வியாழன், 2 ஆகஸ்ட், 2012

எக்ஸெல் டிப்ஸ்-ஒர்க் ஷீட் தேர்ந்தெடுத்தல்

Posted On Aug 2,2012,By Muthukumar
ஒர்க் ஷீட் தேர்ந்தெடுத்தல்
எக்ஸெல் புரோகிராமில், ஒர்க்புக் ஒன்றில் பல ஒர்க்ஷீட்களை அமைத்திருப்போம். இவற்றில் நாம் விரும்பும் ஒர்க்ஷீட்டினைத் திறந்து பார்க்க, மவுஸ் எடுத்து கிளிக் செய்திடாமல், கீ போர்டு வழியாகவும் செல்லலாம். Ctrl+PgUp மற்றும் Ctrl+PgDown என இரண்டு வழிகள் உள்ளன. Ctrl+PgUp முதல் ஒர்க்ஷீட்டினை நோக்கிச் செல்லும். Ctrl+PgDown கடைசி ஒர்க்ஷீட்டினை நோக்கிச் செல்லும். இறுதி ஒர்க்ஷீட்டை அடைந்த பின்னரும் இந்த கீகளை அழுத்தினால் என்னவாகும்? ஒன்றும் ஆகாது. அப்படியே நிற்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்ஷீட்களைத் திறக்க, மேலே காட்டப்பட்டுள்ள கீகளுடன் ஷிப்ட் கீயை இணைத்து இயக்க வேண்டும். Shift+Ctrl+PgUp மற்றும் Shift+Ctrl+PgDown என்ற வகையில் இவை இருக்கும்.
எக்ஸெல்:டிஜிட்டல் மதிப்பில் நேரம்:
நேரத்தை மணி, நிமிடக் கணக்கில் சொல்கையில் நாம் அனலாக் முறையில் தான் சொல்கிறோம். டிஜிட்டல் முறையில் சொல்வதில்லை. எடுத்துக் காட்டாக, பிற்பகல் 12 மணி 30 நிமிடம் என்பதை நாம் 12:30 என்கிறோம். இது அனலாக். இதனையே டிஜிட்டல் ஆகச் சொல்வது என்றால் 12:50 என்று சொல்ல வேண்டும். நாம் மணி என்ன என்று கேட்டால் மிகத் தெளிவாக பன்னிரண்டரை என்று சொல்வதில்லையா, அது போல.
எக்ஸெல் தொகுப்பில் இது போல அனலாக் அளவில் இருக்கும் நேரக் கணக்கினை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு சில பார்முலாக்கள் உள்ளன. நீங்கள் சோதித்துப் பார்த்துப் பயன் படுத்தலாம்.
முதல் பார்முலா : =(A4INT(A4))*24
இதில் A4 என்பது அனலாக் அளவில் நேரத்தைக் கொண்டுள்ள செல். அந்த செல்லில் 12:35 என நேரத்தைக் கொடுத்து இந்த பார்முலா படி மாற்றிப் பாருங்கள். விடை 12.58 எனக் கிடைக்கும்.
இன்னொரு பார்முலா: (HOUR(A1)*60+MINUTE(A1))/60
இதில் A1 என்பது அனலாக் அளவில் நேரத்தைக் கொண்டுள்ள செல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக