Posted On Aug 12,2012,By Muthukumar |
பக்க எண்கள் சொற்களாக வேர்ட்
தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம்.
மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers
தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க
எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான்
இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக
இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்தி செய்திட கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. வழக்கம்போல பக்க எண்களை இணைக்கவும்.
2. அதன் பின் பக்க எண்ணுக்குரிய பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பக்க எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்திடவும். பக்க எண் பேஜ் ஹெடர் அல்லது புட்டரில் தான் இருக்கும். இப்போது அந்த இடம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு புள்ளிகள் கொண்ட கோடுகளால் கட்டம் கட்டப்பட்டு காட்டப்படும். இதில் எண் இருக்கும்.
3. இனி இந்த எண்ணுக்கான பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று ஷிப்ட்+எப்9 அழுத்தவும். எண்ணுக்கான பீல்டு கிடைக்கும். பீல்டு தேர்ந்தெடுக்கப்பட்டு கிரே கலரில் காட்டப்படும். பீல்டில் PAGE என்று தெரியும். இது தான் அதனுடைய குறியீடு.
4. இனி இந்த குறியீட்டிற்குப் பதிலாக \* CardText என டைப் செய்திடவும்.
5. பின் மீண்டும் எப்9 கீ அழுத்தினால் எண் இலக்கமாக இருப்பது மாற்றம் பெற்று எழுத்தில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக முதல் பக்கத்தில் 1 என்பதற்குப் பதிலாக One என இருக்கும்.
வேர்ட் பார்மட்டிங் நீக்கல் வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட போல்டு, அடிக்கோடு, சாய்வு மற்றும் சில பார்மட்களில் அமைத்திருப்போம். இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால், இதனைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம். இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். பார்மட்டிங் நீக்கி எளிமையான டெக்ஸ்ட் மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+இஸட் (Ctrl+Shft+Z)அழுத்துங்கள். மொத்தமாக பார்மட்டிங் அனைத்தும் நீக்கப்படும். வேர்ட் உள்ளாக ResetChar என்ற கட்டளையை அமல்படுத்துகிறது. இதனை கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தியும் மேற்கொள்ளலாம்.
இதே போல ஏதேனும் பாரா பார்மட்டிங் செய்திருந்தால், அந்த பார்மட்டினை நீக்க பாராவினை செலக்ட் செய்து கண்ட்ரோல் + க்யூ (Ctrl+Q)அழுத்துங்கள்.
டெக்ஸ்ட் ஒன்றுக்கு சாதாரண நார்மல் ஸ்டைல் இருந்தால் போதும் என்று எண்ணி னால், உடனே அதனைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+என் (Ctrl+Shft+N) அழுத்தவும்.
வேர்ட் பாராவினை நகர்த்தி அமைக்க
பெரிய டாகுமெண்ட் ஒன்றைத் தயார் செய்கிறீர்கள். அதன் பின் சில பாராவை அதன் இடத்திலிருந்து நகர்த்தி இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். இதற்கு பாராவை செலக்ட் செய்து இழுக்க வேண்டாம்; காப்பி அல்லது கட் செய்து பெஸ்ட் செய்திட வேண்டாம். எந்த பாராவினை மாற்ற வேண்டுமோ அதில் ஊடாகக் கர்சரைக் கொண்டு நிறுத்தி ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்திக் கொண்டு நீங்கள் விரும்பும் திசை நோக்கிய ஆரோ கீகளை அழுத்தவும். பாரா அப்படியே நகர்ந்து சென்று நிற்கும். எந்த சூழ்நிலையிலும் பழைய படி இருக்க வேண்டும் என எண்ணினாலும் அப்படியே கொண்டு வரலாம். அல்லது கண்ட்ரோல் + இஸட் பயன்படுத்தலாம்.
வேர்டில் தேதியும் கிழமையும் வேர்ட் டாகுமெண்ட்டில் தேதியும் கிழமையும் அமைக்கவும், அவை தாமாக அவ்வப்போது அப்டேட் செய்திடவும் இத்தொகுப்பில் வழி உள்ளது. இதற்கு தேதியையும் கிழமையினையும் டைப் செய்திடத் தேவையில்லை. டாகுமெண்ட்டைத் திறந்து எங்கு தேதி மற்றும் கிழமை அமைய வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தவும். பின்னர் மெனு பார் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Date and Time” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது “Date and Time” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் தேதியும் கிழமையும் எந்த பார்மட்டில் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் 16 வகைகள் தரப்பட்டிருக்கும்.
சில பார்மட்டுகளில் நேரமும் அமைக்கப்படும் வகையில் தரப்பட்டிருக்கும். இதில் நீங்கள் விரும்பும் பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் பார்க்கும் போது என்ன தேதி, கிழமை மற்றும் நேரம் உங்கள் கம்ப்யூட்டர் படி உள்ளதோ, அவை பார்மட் தேர்வில் காட்டப்படும்.
இதில் இன்னொரு அருமையான வசதியும் உள்ளது. நீங்கள் உங்கள் டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் தேதி தானாக அப்டேட் செய்யப்பட வேண்டும் என எண்ணினால் கீழாக “Update automatically” என்று இருக்கும். இதில் டிக் அடையாளத்தினை அமைத்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம். பின் அந்த டாகுமெண்ட்டில் தேதியும் கிழமையும், நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் நேரமும் அமையும்.
பேக் அப் பைல்களை எப்படி உருவாக்குவது?
வேர்ட் தொகுப்பில் பணியாற்றும் சிலர் தங்கள் பைல்களை கவனக் குறைவாக அழித்து விடுவார்கள். ரீசைக்கிள் பின்னுக்கும் போகாத முறையில் அழிப்பவர்களும் உண்டு. அல்லது பைலை உருவாக்கிவிட்டு பின் அதே பெயரில் புதிய வெற்று பக்கங்களை சேவ் செய்பவர்களும் உண்டு. அல்லது தெரியாமல் அனைத்து பக்கங்களையும் தேர்ந்தெடுத்து டெலீட் செய்து பின் வெற்றுப் பக்கங்களை சேவ் செய்பவர்களும் உண்டு. இவர்களுக்காகவே வேர்டில் பேக்கப் பைல் உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளது. Fileமெனு சென்று Save As பிரிவைத் தேர்ந்தெடுங்கள். வரும் டயலாக் பாக்ஸில் Tools பட்டன் தட்டவும். பின் உங்கள் தொகுப்பிற்கேற்ப General அல்லது Save தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Always create Backup copy என்பதில் டிக் செய்து ஓகே கிளிக் செய்திடவும். இனி பேக்கப் காப்பி உருவாகும். இறுதியாக சேவ் செய்யப்பட்ட டாகுமெண்ட் பைலைப் பெற்று மீண்டும் சேவ் செய்திடலாம்.
கீகளின் செயல்பாடு அச்சடிக்க
வேர்ட் தொகுப்பில், ஒவ்வொரு குறிப்பிட்ட கீயை அழுத்துவதன் மூலம், தனியான செயல்பாட்டினை இயக்கும்படி அமைக்கலாம். இவ்வகையில் வேர்ட் ஸ்டைல், மேக்ரோ, மற்றும் சில கட்டளைகளை ஒவ்வொரு கீக்கும் ஒதுக்கலாம். எந்த கீயில் எந்த கட்டளையை மற்றும் செயல்பாட்டினை அமைத்துள்ளோம் என்று அறிந்து கொள்ள, அவற்றை அச்சடித்து வைத்துக் கொண்டால், குறிப்பிட்ட கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைவருக்கும் உதவியாக இருக்கும். இதற்குக் கீழ்க்கண்ட முறையில் அச்சிட்ட வரைவைப் பெறலாம்.
1. பைல் மெனுவில் இருந்து பிரிண்ட் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + பி (Ctrl+P) அழுத்தவும்.
2. இப்போது கிடைக்கும் பிரிண்ட் டயலாக் பாக்ஸில், இடது புறம் கீழாக Print What என ஒரு பிரிவு காணப்படும். இதில் உள்ள அம்புக் குறியை அழுத்தினால், மெனு ஒன்று காட்டப்படும்.
அதில் கீழாக உள்ள ‘Key Assignments’ என்பதனைத் தேர்ந்தெடுத்து அச்சடிக்க கட்டளை கொடுத்தால், நாம் ஒதுக்கிய கட்டளைகளும் அவற்றிற்கான கீகளும் அச்சில் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக