கலாம்.
 

சனி, 7 ஏப்ரல், 2012

படம் ஒன்றே போதும்!

Posted On April 07,2012,By Muthukumar
நீங்கள் `பேஸ்புக்'கில் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் அழகான, கவரக்கூடிய படத்தை அதில் இடம்பெறச் செய்யுங்கள். இதுபோன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர், பிறரைப் பற்றிப் படித்துப் பார்க்காமல் அவர்களின் படங்களைக் கொண்டே ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர் என்கிறது ஒரு புதிய ஆய்வு.
இந்த ஆய்வை மேற்கொண்ட ஓஹையோ ஸ்டேட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இயல்பான விஷயங்களைவிட, எதிர்மறையான செய்திகளில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
`பேஸ்புக்'கில் காணப்படும் ஒரு புகைப்படமே அவரைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ள பார்வையாளர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. அவர்களுக்கு எந்த வார்த்தைகளும் தேவைப்படுவதில்லை என்கிறார்கள்.
இது தொடர்பான ஓர் ஆய்வில், சக மாணவர் ஒருவரின் புகைப்படத்தை `பேஸ்புக்கில்' பார்த்த சில கல்லூரி மாணவர்கள், அவரைத் `தம்பட்டம் அடிப்பவர்' என்று கிண்டல் செய்தனர். ஆனால் அந்த மாணவரின் புரொபைலில், `பிறருடன் கலந்து பழகுவதில் ஆர்வமில்லாதவர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு படம் வழக்கத்துக்கு மாறானதாகவோ, ஏதாவது எதிர்மறை அம்சத்தைக் காட்டுவதாகவோ இருந்தால் மட்டுமே அவரைப் பற்றிய புரொபைலை படித்து, அவர் எப்படிப்பட்ட நபர் என்று தெரிந்துகொள்ள மற்றவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
``சமூக வலைத்தளங் களில் ஒருவரைப் பற்றிய கருத்தை உருவாக்கும் அடிப்படையான விஷயமாகப் புகைப்படங்கள் உள்ளன என்பது எங்கள் ஆய்வின் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியிருக்கிறது'' என்கிறார், ஆய்வுக்குத் தலைமை வகித்த பிராண்டன் வான் டெர் ஹெய்டு.

ஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி?

Posted On April 07,2012,By Muthukumar
மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருப்பது ஜிமெயில். அடிக்கடி தரப்படும் புதிய வசதிகள், அதிக அளவிலான ஸ்டோரேஜ், அனுப்பும் பைல் களின் அதிகப்படியான கொள்ளளவு என அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர் களின் விருப்பங்களின் அடிப்படையில் புதிய வசதிகளை வடிவமைத்துத் தருவது இதன் சிறப்பு.
ஒருமுறை மட்டுமே கூடப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளை ஜிமெயில் தன் நினைவகத்தில் வைத்துக் கொண்டு, அடுத்த முறை அந்த முகவரியின் முதல் சில எழுத்துக்களை டைப் செய்தவுடனேயே, முழு முகவரியினைக் காட்டும். இரு வகையான முகவரிகளை ஜிமெயில் நினைவில் கொள்கிறது. முதலில் நாம் இதன் முகவரி ஏட்டில் பதிந்து வைத்திடும் முகவரிகள் -- தனி நபர்கள், நிறுவனங்கள், மையங்கள், வலைத்தளங்கள் போன்றவை. இவை எல்லாம் நமக்கு எப்போதும் தேவை இருக்கும் என நாம் நம்முடைய முகவரி ஏட்டில் பதிந்து வைக்கிறோம். மற்றவை எல்லாம் நாம் மின்னஞ்சல் அனுப்பும் முகவரிகள். இவற்றை நாம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி பின்னர் பயன் படுத்தாமலேயே விட்டுவிடுவோம். ஆனால் ஜிமெயில் இதனை நினைவில் வைத்து, அதற்கான எழுத்துக்களை டைப் செய்த வுடன் நமக்கு நினைவூட்டும்.
பலவழிகளில் சிந்தித்தால் இது நல்லதொரு உதவியாகவே தெரியும். ஆனால் சில வேளைகளில் இது நமக்கு எரிச்சலையும் தரும். எடுத்துக்காட்டாக, முகவரி ஏட்டில் நாம் பதிந்து வைத்து, நாம் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்பும் ஒருவரின் முகவரி யில் உள்ள முதல் இரு எழுத்துக்களில், இன்னொருவரின் முகவரியும் தொடங்கி இருக்கும். இந்த இரண்டாவது நபர் நமக்குத் தேவை இல்லாதவர். என்றோ ஒருநாள் இவருக்கு அஞ்சல் அனுப்பி இருக்கலாம். அப்படி இருக்கையில், முதலாவதாகக் குறிப்பிட்ட நம் நண்பருக்கு அஞ்சல் அனுப்ப முயற்சிக்கையில், இதனையும் சேர்த்து, அல்லது இரண்டாவது நபரின் முகவரியை, ஜிமெயில் காட்டும். அவசரத்தில் அதனைத் தேர்ந்தெடுத்து நம் நண்பருக்கு அனுப்ப வேண்டிய அஞ்சலை அனுப்பி விடுவோம். இதனைத் தவிர்க்க, அந்த இரண்டாவது முகவரியை நீக்க எண்ணுவோம். ஆனால், எப்படி நீக்குவது? தெரிந்து கொள்வோமா!
ஜிமெயில் இணைய தளத்தில், மேல் இடது மூலையில் Gmail என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Contacts என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது சர்ச் (search) கட்டத்தில் நீங்கள் நீக்க விரும்பும் முகவரியை டைப் செய்திடத் தொடங்கவும். தேவையற்ற அந்த முகவரி தென்பட்டவுடன், அதனைத் தேர்ந் தெடுக்கவும். இப்போது, அந்த முகவரியை உங்கள் தொடர்பு முகவரி ஏட்டில் பதியக் கூடிய அல்லது திருத்தங்களை மேற்கொள்ளக் கூடிய பக்கம் கிடைக்கும். இங்கு நீங்கள் பெயரினை இணைக்கலாம், மாற்றலாம், முகவரியைத் தரலாம், பிறந்த நாளினைக் குறிக்கலாம், ஏன், போட்டோவினைக் கூட போட்டு வைக்கலாம்.
ஆனால், இங்கு நம் நோக்கம் அது இல்லையே. மொத்தமாக நீக்க அல்லவா முயற்சிக்கிறோம். விண்டோவின் மேலாக உள்ள More மெனுவினைக் கீழாக இழுக்கவும். இங்கு கிடைக்கும் Delete contact என்பதில் கிளிக் செய்திடவும். முகவரி நீக்கப்படும். சில நிமிடங்களுக்குப் பின்னர், முகவரிக்கான எழுத்தினை டைப் செய்தால், முகவரி தரப்பட மாட்டாது.
முகவரியில் பதிந்து வைத்திருப்பதனை நீக்க வேண்டும் எனில், Delete Contact என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். தேவையற்ற அந்த முகவரியில் பெயர் உள்ள கட்டத்தினுள் கிளிக் செய்திடவும். அடுத்து CTRLA கிளிக் செய்திடவும். முகவரி முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். இப்போது Delete அழுத்தவும். முகவரி நீக்கப்படும்.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

பிளாக்கரில் புதிய வசதி- இனி போட்டோ மற்றும் வீடியோவை நேரடியாக Webcam மூலமாக இணைக்கலாம்



Posted On April 06,2012,By Muthukumar
கூகுள் நிறுவனம் தற்பொழுது பிளாக்கர் வலைபூக்களுக்கு பல புதிய வசதிகளை அறிமுக படுத்தி உள்ளது. சமீபத்தில் Meta tag , Image Properties, Google+ விட்ஜெட் இந்த வரிசையில் தற்பொழுது புதிய வசதியை அறிமுகபடுத்தி உள்ளது. இனி பிளாக்கரில் போட்டோ அல்லது வீடியோக்களை Webcam மூலமாக நேரடியாக உங்கள் வலைப்பூவில் இணைக்கலாம்.


உங்கள் வலைப்பூவில் போட்டோக்களை இணைக்க எப்பொழுதும் செல்வது போல Insert image அல்லது Insert வீடியோ பட்டனை க்ளிக் செய்யுங்கள். அதில் இப்பொழுது புதிதாக From your Webcam என்ற வசதியை காணலாம்



அதில் க்ளிக் செய்து நேரடியாக உங்கள் போட்டோ மற்றும் வீடியோக்களை வெப்கேம் மூலமாக இணைத்து கொள்ளலாம். 

மனங்களைக் கவரும் விண்டோஸ் -8

Posted On April 06,2012,By Muthukumar
நுகர்வோருக்கான முன் பயன்பாட்டிற்கான விண்டோஸ் 8 பதிப்பினைப் பலரும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில் நுட்பத்துறையில் இயங்குபவர்கள், இதனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டுத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். விண்டோஸ் 8 தொடுதிரை பயன்பாட்டினை எல்லாரும் பயன்படுத்திப் பார்க்க இயல வில்லை. ஆனால் அந்த அனுபவம் சிறப்பாக இருக்கும் என அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனால், தொடுதிரை வசதியுடன் கூடிய விண்டோஸ் 8 கம்ப்யூட்டரையே வாங்க வேண்டும் என முடிவு செய்து, பலர் அடுத்த கம்ப்யூட்டர் வாங்குவதனை ஒத்தி வைத்துள்ளனர். இவர் களின் மனதைக் கவர்ந்த, பயனுள்ள சில முக்கிய சிறப்புகளை இங்கே பட்டியலிடலாம்.
1. கேம்ஸ்: விண்டோஸ் போன் 7 சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பாக்ஸ் லைவ் சாதனத்திலிருந்து கேம்ஸ்களை மிக எளிதாக மாற்றும் வசதி தந்திருந்தது. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டமும் அதே கட்டமைப் பில் உருவாக்கப்பட்டிருப்பதால், அதே போன்று கேம்ஸ்களை எளிதாக மாற்ற முடிகிறது. இதனால், செலவும் குறைகிறது. குறிப்பாக, சிலர் வித்தியாசமான முறையில் சில பிரபலமாகாத விளையாட்டுக்களைத் தரவிறக்கம் செய்து விளையாட எண்ணு வார்கள். இவர்களுக்கு விண்டோஸ் 8, எக்ஸ்பாக்ஸ் லைவ் சாதனக் கூட்டு மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் அமைந்துள்ளது.
2. டேப்ளட்ஸ்: டேப்ளட் பிசிக்களை அனை வரும் பயன்படுத்தும் காலம் இப்போதைக்கு இல்லை என்றாலும், ஒரு நாளில் அது நடந்தே தீரும். அவ்வாறு மாறுபவர்களுக்கு விண்டோஸ் 8 நல்ல ஒரு வழித்தடமாக அமைந்துள்ளது. கவனத்தை ஈர்க்கிறது. இதன் தொடுதிரை பயன்பாடு, டேப்ளட் பிசிக்கு மக்களை மாற்றும் சிறப்பாக அமைந்துள்ளது. இதனைப் பயன்படுத்தியவர்கள், நிச்சயம் டேப்ளட் பிசிக்கு மாறுவது எளிமையாக வும் இனிமையாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உணர்வார்கள். விண்டோஸ் போன் 7ல் இந்த சிஸ்டத்தினைப் பயன் படுத்தியவர்களுக்கு, விண்டோஸ் 8 மிகவும் எளிதாகவும், பிடித்துப் போனதா கவும் அமையும்.
3. மெசேஜ் அனுப்புதல்: விண்டோஸ் 8 சிஸ்டம் பொதுவான சமூக தளங்களான, பேஸ்புக், லைவ் மற்றும் ட்விட்டர் தளங்களுடன் மெசேஜ் அனுப்பும் செயல் பாட்டில் இணைந்து இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் ஒரே இடத்தில் கிடைப்பது இதன் சிறப்பு. இதனால், வெவ்வேறு இணைய தளங்களைத் திறந்து இயங்கும் தேவை தவிர்க்கப்படுகிறது. பலவகையான தர்ட் பார்ட்டி புரோகிராம்களை இயக்கும் நிலை யும் தேவைப்படவில்லை. பல பிரபல மான தளங்களுடன் இணைந்த மெசேஜிங் சிஸ்டம் கிடைப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுவும் விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 8க்கு வந்த ஒரு வசதியாகும்.
4. அப்ளிகேஷன் ஸ்டோர்: விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்களுக்கென ஓர் அப்ளிகேஷன் ஸ்டோர் தனியே முன்பு இயங்கியது. அது பலர் அறியாமலேயே இருந்து வந்தது, ஒரு சிலர் மட்டும் மிக நன்றாகவே பயன்படுத்தி வந்தனர். விண்டோஸ் 8 சிஸ்டம் வந்த பின்னர், இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. மெட்ரோ அப்ளிகேஷன் புரோகிராம்களை மிக எளிதாக, விண்டோஸ் 8 மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அது மட்டுமின்றி, அவை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் வகையில் தரப் பட்டுள்ளன. இதனால், பலவகையான அப்டேட் அப்ளிகேஷன் களை காலத்தே இறக்கிப் பதிவதும், மிகப் பழைய நிலையில் அப்ளிகேஷன்களை இயக்குவதும் இனி நடக்கப்போவது இல்லை. எனவே, கம்ப்யூட்டரை மாற்றினால் கூட, இன்ஸ்ட லேஷன் டிஸ்க், ட்ரைவர் என எதனையும் தேட வேண்டிய தில்லை. அனைத்தையும் அப்ளிகேஷன் ஸ்டோரிலிருந்து இறக்கிக் கொண்டு பயன்படுத்தலாம்.
5. பாதுகாப்பின் ஸ்திரத்தன்மை: மெட்ரோ அப்ளிகேஷன்கள் அமைந்துள்ள WinRT API கட்டமைப்பு, இந்த அப்ளிகேஷன்கள் பயன்படுத்துபவர்கள் தரும் டேட்டா மற்றும் சிஸ்டம் இணைந்த செயல் பாட்டில் என்ன செய்திட வேண்டும் எனத் துல்லிதமாக வரையறை செய்கின்றன. மெட்ரோ வில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மற்ற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களை இயங்கவே விடாது. இது டெவலப்பர்களுக்கு ஒரு தடைச் சுவராக இருக்கலாம். ஆனால், பயனாளர்களுக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது. இதனால், தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் எதுவும் சிஸ்டத்தினைக் கெடுக்க முடியாது; பயனாளர்களின் டேட்டாவினை அறிந்தோ அறியாமலோ சீரழிக்க முடியாது.
6. இணைந்த இன்டர்பேஸ்: மைக்ரோசாப்ட் தன் அனைத்து சிஸ்டங்களையும் மெட்ரோ யூசர் இடைமுகத்துடன் இணைத்துக் கொண்டு வருகிறது. பெர்சனல் கம்ப் யூட்டர், போன், டேப்ளட் பிசி மற்றும் வீடியோ முனையங்கள் அனைத்தும் இதனைக் கட்டமைப்பாகக் கொண்டே இயங்கு கின்றன. இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எந்த ஒரு புதிய சாதனத்தைப் பயனாளர் ஒருவர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அவருக்கு அது ஏற்கனவே பழகிய ஒன்றாகத்தான் இருக்கும்.
7. க்ளவ்ட் இணைப்பு: விண்டோஸ் 8 சிஸ்டத்துடன், கிளவ்ட் அடிப்படையிலான செயல்முறை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால், லைவ் ஐ.டி. ஒன்றின் மூலம் விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர் ஒன்றில் பதிந்தால், அனைத்து இணைந்த டேட்டா வும் உடனே கிடைக்கும். எடுத்துக் காட்டாக, நான் விண்டோஸ் 8 நுகர்வோர் முன் பயன்பாடு இயக்கத்தில் இணைந்தவுடன், என்னுடைய ட்விட்டர், பேஸ்புக் மற்றும் லைவ் மெசஞ்சர் அக்கவுண்ட்கள் அனைத்தும் பதியப்பட்டன. ஏனென்றால், போனிலும் நான் அதே லைவ் ஐ.டி.யைப் பயன்படுத்துகிறேன். இதில் உள்ள எந்த டேட்டாவினை நான் மாற்றினாலும், உடனே அது மற்ற பயன்பாட்டு தொகுப்பு களிலும் அப்டேட் செய்யப்பட்டு காட்டப்படும். ஏதேனும் ஒரு சாதனத்தை மாற்றுகையில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஏனென்றால், ஒவ்வொரு இணைப்பினையும் புதிய தாகப் பதிய வேண்டியதில்லை. பதிந்த பின்னர் டேட்டாவினை மீண்டும் உருவாக்கத் தேவையில்லை.
8. ஒருங்கிணைந்த பிற தள சேவைகள்: விண்டோஸ் 8 சிஸ்டம், மற்ற தளங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு, அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனதிற்கு நிறைவினையும் தரும் வகையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்ட மை பிக்சர்ஸ் (My Pictures) இதுவரை ஒரு டைரக்டரியாக மட்டுமே செயல்பட்டது. இப்போது, இது ஆல்பம் மற்றும் லைப்ரரீஸ் (Album and Libraries) என்ற புதிய வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் படங்கள் எங்கிருந்து வந்தன என்ற தகவலை நாம் பெற முடியும். சேவைத் தளங்களான Flickr மற்றும் Facebook போன்றவை, Libraries என்ற வகையில் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக் கப்பட்டுள்ளன. மற்ற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களும் இந்த பிரிவில் இணைந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதே போல People Hub என்ற பிரிவில், நாம் பல்வேறு தளங்கள் (Facebook, email accounts, LinkedIn, போன்றவை)வாயிலாக அறிந்து வைத்திருக்கும் நபர்கள், நண்பர்கள் குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன.இதனால் நம் தகவல்கள், அப்ளிகேஷன்கள் அடிப்படையில் அமையாமல், நாம் பயன்படுத்தும் சிஸ்டத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன. எனவே நாம் பிற தளங்களுக்கு அடிக்கடி அனாவசியமாகச் சென்று வரும் வேலை மிச்சமாகிறது.
9. மின்னஞ்சல்: விண்டோஸ் போன் 7 சிஸ்டம் அதன் மிகச் சிறப்பான இமெயில் கிளையண்ட் அமைப்பிற்காகப் பல பாராட்டுதல்களைப் பெற்றது. இதே வசதி இங்கு விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பெரிய திரைக்கேற்ப வகையில் அமைக்கப் பட்டுள்ளது. பல இமெயில் அக்கவுண்ட்கள் இதில் ஒருங்கிணைக்கப் பட்டு, பயனாளர் களுக்கு அனைத்தும் ஒரே குடையின் கீழ் வழங்கப்படுகின்றன. இதனால் இவற்றை விரைவாகவும், எளிதாகவும் கையாள முடிகிறது.
10. எளிமை: விண்டோஸ் 8 சிஸ்டத்தின் ஒரு சிறப்பு அதன் மெட்ரோ அப்ளிகேஷன்கள். இவற்றுடன் நாம் இணைந்து பணியாற்றினால், இந்த சிஸ்டத்தின் எளிமை நமக்குப் புரிய வரும். இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில், ஒரே நேரத்தில், பல பணிகளை எடுத்துப் பலவாறாகப் பணியாற்றியவர்கள், பல நேரங்களில் தடுமாறிப் போனார்கள். ஒரு சில அப்ளி கேஷன்கள் தங்களுக்கு வேண்டிய இயக்க சூழ்நிலை கிடைக்கவில்லை என்றால், முடங்கிப்போயின. ஆனால், விண்டோஸ் 8 தரும் மெட்ரோ அப்ளிகேஷன்கள் இயக்கத்தில் முடங்கிப் போகும் சூழ்நிலையே ஏற்படாது. நம்பிக்கையோடு, அப்ளி கேஷன்களை இயக்கி வசதிகளை அனுபவிக்கலாம்.
அப்ளிகேஷன் ஸ்டோர் மூலம் எந்நேரமும் நமக்குக் கிடைக்கக் கூடிய புரோகிராம்கள், ஒரே இடத்தில் அனைத்து இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள், மெசேஜ் அனுப்ப ஒரே இடம், வெவ்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய தளங்களுக்கு அடிக்கடி மாறிச் சென்று இயக்க வேண்டாமல், ஒரே இடத்தில் இயக்க சூழ்நிலை பெறும் வசதி என அனைத்தும் எளிமையாக்கப் பட்டுள்ளன. தற்போது இருக்கிற சிஸ்டம் ட்ரே நோட்டிபிகேஷன், பஸ்ஸர், நாய்ஸ், டாஸ்க்பார் ஐகான்ஸ் என்ற வழக்கமான விண்டோஸ் சூழ்நிலை இல்லாமல், எளிமையான, வேகமான, வசதியான ஒரு சூழ்நிலைக்கு நம்மை அழைத்துச் செல்வதனால், பயனாளர்களைக் கட்டிப் போட்டு குஷிப்படுத்தும் கட்டமைப்பாக விண்டோஸ் 8 அனைவருக்கும் தோன்றுகிறது.

வியாழன், 5 ஏப்ரல், 2012

சிறுவர்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்


Posted On April 05,2012,By Muthukumar
உங்கள் குழந்தைகள் இணையத்தில் பயன்பெறுவதற்கு மிகச்சிறந்த வலைத்தளங்கள் சிலவற்றை இங்கு தொடர்ச்சியாக தரவிளைகிறோம்.
இதுவரை இத்தளங்கள் பற்றி அறிந்திருக்காவிடின் முதலில் நீங்கள் சென்று பாருங்கள், பின்னர் இத்தளங்களில் உள்ள வசதிகளை புரியும் வகையில் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். நிச்சயம் பயனுடையதாக இருக்கும்.

Funology (funology.com): இவ் இணையதளத்தில் குழந்தைகளுக்கு சற்றும் சலிப்பு ஏற்படாவண்ணம் பல வேடிக்கை விளையாட்டுக்கள் உள்ளடங்கியிருப்பதுடன், கலை கைவினை பொருட்கள் செய்வதுபற்றியும் சொல்லித்தரப்படுகிறது. பெறும்பாலும் பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்கள் மட்டுமல்லாது, சிறுவர்களுக்கு என அறிவியல், வேதியியல், உயிரியல், மற்றும் வானிலை போன்ற பாடங்களை பரிசோதனைகள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் ஒரு சிறப்பம்சமாக குழந்தைகளுக்கு சமையலையும் கற்பிக்கும் வண்ணம் சில இலகுவான உணவு வகைகளின் செய்முறைகளையும் இங்கு காணலாம். நீங்கள் கூட குழந்தையின் வயது, அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளடக்கத்தையும் செயல்பாடுகளையும் தேடலாம்.
இணைப்பு: http://www.funology.com/

ஐபிஎல் யூடியூப்பில் நேரடியாக..


Posted On April 05,2012,By Muthukumar

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் மோதும் முதலாவது போட்டி யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பாக இன்னும் சில மணித்தியாலங்களே உள்ளன.
ஐபிஎல் ரசிகர்களுக்கென கடந்த வருடத்தை போல் இம்முறையும் யூடியூப்பில் நேரடியாக காணும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கின்றது Indiatimes.

யூடியூப்பில் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பக்கத்தில் நேரடி போட்டிகளை காண்பது மட்டுமின்றி முன்னைய போட்டிகளையும் காணும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகளைப் பார்வையிட யூடியூப் சேனல் இணைப்பு இங்கே - http://www.youtube.com/user/indiatimes/Live
அல்லது இங்கே பார்வையிடலாம் - http://www.youtube.com/indiatimes

தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க - HOTSPOT SHIELD

Posted On April 05,2012,By Muthukumar
உங்க கம்பேனி உங்கள் இம்சை தாங்க முடியாம நீங்க குடியிருக்கிற Facebook, Yahoo Chat, Twitter  போன்றவற்றை தடை செய்துவிடலாம்!
ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஒவ்வாத தளங்களைத் தடை செய்துவிடுவது வழக்கம்!  உதாரணமாக் UAE இல் Skype, Orkut போன்ற தளங்கள் தெரியாது!
வாத்யாரே இதுக்கு இன்னா பண்ண?
இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்! - HOTSPOTSHIELD

இப்போ TASKBARல வர்ற HOTSPOT SHIELD பட்டனை கிளிக் செய்து CONNECT பண்ணவும்!
இனி உலகத்தில உள்ள எல்லா தளங்களையும் பார்க்க முடியும்! யார் தடுத்தாலும் சரி!
குறிப்புகள் :
  • HOTSPOT SHIELD உங்களுக்கென ஒரு தனி புதிய IP உருவாக்குகிறது. 

உங்களுக்கு வேண்டிய தளத்தைப் பார்த்துவிட்டு HOTSPOT SHIELDDISCONNECT செய்துவிடவும்!
ஏன்?
  • HOTSPOT SHIELD உபயோகிக்கும்போது இணையதள வேகம் குறைவாக இருக்கும்
  • HOTSPOTSHIELD விளம்பரம் வராது!

முக்கியக் குறிப்பு: கண்ட கண்ட தளங்களைப் பார்க்கவோ அல்லது பிட்டு வீடியோக்களை பார்க்கவோ இதை உபயோகப்படுத்தினால் கம்பேனி பொறுப்பல்ல!!!

விருப்பப்படி “வியூ’ அமைத்திட

Posted On April 05,2012,By Muthukumar
மிகப் பெரிய அளவில் எக்ஸெல் பைல்களை உருவாக்கும்போது கீழே குறிப்பிட்டுள்ள சிக்கலை, அநேகமாக அனைவரும் சந்தித்திருப்போம். குறிப்பிட்ட சில செல்களுக்குச் செல்ல "அங்கிட்டும் இங்கிட்டும்' அலைந்து கொண்டிருப்போம். இந்த அலைச்சலினால், எந்த செல்லில் என்ன வகையான தகவல் உள்ளது என்பதையே மறந்துவிடும். இதனால் “Go To” வசதியைக் கூட பயன்படுத்த இயலாமல் போய்விடும். இந்த மாதிரி செல்களுக்கு இடையே செல்வது மட்டுமின்றி சில வேளைகளில் புதிய செல்களுக்குச் செல்கையில் எந்த செல்களை எல்லாம் பிரிண்ட் செய்திட வேண்டும் என்பதிலும் பிரிண்ட் செட்டிங்ஸ் அமைப் பதிலும் பில்டர்களை உருவாக்கு வதிலும் நாம் குழப்பம் அடையலாம்.
இது என்ன தலைவலி!! என நாம் ஆச்சரியமும் எரிச்சலும் அடையலாம். இதற்கு ஏதேனும் வழி உள்ளதா? நாம் அடிக்கடி செல்ல வேண்டிய செல்களை மட்டும் ஒரு பட்டியலாக வைத்துக் கொண்டு தாவ முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். முடியும். இது நீங்கள் எக்ஸெல் ஒர்க் ஷீட்டை எப்படிக் காண விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. இதற்கான தீர்வை எக்ஸெல்லில் உள்ள Custom View என்ற வசதி தருகிறது. உங்கள் வசதிப்படி ஒர்க் புக் எப்படி தோற்றம் தர வேண்டும் என்பதனையோ அல்லது அச்சில் எப்படி வர வேண்டும் என்பதனையோ முடிவு செய்து, பின் உருவாக்கி நீங்கள் அப்படியே சேவ் செய்து கொள்ளலாம். இதனால் மற்ற மாற்றங்களை ஏற்படுத்தினாலும் இந்த வியூவைத் தேர்ந் தெடுக்கையில் நீங்கள் எப்படி அமைத்து சேவ் செய்தீர்களோ அந்த செல்களுடன் அந்த செட்டிங்கு கள் செயல்பாட்டிற்கு வந்து விடும். அந்த குறிப்பிட்ட வியூவிற்கான பிரிண்ட் செட்டிங்ஸ் அமைத்துவிட்டால் அதுவும் வியூ செட்டிங்ஸில் சேவ் செய்யப்படும். இப்படியே பல வகையான செல்கள் கொண்ட, மற்றவை மறைக்கப்பட்ட, தோற்றங்களை உருவாக்கி சேவ் செய்து பின் வேண்டும்போது பெறலாம். இதனால் நம் நேரமும் சக்தியும் வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. சரி, இந்த வியூ செட்டிங்ஸை எப்படி அமைப்பது என்று பார்ப்போம்.
1.முதலில் உங்கள் மிகப் பெரிய ஒர்க் புக்கைத் திறந்து கொள்ளுங்கள்.
2. பின் எந்த இடத்தில் நீங்கள் செயலாற்ற விரும்புகிறீர்களோ அந்த இடத்திற்குச் செல்லுங்கள்.
3. இப்போது நீங்கள் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ளவும். எடுத்துக்காட்டாக print areas, hidden rows, filters, subtotals போன்றவற்றை அமைக்கவும். இப்போது வியூ செட்டிங்ஸ் அமைக்கப் போகிறீர்கள்.
4. View மெனு செல்லவும். அங்கு Custom Views என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Custom Views window திறக்கப்படும்.
5. புதிய வியூ உருவாக்குவதற்காக Add என்னும் பட்டனைத் தட்டவும். ஏற்கனவே திறந்திருக்கும் விண்டோ புதிய வியூவிற்கு ஒரு பெயர் கொடுக்கும் வசதியை உங்களுக்குத் தரும். உங்கள் நோக்கத்தின் அடிப்படையில் வியூவிற்கான பெயரைத் தேர்ந் தெடுத்து அமைக்கவும். தேர்ந்தெடுக்கும் பெயர் உங்களுக்கு வியூவினைக் கண்டறிவதில் உதவுவதாக இருக்க வேண்டும். இனி எந்த செட்டிங்ஸ் எல்லாம் இந்த வியூவில் இருக்கக் கூடாது என்று விரும்புகிறீர்களோ அதில் எல்லாம் டிக் அடையாளத்தை நீக்கவும். இந்த புதிய வியூவிற்கான பிரிண்ட் செட்டிங்ஸைக் கூட நீங்கள் முடிவு செய்து Print settings மூலம் வியூவிற்குள் கொண்டு வரலாம். இது எல்லாம் முடித்த பின்னர் வியூவிற்கான பெயர் கொடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்படியே நீங்கள் விரும்பும் தேர்வு மற்றும் தோற்றங்களை வரிசையாக உருவாக்கி வியூக்களாக சேவ் செய்திடலாம்.
இதன்பின் நீங்கள் ஒர்க் புக்கில் எங்கு விட்டீர்களோ அங்கு இருப்பீர்கள். இனி நீங்கள் சேவ் செய்த வியூவினை எப்போதும் பெறலாம். அதற்கு View மெனு சென்று அங்கு Custom Views என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அந்த விண்டோவில் select the name of the viewவில் நீங்கள் திறக்க விரும்பும் வியூவினைத் தேர்ந்தெடுத்து Show என்பதில் கிளிக் செய்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த செல்கள் மற்றும் செட்டிங்ஸ்களுடன் ஒர்க் புக் தோன்றும். ஏதேனும் வியூ செட்டிங்ஸை நீக்க வேண்டும் என எண்ணினால் மீண்டும் Custom Views விண்டோ சென்று வியூவிற்கான பெயரைத் தேர்ந்தெடுத்து Delete பட்டனை அழுத்தவும்.