Posted On Aug 9,2012,By Muthukumar
அனோடோரி வழங்கும் தீர்வு பார்த்த இணையபக்கங்களை குறித்து வைத்து கொள்ளும் புக்மார்கிங் சேவை.
புக்மார்கிங் சேவைகளுக்கு குறைவு இல்லை என்றாலும் அனோடோரி கொஞ்சம் வித்தியாசமானது.வழக்கமான புக்மார்கிம்ங் சேவைகளை விட மேம்பட்டது என்று அனோடோரி தன்னை பற்றி வர்ணித்து கொள்கிறது.
அதாவது வளர்ந்து விட்ட புக்மார்கிங் சேவை என்று பெருமை பட்டு கொள்கிறது.
அனோடோரி அப்படி என்ன செய்கிறது என்றால் புக்மார்க் செய்ய விரும்பும் இணையதளத்தை அடிகோடிட்டு அதற்கான விளக்க குறிப்புகளோடு சேமித்து வைத்து கொள்ள உதவுகிறது.
நாளிதழ் அல்லது புத்தகங்களில் ஒரு விஷயத்தை படிக்கும் போது பின்னர் தேவை என்றால் அதில் முக்கிய பகுதியை அடிக்கோட்டி வைத்து கொள்வோம் அல்லவா அதே போலவே அனோடோரியில் எந்த இணையதளத்திலும் அதன் முக்கிய பகுதிகளை மஞ்சள் வண்ணத்தில் அடிக்கோடிட்டு கொள்ளலாம்.
தேவைப்பட்டால் அவற்றின் அருகே அந்த பக்கத்திற்கான விளக்க குறிப்புகளையும் எழுதி வைக்கலாம்.
புக்மார்கிங் செய்வதே ஏற்கனவே பார்த்த இணையதளம் எது என்பதை மறந்து விடாமல் இருப்பதற்காக தானே.ஆனால் இணையதளங்களை புக்மார்க் செய்து விட்டு பின்னர் அவற்றை மீண்டும் பார்க்கும் போது அவற்றை ஏன் குறித்து வைத்தோம் என்று தெரியாமல் குழம்பி தவிக்கும் அனுபவமும் பல முறை நேரலாம் அல்லவா?
இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில் தான் அந்த தளங்களில் நம்மை கவர்ந்தவை எவை என்றும் அந்த தளத்தை குறித்து வைத்தது ஏன் என்றும் குறிப்பெழுதி வைக்கும் போது மீண்டும் அந்த தளத்தை பார்க்கும் போதே இந்த குறிப்புகள் வழகாட்டியாக விளங்கும்.
இணையதளங்கள் மீது இப்படி அடிக்கோடிடுவது மிகவும் சுலபம்.இந்த தளத்திஒல் உறுப்பினராகி புக்மார்கிங் டூல்பாரை நமது பிரவுசரில் இணைத்து கொண்டால் போதும்,அதன் பிறகு எப்போது தேவையோ அப்போது புக்மார்கிங் பட்டனை கிளிக் செய்தால் போதும் அடிக்கோடிடுவதற்கான வசதியும் குறிப்பெழுதும் வசதியும் திரையில் தோன்றுகிறது.
இப்படி எத்தனை தளங்களை வேண்டுமானாலும் குறிப்புகளோடு சேமித்து கொள்ளலாம்.இந்த தளங்களின் பட்டியலை எப்போடு வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதோடு இவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.
ஆக நாம் பார்த்து ரசித்த தளங்களை நண்பர்களும் அவற்றின் விளக்க குறிப்புகளோடு காணலாம் என்பதோடு நாமும் மற்றவர்களின் சேமிப்பு பட்டியலை பார்த்து சுவாரஸ்யமான இணையதளங்களை தெரிந்து கொள்ளலாம்.
டிவிட்டரில் இருப்பது போல சக உறுப்பினர்களை பின் தொடரவும் செய்யலாம்.அந்த வகையில் சமூக வலைப்பின்னல் தன்மை கொண்டதாகவும் இந்த புக்மார்கிம்ங் சேவை விளங்குகிறது.
சக உறுப்பினர்கள் சேமித்து வைத்துள்ள தளங்களையும் உலா வரலாம்.குறிப்பிட்ட வகை தளங்கள் உள்ளதா என்று தேடிப்பார்க்கும் வசதியும் உள்ளது.
அஷோக் நாயர் என்னும் இந்தியரும் டிரேவிஸ் ஹார்ட்மேன் என்னும் அமெரிக்கரும் இணைந்து இந்த சேவையை உருவாக்கியுள்ளனர்.
இந்த சேவைக்காக ஒரு வலைப்பதிவு பகுதியும் வைத்திருக்கின்றனர்.அதில் ஒரு பதிவில் சோர்ஸ் அம்னிஷியா என்னும் பதத்தை பயன்படுத்தியுள்ளனர்.அதாவது இனையத்தில் எந்த தகவலை எந்த தளத்தில் பார்த்தோம் என்பதை மறந்து விட்டு திண்டாடுவது.அந்த இணைய மறதியில் இருந்து விடுவிக்க தான் இந்த புக்மார்கிங் சேவை !
இணையதள முகவரி;http://annotary.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக