வியாழன், 9 ஆகஸ்ட், 2012

புதுமையான கேள்வி பதில் இணையதளம்.


Posted On Aug 9,2012,By Muthukumar
கேள்வி பதில் இணையதளங்கள் ஏற்கனவே பல இருக்கின்றன.இப்போது புதிதாக மேலும் ஒரு கேள்வி பதில் தளம் அறிமுகமாகியிருக்கிறது.
ஆஸ்க் எ புக் என்னும் அந்த தளம் மற்ற கேள்வி பதில் தளங்களை போல இருந்தாலும் பதில் அளிக்கும் விதத்தில் வித்தியாசமாக அமைந்துள்ளது.
பொதுவாக கேள்வி பதில் தளங்களில் யாரேனும் கேட்கும் கேள்விக்கு யாரேனும் பதில் அளிப்பார்கள்.ஆனால் இந்த தளத்தில் ஒருவர் கேட்கும் கேள்விக்கான பதில் நேரடியாக அளிக்கப்படாமல் அந்த பதில் இடம் பெற்றிருக்கும் புத்தகத்தின் பெயர் பரிந்துரைக்கப்படுகிற‌து.
எந்த கேள்வி கேட்டாலும் சரி அந்த கேள்விக்கான பதில் எந்த புத்தகத்தில் இருக்கிறது என்னும் தகவல் முன் வைக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு ஸ்டீவ் ஜாப்சின் தனிச்சிறப்பு என்ன என்று யாரேனும் கேட்டால் ஸ்டீவ் ஜாப்ஸ் தொடர்பான புத்தகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
கேள்விக்காக விடை லட்சக்கணக்கான புத்தகங்களில் கொட்டிக்கிடப்பதால் அவற்றை தேடுவதற்கான வழிகாட்டியாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள புதுமையான வழி என்பதோடு புதிய புத்தகங்களை தெரிந்து கொள்வதறகான வழியாகவும் இந்த தளம் அமைந்துள்ளது.
ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விக்கு பொருத்தமான புத்தகம் தெரிந்திருந்தாலும் அதனை பரிந்துரைக்கலாம்.
எல்லாமே ஆங்கில புத்தகங்கள் தான்.தமிழிலும் இதே போல ஒரு இணையதலளம் அமைக்கப்பட்டால் அற்புதமான தமிழ் புத்தகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
\
இணையதள முகவரி;http://www.askabook.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக