Posted On Aug | 2,2012,By Muthukumar |
பரந்து கிடக்கும் இந்த உலகம் சுடு இன்றைய இளைய தலைமுறையினரின் கைக் குள் வந்து விட்டது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஒரு நாணயத் திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல இன்றைய வளர்கின்ற, வளர்ச்சி அடைந்துள்ள இளைய சமுதாயம் அதற்காக தரவேண்டியவை- இழக்க வேண்டியவை ஏராளம்.
வளர்ந்து
விட்ட நாகரீகமும், அறிவியலும் பல புதிய அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டி
ருக்கின்றன. நோய் தீர்க்கும் பல அருமருந்துகளும், நோய்களை கண்டறியும் பல
கருவிகள் புரியும் ஜாலங்களும் இன்றைய சமுதாயம் பெற்ற வரம். ஆனால், அதற்காக
அவர்கள் தருகின்ற விலை மிக அதிகம்.
சுற்றி
நடக்கும் பரபரப்பான உலகத்தின் வேகத்திற்கு தன்னை தயார் செய்து கொள்கிறது
இன்றைய இளைய தலைமுறை. இந்த தயார் ஓட்டம் பள்ளி பருவத்திலேயே ஆரம்பித்து
விடுகிறது. அதிக மதிப்பெண் வாங்க வேண்டும், பெரிய வேலையில் அமரவேண்டும்,
நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு வெறி பிஞ்சு வயதிலேயே நஞ்சாக பதிக்கப்
பட்டு விடுகிறது. ஒரு விளையாட்டு கிடையாது, வேடிக்கை கிடையாது,
உறவினர்களின் உறவாடல் கிடையாது. உச்சத்தின் உச்சியை தொட்டு விடவேண்டும்
என்ற வேட்கையில் சகலத்தையும் இழக்க தயார் செய்து கொள்கிறான். மெல்ல மெல்ல
பதற்றம் அவனை அணைத்துக் கொள்கிறது. பதற்றம் மன அழுத்தத்தையும், மன
சோர்வையும் விளை விக்கிறது. அவைகளே பல வியாதிகளுக்கு வித்தாகிறது.
ஒவ்வொரு
மாணவனும் தன் வீட்டு கலா சாரத்தை மறந்து, பள்ளிகளிலும், கல்லூரி களிலும்
இருக்கின்ற மாறுபட்ட கலாசாரத் திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்கி றான்.
`என் மகனான நீ எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்' என்ற பெற்
றோர்களின் நிர்ப்பந்தம் நினைத்தாலே இனிக் கும் பள்ளிப்பருவத்தையும்,
கல்லூரி வாழ்க் கையையும் ஒரு சுமையாக, கசப்பான அனுப வமாக மாற்றி விட்டது.
பெரிய அளவில் பணத்தைக் கொட்டி கல்வி நிறுவனங்களில் பெற்றோர்கள் சேர்த்து
விடுகிறார்கள். ஆனால் தன்னுடைய மகனோ, மகளோ படும் துன்பங்களை சிந்திக்க
மறுக்கிறார்கள். பிள்ளைகளுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கி வீடு நிறைய
வைத்து விடுகிறார்கள். இதுவே ஒரு சாபமாக மாறுகிறது.
தன்னை
தயார் செய்து கொள்ள கணினியை முதலில் நாடுகிறான். கணினியினால் பல நன்மைகள்
இருந்தாலும் இன்றைய இளைஞர்கள் அதை பேஸ் புக், டுவிட்டர், சாட்டிங்
இதற்காகத்தான் அதிகம் உபயோகிக்கிறார்கள். தொடர்ந்து கணினியை உபயோகப்படுத்து
வதால் கழுத்து எலும்பு தேய்கிறது. இடுப்பு எலும்பு உராய்கிறது. இதனால் கை,
கால்கள் மரத்து போகுதல், தோள்களில் வலி, தலைசுற்றல், கண்பார்வை கோளாறுகள்
ஆகிய வியாதிகள் வருகின்றன.
தொடர்ந்து
கணினி திரையை பார்ப்பதால் கண்களில் பார்வை கோளாறு ஏற்படுகிறது. ஒரு
நிமிடத்திற்கு 14 முறை துடிக்க வேண்டிய கண் இமைகள், கூர்ந்து பார்த்து
கொண்டே இருப்பதால் 4 முறைதான் துடிக்கின்றன. இதனால் வெள்ளை விழிகளின்
நீர்ப்பசை குறைந்து எரிச்சல் உண்டாகிறது.
இன்றைய
இளைஞர்களின் உணவு முறை முற்றிலும் மாறுபட்டு விட்டது. காலையில் சீக்கிரம்
கிளம்ப வேண்டிய காரணத்தினால் 90 சதவீதம் இளைஞர்கள் காலை உணவை வீட்டில்
சாப்பிடுவதில்லை, இதை சரிசெய்ய நண்பர்களுடன் பாஸ்ட் புட், ஜங்க் புட்
இவற்றை நாடுகிறார்கள். சாப்பிடுபவர்களை கவர்வதற்காகவும், சுவையை
கூட்டுவதற்காக வும் மோனோசோடியம் ஹைட்ரேட் என்ற தாது உப்பை சேர்க்கிறார்கள்.
இது உடலுக்கு மிகவும் கெடுதல். கண்ணை கவரும் வண்ணங்களுக்காக கலர்களை,
வெகுநாட்கள் வைத்திருக்க தேவையான ரசாயனங்களை (preservative) சேர்க்கிறார்கள். இவை அனைத்தும் உடலுக்கு கெடுதி.
ஜீரண
கோளாறுகள் கண்டிப்பாக வரும். அதிக கொழுப்புள்ள பொருட்களை சாப்பிடு வதால்
உடல் பருத்து விடுகிறது. உடற்பயிற்சி இல்லாததால் எடை கூடுகிறது. எல்லா
வற்றிலும் ஒரு அலட்சியம், ஈடுபாடு இல்லாத தன்மை ஏற்படுகிறது.
இப்போது டீன் ஏஜ் பெண்கள் ஒழுங்காக மாதவிலக்கு வராமல் சிரமப்படுகின்றனர். 70 சதவீதம் டீன் ஏஜ் பெண்கள் pcod (poly cystic ovarian disease) என்ற நோயினால் தாக்கப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கிய காரணம் உடல் பருமன் தான்.
அலட்சிய
மனப்போக்கு, ஈடுபாடு இல் லாத தன்மையினால் ஒரு சிலர் தோல் வியை
சந்திக்கின்றனர். தோல்வி தரும் மன வேதனையை, மன சுமையை, மன உளைச்சலில்
இருந்து மீண்டு வர அவர் கள் மதுவை தேடுகிறார்கள். மது அருந்து வது
நாட்டிற்கும், வீட்டிற்கும் கெடுதல் என்று அறிவித்து இருந்தும் இன்றைய
நிலவரப்படி சுமார் 50 லட்சம் இளைஞர்கள் தினமும் தமிழ்நாட்டில்
குடிக்கிறார்கள். குடியினால் வரும் தீமை அனை வரும் அறிந்ததே. சுகமான
வாழ்வைத் தேடி, கடைசியில் சுமையான வாழ்க்கையை வந்தடைகிறார்கள்.
இதில்
பல பருவ கோளாறுகளும் சேர் கின்றன. ஆண், பெண் சமத்துவம் என் பதை ஆடைகளிலும்
மற்ற வக்கிர செயல்களில்தான் வெளிப்படுத்துகிறார்கள். இனக் கவர்ச்சி யால்
உணர்ச்சிவசப்பட்டு எத்தனையோ பள்ளி மாணவ, மாணவிகள் சீரழி கிறார்கள்,
எத்தனையோ குடும்பங்கள் தலைகுனிந்து போகின்றன.
நாகரீகத்தின்
இன்றைய சாபக்கேடு செல்போன். இன்றைய இளைஞர்கள் பலரின் உடலின் ஒரு அங்கமாக
செல்போன் மாறிவிட்டது. சாப்பிடும்போது, குளிக்கும்போது, ஏன் தூங்கும் போது
கூட, தலையணை அடியில் தஞ்சம் புகுந்திருக்கிறது, இந்த கைபேசி.
ஒரு
ஆராய்ச்சியாளரின் அதிர்ச்சி தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பு
கிறேன். தொடர்ந்து எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்திகள்) அனுப்பிக்கொண்டே
இருப்பதால், பல இளைஞர்களின் கட்டை விரல், அதற்கு பக்கத்தில் இருக்கும்
விரல்களின் எலும்புகள் தேய்ந்து, எலும்பை சுற்றி இருக்கும் தசை நார்கள்
இறுகிபோய் தீராவலி உண்டாகிறது. பலருக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே
இருக்கும் பழக்கம் இருக்கிறது. அல்லது பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கின்ற
பழக்கம் இருக்கிறது. இதனால் கைபேசியில் இருந்து வரும் ரேடியோ அலைகளினால்
காது கேட்கும் திறன் குறைந்து, செவிட்டுத்தன்மை விரைந்து வந்து விடுகிறது-
இவை ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் உண்மை.
இன்னும்
சில ஆராய்ச்சியாளர்கள் கைபேசியில் இருந்து வரும் அலைகளினால் புற்றுநோய்
வரும். அந்த அலைகள் எச்சில் சுரப்பிகளை தாக்கும் என்றெல்லாம்
கூறுகிறார்கள்.
குடிப்பழக்கத்திற்கு
ஒரு படி மேலோங்கி இன்றைய இளைஞர்களிடையே இருப்பது புகை பிடிப்பது. இதனால்
எவ்வளவு தீங்கு வரும் என தெரிந்தே இதற்கு அடிமை யாகிறார்கள்.
``நிமிர்ந்த
நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் தேவை'' என ஆசைப்பட்டான் முண்டாசு கவி
பாரதி. இரும்பென தசைகளும், `எக்கு'வென நரம்புகளையும் கொண்ட 100 இளைஞர் களை
என்னிடம் தாருங்கள், இந்தியாவின் தலை எழுத்தை மாற்றி காட்டு கிறேன்'' என்று
விழைந்தார் வித்தகர் விவேகானந்தர். ஆனால் இன்றைய இளைய தலை முறையோ கூன்
விழுந்த முதுகு, பார்வை குறைந்த கண்கள், தடிமனான ஊளைச் தசை கொண்ட உடல்,
எதிலும் நாட்டமில்லாத எண்ணம், தன்னம்பிக்கை இல்லாத சிந்தனை யுடன் இருந்து
கொண்டிருக்கிறது.
இந்தியாவின்
எதிர்காலம் ஒளிமயமாக இருக்கவேண்டும். அதற்காக விஞ்ஞான வளர்ச்சி யின்
நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டு அழிவுப்பாதையில் செல்லாமல் ஆக்கப்பூர்வ
மான, ஆரோக்கியமான பாதையில் செல்லவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக