சனி, 31 டிசம்பர், 2011

விண்டோஸ் 7 – நிறைகளும் குறைகளும்


சிறப்பு அம்சம்:
*பயன்படுத்துதலின் வேகம் அதிகம்.
* எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது.
* வேடிக்கை விளையாட்டு அனை த்தும் எளிதாக பயன்படுத்துதல்.
* எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போ ர்ட் செய்வது,
* ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன்
* மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி.
* அவரவருக்கு தகுந்த மாதிரி மாற்றி அமைத்தல்.
***
குறைகள் :
* ஹார்டுவேர் – பயன்பாட் டிற்கு 1GB மெமரியும் 1GHz பிராசசர் வேக மும் தேவை ப்படுகிறது இதுமிக அதிகம்.
* (Home, Premium, Professionla, Enterprise, Ultimate) என்ற ஒவ் வொன் றிலும் சில சிறப்பம்சங்கள் ஒன்றுபோல் இல்லை.
* 64 bit விண்டோஸ் 7-ல் தான் அனைத்து பயன்களையும் பெற முடிகிறது.
* போட்டோ எடிட்டிங் , விடியோ எடிட்டிங் , காலண்டர் , அட்ரஸ்புக் , சாட், மெயில் அனைத்துக்கும் தனியாக காசு வாங்குவது.
* எந்த ஆப்சனும் இல்லாமல் சில error வெளியிடுகிறது.

கணினி கீபோர்டில் இல்லாத நூற்றுகணக்கான Special Character களை உபயோகிக்க

 Posted On Dec 31,2011,By Muthukumar

Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி கீபோர்ட்களில் அனைத்து special Character-களும் இருக்காது. நூற்றுகணக்கான Special character-கள் உள்ளது. இந்த ஸ்பெஷல் கேரக்டர் அனைத்தையும் எப்படி நம் கணினியில் உபயோகிப்பது என பார்க்கலாம். இதற்கென ஒரு இணைய தளம் உள்ளது. இந்த தளத்தில் எண்ணற்ற ஸ்பெஷல் கேரக்டர்கள் அடங்கியுள்ளது. இந்த ஸ்பெஷல் கேரக்டர்கள் அனைடும் பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. 
முதலில் இந்த Copy Paste Character லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். 


இதில் உங்களுக்கு தேவையான ஸ்பெஷல் கேரக்டர் மீது கிளிக் செய்தால் அந்த ஸ்பெஷல் கேரக்டர் காப்பி செய்யப்படும். மேலே உள்ள படத்தில் நான் வட்டமிட்டு காட்டி இருப்பதை adjust செய்து ஸ்பெஷல் கேரக்டர் அளவை பெரிது படுத்தி கொள்ளலாம். 


மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்களை Html Code ஆகவும் காப்பி செய்து கொள்ளலாம். இப்படி நூற்றுகணக்கான ஸ்பெஷல் கேரக்டர்களையும் உங்கள் டாகுமேன்டிலோ பதிவிலோ உபயோகித்து கொள்ளலாம்.  இந்த தளம் டிசைனர்களுக்கு மிகவும் பயனுள்ள தளமாக இருக்கும். 

பேஸ்புக்கின் புதிய இலவச மென்பொருள் Chat Messenger டவுன்லோட் செய்ய



Posted On Dec 31,2011,By Muthukumar

சமூக தளங்களில் முதல் இடத்தில் இருப்பது பேஸ்புக் இணையதளம். உலகம் முழுவதும் 800மில்லியன் வாசகர்களை கொண்டே மிகப்பெரிய சமூக இணையதளம். இந்த தளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளது. இப்பொழுது இந்த நிறுவனம் புதிய  Chat messanger இலவச மென்பொருள் ஒன்றை வெளிட்டுள்ளது.  Chat messanger  மென்பொருள் மூலம் பேஸ்புக் தளத்திற்கு செல்லாமலே கணினியில் இருந்தே வாசகர்களிடம் அரட்டை அடிக்கலாம், உங்கள் நண்பர்கள் புதிதாக பகிர்ந்த பதிவுகளை காணலாம், மற்றும் உடனுக்குடன் notifications காணலாம். இந்த மென்பொருளை விண்டோஸ் 7 கணினிகளில் மட்டுமே நிறுவ முடியும். இதற்க்கு முன்னர் மூன்றாம் தர மென்பொருளே chat செய்ய இருந்தது. இப்பொழுது பேஸ்புக் நிறுவனமே இந்த மென்பொருளை வெளியிட்டது.


  • இதற்க்கு முதலில் இந்தFacebook Messenger லிங்கில் கிளிக் செய்து பேஸ்புக் தளத்திற்கு சென்று அங்கு உள்ள one-time setup என்ற லிங்கை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • மென்பொருள் டவுன்லோட் ஆகி முடிந்ததும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 
  • இன்ஸ்டால் ஆகியவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • அதில் Login என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு விண்டோ வரும் அதில் Keep me Logged in என்ற பட்டனை அழுத்தவும். 
  • அவ்வளவு தான் உங்கள் நண்பர்களில் ஆன்லைனில் இருப்பவர்களை இந்த மென்பொருள் காட்டும். அதில் விருப்பமானவர்களுடன் அரட்டை அடித்து மகிழலாம். 
  • மற்றும் ஒரே விண்டோவில் பலபேருடன் அரட்டை அடிக்கும் வசதியும் இதில் உள்ளது.
Note: இந்த மென்பொருளில் logout வசதி இல்லை ஆகவே உலவியில் பேஸ்புக்கில் logout கொடுத்தால் மட்டுமே logout ஆகும்.

எத்தனை வகை தொடுதிரைகள்

Posted on Dec 30,2011,By Muthukumar
மொபைல் போனில் இப்போது வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி எதிர்பார்க்கும் ஓர் ஆடம்பரம் தொடுதிரையாகும். இது ஆடம்பரம் என்ற நிலையை விட்டு, இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிலையை நோக்கி, கட்டாய அம்சமாக மாறி வருகிறது. இது பற்றி மேலும் அறியச் செல்கையில் இருவகை தொடுதிரைகள் இருப்பதாக நிறுவனங்கள் அறிவிக்கின்றன. அவை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மற்றும் ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன். அவை குறித்து இங்கு காணலாம்.
தொடுதிரைகள் மொபைல் போனில் மட்டுமின்றி, டேப்ளட் பிசி, லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் மானிட்டர் களிலும் தற்போது கிடைக்கின்றன. ரெசிஸ்டிவ் ஸ்கிரீன் தொழில் நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தில், திரையின் மேல் புறமாக எந்த ஒரு தொடுதலையும் சந்தித்து எதிர்கொண்டு செயல்படும் பொருள் பூசப்படுகிறது. கீழாக கடத்தும் தகடு ஒன்று அமைக்கப்படுகிறது. இரண்டிற்கும் இடையே மிகச் சிறிய அளவிலான காற்று இடைவெளி தரப்படுகிறது. இதனால், இத்திரையைத் தொடுகையில் அந்த உணர்வானது நெட்டு மற்றும் படுக்கை வச அழுத்ததின் அளவில் உணரப்பட்டு அதற்கான சர்க்யூட் இணைக்கப்பட்டு சிக்னல் உள்ளே அனுப்பப்படுகிறது. தொடு உணர்ச்சியில் இது செயல்படுவதால், இதனை இயக்க தனியான ஒரு ஸ்டைலஸ் எனப்படும் பேனா தேவை இல்லை. ஆனால், தேவையற்ற தொடுதலையும் இது எடுத்துக் கொண்டு செயல்படுவதால், நாம் எதிர் பார்க்காத அழைப்புகளை இது ஏற்படுத்த லாம். கம்ப்யூட்டர்களில், தேவைப்படாத செயல்பாடுகளை இயக்கலாம்.
கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பமும் அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தில், பாதுகாப்பான, காப்பிடப் பட்ட வகையிலான பூச்சின் உள்ளாக ஊடுகடத்தும் பொருள் வைக்கப் படுகிறது. பொதுவாக ஊடுகடத்தும் பொருளாக இண்டியம் டின் ஆக்ஸைட் பயன்படுத்தப்படுகிறது. காப்பிடப்பட்ட பூச்சாக கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது. ஊடு கடத்தும் பொருள், மேலாக உள்ள கண்ணாடித் திரையுடன் தொடர்பு கொள்கையில், அதன் எலக்ட்ரிக் பீல்டு தன்மை மாறுகிறது. தொடர்பு ஏற்படுத்தும் தொடும் இடத்தின் நான்கு முனைகளுக் கேற்றபடி சிக்னல்கள் செலுத்தப் படுகின்றன. இதில் என்ன சிக்கல் எனில், கை விரல்களில் உறை அணிந்து கொண்டோ, அல்லது வேறு பொருள் கொண்டு மூடியோ இதனை இயக்கினால், செயல்பாடுகள் நாம் எதிர்பார்க்காத வகையில் இருக்கும்.
இந்த தொழில் நுட்பங்கள் கொண்ட இருவகை திரைகளும் தற்போது புழக்கத்தில் செம்மையாகவே இயங்கி வருகின்றன. இருப்பினும், நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் எந்த வகை உள்ளது என்று தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

கால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம்.

Posted On Dec 30,2011,By Muthukumar




உலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .INFO  
எனும் பயனுள்ள தளம் .


இந்த தளம் மிகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிக பயனுள்ளதளமாக விளங்குகிறது .



இந்த தளத்தில் சாதரணமாக ஓர் ஆண்டினை உள்ளிட்டு GO  என்பதை கிளிக் செய்தால் அந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இடம்பெற்ற வரலாற்று சம்பவங்களை பட்டியலிடுகிறது இந்த தளம் .

அத்துடன் தரப்படும் சம்பவங்களை பற்றி மேலும் அறிய இணைய இணைப்புக்களையும் ,கூகுளே தேட உதவி சொற்களையும் , தொடர்புடைய படங்களை பார்வையிட வசதியினையும் தருகிறது. தரப்படும் சம்பவங்களுக்கு அருகில் கீழே  உள்ள குறியீடுகளை கிளிக் செய்வதன் மூலம் இந்த வசதியினை பெறலாம்.

இந்த தளத்தில் கால அடிப்படையில் தேடுவது மட்டுமன்றி பிராந்தியங்கள் வாரியாக தேடல் செய்ய முடியும். 
தள முகவரி TIMESEARCH .INFO 


டெக்ஸ்டாப் ஐ-கான்களை மறையவைக்க



படிக்கும் காலங்களில் வகுப்பறை கரும்பலகைகளை மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு துடைப்பார்கள்.அதுபோல நாம் நமது டெக்ஸ்டாப்பினை சுத்தமாக குறிப்பிட்ட நேரம்உபயொகிக்காமல் இருக்கும்போது அவ்வாறு செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது டெக்ஸ்டாப்பில் எந்த ஒரு ஐ-கானும் இருக்காது.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும் அதில் எவ்வளவு நேரத்திற்குபின்னர் உங்களுக்கு டெக்ஸ்டாப்பில் உள்ள ஐ-கான்கள் மறையவேண்டுமோ அந்த நேரத்தை செட்செய்திடவும்.
ஒரு நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை நாம்நேரம் செட்செய்திடலாம்.அந்த நேரம் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட ஸ்லைடில் நேரம் நகர ஆரம்பிக்கும். குறிப்பிடட நேரம் ஆனதும் உங்களுக்கு டெக்ஸ்டாப்பில் உள்ள ஐ-கான்கள் மறைந்துவிடும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

உங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற



Posted On Dec 30,2011,By Muthukumar

இணையத்தில் நம் சொந்த கருத்துக்களை பகிர இந்த பிளாக்ஸ்பாட் தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. வலைப்பதிவு என்பது என்ன என்று கூட தெரியாமல்  பதிவர்களில் பெரும்பாலானோர்(என்னையும் சேர்த்து) விளையாட்டாக வலைப்பதிவு தொடங்கி பதிவு போடுகிறோம். இப்படி விளையாட்டாக பதிவு போட ஆரம்பித்து நாளடைவில் நாம் விளையாட்டாகா தொடங்கிய வலைப்பதிவு பிரபலமானவுடன் நமக்கென்று ஒரு சொந்த டொமைன் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றும். 

ஆனால் இப்படி தொடங்கினால் இந்த இப்பொழுது வரும் வாசகர்களை இழந்து விடுவோமோ அல்லது புது டொமைன் வாங்கினால் நாம் தளத்தில் உள்ள அனைத்து விட்ஜெட்டுக்களையும் திரும்பவும் இணைக்கவேண்டுமா என்ற அச்சத்தின் பேரிலேயே பெரும்பாலானோர் டொமைன் வாங்குவதை தவிர்க்கின்றனர். கவைலையை விடுங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்றுவது எவ்வாறு என்று கூறுகின்றேன். இதை செய்ய நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை நம் பிளாக்கிலேயே செய்து முடித்து விடலாம். (ஆனால் ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் இப்பொழுது உங்கள் பிளாக்கிற்கு இருக்கும் அலெக்சா ரேங்க் புதிய டொமைன் வாங்கினால் இருக்காது)
  • Dassboard - Settings - Publishing -பகுதிக்கு செல்லுங்கள்.
  • சென்று அங்கு உள்ள Custom Domain என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.வரும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய டொமைன் பெயரை சரியாக கொடுக்கவும்.

  • பெயரை கொடுத்து Check Availability என்பதை க்ளிக் செய்யவும். நீங்கள் கொடுத்த URL காலியாக இருந்தால் yourdomain.com is available என்ற செய்தி வரும் இல்லையேல் உங்களுக்கு கொடுத்த பெயருக்கு சார்ந்து உள்ள URL கொடுக்கும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
  • அடுத்து வரும் விண்டோவில் Continue to registration என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் உங்களின் தகவல்களை சரியாக பொருத்தி accept கொடுக்கவும்.
  • அடுத்து payment செய்யும் விண்டோ வரும் இதில் உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டின் எண்ணை சரியாக கொடுத்து உங்களுடைய domain உருவாக்கி கொள்ளுங்கள்.
  • கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும். 

அவ்வளவு தான் இனி உங்களுடைய பிளாக்ஸ்பாட் URL கொடுத்தால் நேரடியாக உங்கள் புதிய டொமைன் url தளம் ஓபன் ஆகும். ஆகையால் உங்கள் வாசகர்களுக்கும் எந்த கடினமும் இருக்காது.

Photobucket

புதிய Google Bar-ஐ உடனே பெறுவது எப்படி?





  கூகிளின் புதிய தோற்றம் - New Google Bar  உடனடியாக பெறுவது எப்படி? என்று இங்கு பார்ப்போம்.

இதனைப் பெற கூகிள் க்ரோம் (Google Chrome) உலவியை பயன்படுத்த வேண்டும்.

1. கூகிள் க்ரோம் உலவியில் திறந்து, இங்கே க்ளிக் செய்து "Edit This Cookie" என்னும் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள்.


2. பிறகு Google.com தளத்திற்கு செல்லுங்கள். அங்கு Rigt Click செய்து Edit Cookies என்பதை கிளிக் செய்யுங்கள்.


3. பிறகு வரும் பக்கத்தில் PREF என்பதை கிளிக் செய்து, அங்கு Value என்ற இடத்தில் பின்வருபவற்றை பேஸ்ட் செய்யுங்கள்.

ID=03fd476a699d6487:U=88e8716486ff1e5d:FF=0:LD=en:CR=2:TM=1322688084:
LM=13226880­85:S=McEsyvcXKMiVfGds


அவ்வாறு கொடுத்தப் பின் கீழே Submit Cookie Changes என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. இப்பொழுது மீண்டும் Google.com தளத்திற்கு சென்றால் புதிய Google Bar இருக்கும்.


இதில் More என்பதை கிளிக் செய்தால் மேலும் பல தளங்களின் பட்டியலைக் காட்டும்.



ஜிமெயில் தளத்திலும் இந்த புதிய மாற்றங்கள் இருக்கும்.


இதனை பெற்ற பிறகு நாம் நிறுவிய "Edit This Cookies" நீட்சியை நீக்கிவிடலாம். உலவியின் மேலே வலதுபுறம் உள்ள Cookies படத்தில் Right Click செய்து, Uninstall என்பதை கிளிக் செய்தால் அந்த நீட்சி நீங்கிவிடும்.


கவனிக்க: க்ரோமில் இந்த வசதியை பெற்று பிறகு மற்ற உலவிகளைப் பயன்படுத்தினால் பழையபடி தான் இருக்கும். க்ரோம் உலவியில் மட்டும் தான் இதனை பெற முடியும்.



விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு

Posted On Dec 30,2011,By Muthukumar

விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளங்களை USB பென்டிரைவ் மூலம் கணணியில் ஏற்றிக் கொள்ளலாம்.
இந்த செயல்முறையை நான்கு இலகுவான படிமுறைகளை கொண்டு multiboot USB டிரைவ் மூலம் செயல்படுத்தலாம்.
இந்த செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களது USB கட்டாயம் 4 GB அல்லது 8 GB யாக இருக்க வேண்டும். அத்துடன் FAT32 கோப்பு கணணியுடன் போர்மட் பண்ணி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அனைத்தையும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் WinSetupFromUSB என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் செய்த பின்னர் அந்த மென்பொருளை உங்களது கணணியில் திறந்து கொள்ள வேண்டும்.
1. முதலில் நீங்கள் போர்மட் செய்த USB டிரைவை கணணியில் புகுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் தரவிறக்கம் செய்த WinSetupFromUSB_1-0-beta7.exe கோப்பை செயலாக்கம்(Run) செய்யுங்கள்.
2. அந்த மென்பொருள் உங்களது USB யை கண்டுபிடிக்கின்றதா(detect ) என உறுதி செய்து கொள்ளுங்கள்.
3. அடுத்து Windows 2000/XP/2003 Setup என்ற படிமத்தில் Windows XP installation கோப்பின் இடத்தை தெரிவு செய்வதுடன், அருகில் உள்ள சரிபார்க்கும் பெட்டியையும்(check box) தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து Vista/7/Server 2008 Setup/PE/RecoveryISO என்ற படிமத்தில் Windows 7 installation கோப்பு உள்ள இடத்தை தெரிவு செய்தவுடன், இந்த இரண்டு சந்தர்ப்பத்திலும், உங்களிடம் Operating சிஸ்டம், ISO images யாக இருக்கும் என்றால் அதை WinRar or 7-Zip கொண்டு Extract செய்ய வேண்டும்.
4. இறுதியாக GO என்ற பொத்தானை அழுத்தினால் போதும் அது தன் வேலையை தொடங்கி விடும்.

மைக்ரோசாப்ட் இல் இருந்து ஒரு இலவச ஆன்டிவைரஸ் மென்பொருள்




விண்டோஸ் கணினியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக முக்கியம். அதே போல் ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்களும் இருக்கின்றன.

ஆனால் அவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்தே கிடைக்கின்ற இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்திப் பார்க்கலாம்.

ஏனைய மென்பொருட்கள் போன்று இதுவும் சிறப்பாக இயங்குவதாக கூறப்படுகின்றது.

இதன் சிறப்பம்சங்கள்

இலகுவான வடிவமைப்பு, ரியல் டைம் பாதுகாப்பு,  கணினியின் வேகத்தை பாதிக்காது, குறைந்தளவு இடத்தை பிடித்தல் போன்றவை ஆகும்.

குறிப்பு -
Microsoft Security Essentials ஐ பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் விண்டோஸ் பதிப்பு சட்டப்படி பதிவி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தரவிறக்கம் செய்ய - http://windows.microsoft.com/en-US/windows/products/security-essentials

1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச – GOOGLE VOICE



இந்தியாவிற்கு பேச 1 ரூபாய், அமெரிக்கா, கனடாவிற்கு வெறும் 50 பைசா மட்டுமே. என்கிறார் , நிலவன்பன் அவரின் நிலாப் பெண் என்ற வலைப்பதிவில். இப்பதிவை மீள் பிரசுரம் செய்ய அனுமதித்தமைக்கு நன்றி தெரிவித்து இங்கே தருகின்றோம்.எதையும் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.

ஜிமெயிலிலிருந்து நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம்.

மிக மிக தெளிவான நெட்வொர்க்.(கணினியில் WINDOWS, LINUX, MAC)

மொபைலில் ANDROID, IPHONE, IPAD, IPOD, BLACKBERRY ஆகிய மாடல்களிலும் வேலை செய்கிறது.

தெருக்களில் விற்கும் சில மொக்கையான இன்டர்நேஷனல் காலிங் கார்டுகளை வாங்கி அரைமணி நேரம் டவுன்லோட் செய்து மூன்று மணிநேரம் தொடர்பு கொள்ள முயற்சித்து, ஒன்று இந்தப்பக்கம் கேட்கும், அல்லது அந்தப்பக்கம் மட்டும் கேட்கும். ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து எனக்கு போன் செய்து சொன்னார் – தயவு செய்து உன் லேப்டாப்பில் இருந்து கூப்பிடாதே!!(என்னே வெறி!)

ஆனால் கூகிள் வாய்ஸ் அப்படியல்ல! கீழுள்ள முகவரிக்குச் சென்று உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து குறித்த பட்ச தொகை 10 டாலர் ரீசார்ஜ் (Any Credit card or Debit card பயன்படுத்தி) செய்ய வேண்டும். உங்களுக்கு உறுதிப்படுத்த மெயில் ஒன்று வரும், அதை கிளிக் செய்தால் ஒரு நாளைக்குள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

எப்படி கால் செய்வது??

ஜிமெயில் கணக்கில் நுழைந்து இடதுபுறம் உள்ள Call Phone கிளிக் செய்தால் போதும் – உலகின் எந்த என்னையும் தொடர்பு கொள்ளலாம்.

சிறப்புகள்:-

ஐந்தே நொடிகளில் அழைக்கும் நபருடன் பேசலாம்

மிக மிகத் தெளிவான வாய்ஸ்.

ஒரே நேரத்தில் பல நபர்களை அழைக்கலாம் (மற்றதை ஹோல்டில் வைத்து)

ஸ்கைப்பை விட குறைந்த கட்டணம் – 1 RUPEE/MIN (0.02 USD)

50 INTERNATIONAL SMS இலவசம்

பேசுவதை ரெகார்ட் செய்து கொள்ளலாம்.

எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் (தீர்ர வரைக்கும்தானுங்கோ)

PHONEBOOK சேமிக்கும் வசதி.

அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிப்போர்களுக்கு அவர்களுக்குள் இலவசம்,

மேலும் பல சேவைகள், VOICE MESSAGE & MORE

மற்ற நாடுகளுக்கான கட்டண விபரம் மற்றும் இதர விபரங்களுக்கு :- https://www.google.com/voice/b/0?pli=1

இணையத்தின் வேகத்தை இலகுவாக அதிகரிக்கும் - மென்பொருள்



இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு
எவ்வாறான நடவடிக்கைகளை கணினியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Auslogics Internet Optimizer  என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான
ஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.

Auslogics Internet Optimizer  கணினியில் நிறுவிய பின்னர் முதலில்

உங்கள் இணைய வேகத்தை தேர்வு செய்து
Analyze ஐ அழுத்துங்கள். இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும்.



அதில் விரும்பிய அல்லது அனைத்தையும் தேர்வு செய்து
Optimize  ஐ அழுத்துங்கள்.

அதன் பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்தல் வேண்டும்.



Manual Optimization  ஐ தேர்வு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்



தரவிறக்கம் செய்ய - http://www.auslogics.com/en/

விதவிதமான அழகான பேஸ்புக் Timeline Cover Banner வைக்க சிறந்த 5 தளங்கள்



Posted On Dec 30,2011,By Muthukumar

பேஸ்புக்கின் புதிய Timeline தோற்றத்தில் Cover என்ற ஒரு புதிய வசதி உள்ளது. இந்த இடத்தில் நமக்கு தேவையான போட்டோவை வைத்து கொள்ளலாம். இணையத்தில் ஏராளமான போட்டோக்கள் இருந்தாலும் அனைத்தும் பேஸ்புக் timeline cover ஏற்ற அளவில்(size) இருக்காது. ஆதலால் பேஸ்புக் timeline போட்டோக்கள் வைப்பதற்கென்றே சில பிரத்யோகமான தளங்கள் உள்ளது. அதில் சிறந்த 5 தளங்களை பற்றி காண்போம்.


1)facebooktimelinebanner.com
இந்த தளத்தில் சிறந்த cover பேனர்கள் உள்ளது. பேனர்கள் பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த தளத்தில் உங்களுடைய Banner அப்லோட் செய்யும் வசதியும் உள்ளது.

2)facebooktimelinebanners.com
அழகழகான பேனர்கள் நிறைய உள்ளது இந்த தளத்தில். பேனர்கள் பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

3.99covers.com
இந்த தளமும் இந்த பட்டியலில் அடங்கும் மிக சிறந்த banner இந்த தளத்தில் உள்ளது.
இந்த தளத்திலும் விதவித மான அழகான பேஸ்புக் கவர் புகைப்படங்கள் உள்ளது. 
இங்கு விதவிதமான அழகான பேஸ்புக் பேனர்கள் உள்ளது. இதில் உங்களுக்கு தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். மற்றும் இதில் உள்ள banner களை உங்கள் விருப்பப்படி மாற்றி கொள்ளலாம். 
இந்த ஐந்து தளங்களில் இருந்தும் விதவிதமான பேனர்கள் வைத்து ஒவ்வொரு நாளும் உங்கள் பேஸ்புக் கணக்கை அழகாக மாற்றுங்கள். 

3ஜி வை-பி இணைந்த பட்ஜெட் போன்கள்


தொலை தொடர்புத் துறையின் நவீன அறிமுகமாக மக்களிடையே பரவி வருவது 3ஜி பயன்பாடு. தொடக்கத்தில் இதெல்லாம் நமக்கெதுக்கு என்று எண்ணி யவர்கள், தங்கள் மொபைல் சேவை நிறுவனத்திடம் கே ட்டு பெற்று பயன்படுத்தத் தொடங்கி யுள்ளனர். இந்த வசதியுடன் வை-பி எனப் படும் வசதியும் பெரும் பாலா ன போன்களில் கொடு க்க ப்படுகிறது. இந்த வகை யில், பலரும் வாங்கும் வகை யில் ரூ.10,000க்கும் குறைவா ன விலையில் மக்கள் அதி கம் வாங்கும் மொபைல் போ ன்கள் எவை என்று சந்தை யில் சுற்றிப் பார்க்கும் போது, கீழ்க்காணும் போன்கள் தென் பட்டன.
1. மைக்ரோமேக்ஸ் க்யூ 80: இது ஒரு ஸ்மார்ட் போன் இல்லை என் றாலும், இதன் 3G மற்றும் WiFi சப்போர்ட் இதற்கு தனி அந்தஸ்தினைத் தந்துள்ளது. ஜாவா அடிப்படையில் இயங்கும் இந்த மொபைல் போனில் நிம்பஸ், நியூ ஷன்ட், என்.ஜி.பே மற்றும் புளூம்பெர்க் போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன. எளிதாக டைப் செய்திட வசதியாக இதன் கீ போர்ட் அமைக்கப் பட்டுள்ளது. மற்ற மைக்ரோமேக்ஸ் போன்களுக்கு மாற்றாக இதில் ஆப்டிகல் ட்ராக் பேட் தரப்பட்டுள்ளது. 240 x 320 ரெசல்யூசன் கொ ண்ட 2.4 அங்குல டி.எப்.டி. திரை, நெட்வொர்க் இணைப்பிற்கு 3G, EDGE /GPRS, WiFi புளுடூத், யு.எஸ்.பி.2., 3 மெகா பிக்ஸெல் கேமரா, வீடியோ பதிவு, இரண்டாவதாக விஜிஏ கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக்கெட், 8 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறன் கொண்ட மெமரி ஆகியவை இதன் சிறப் பம்சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ. 4,900.
2. மைக்ரோமேக்ஸ் ஏ 70: இந்த மொபைல் போன் குறித்து ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்டது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், நெட்வொர்க் இணைப்பிற்கு 3G, EDGE/GPRS, WiFi புளுடூத், 5 மெகா பிக்ஸெல் ஆட் டோ போகஸ் கேமரா, 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி ஆகியவை மற்ற மைக்ரோமாக்ஸ் போன்களிலிருந்து இதனை வேறு படுத்திக் காட்டுகின்றன. இத ன் அதிகபட்சவிலை ரூ. ,200.
3. லாவா எஸ்12: இந்நிறுவ னம் இன்னும் பிரபலமாக வில்லை என்றா லும், இந்த எஸ்12 மொபைல் பார்க்கப் பட வேண் டிய ஒன்றாகும். ஆண்ட்ராய்ட் மொபைல் போ ன்களில் இல்லாத ஒருவகை வடிவமைப்பு இதி ல் உள்ளது. இதில் ப்ராசசர் இயங்கிய போதும், இதன் முப்பரிமாண யூசர் இன்டர்பேஸ் எந்த பிர ச்னையும் இன்றி இயங்குகி றது. இந்தியாவை மையப்ப டுத்தி பல அப்ளிகேஷன்கள் இதில் தரப்படுள்ளன. டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தி தளம் தரப்பட்டு ள்ளது. இதன் பேட்டரி சார்ஜ் செய்த பின்னர் இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்தும் வகையில் மின்சக்தியை அளிக்கிறது.இதன் மற்ற அம் சங்கள்: 
480 x 320 பிக்ஸல்களுடன் 3.2 டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், நெட் வொர்க் இணைப்பிற்கும் ஹாட் ஸ்பாட் இயக்கத்திற்கும் 3G, EDGE/GPRS, WiFi தொழில் நுட்பம், அஎககு சப்போர்ட்டு டன் GPS, A2DP இணைந்த புளுடூத், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 640 x 480 ரெசல்யூசனில் வீடீயோ பதிவு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொ ண்ட நினைவகம். இதன் அதிக பட்ச விலை ரூ.8,200.
4. சாம்சங் காலக்ஸி பிட் எஸ் 5670: ஆண்ட்ராய்ட் 2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், சற்றே பெரிய திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் வை-பி மற்றும் 3ஜி சேவையினைத் தேடுபவர்களின் கவன த்தை ஈர்க்கிறது. SWYPE இதில் பதியப்பட்டு, DNSe ஒலி தொழில் நுட்ப த்துடன் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் கொண்ட 5 எம்பி கேமரா பல செட்டிங்ஸ் வசதியுடன் உள்ளது. இதன் ரெசல்யூசன் 320 x 240 ஆக உள்ளது. தொடுதிரை இயக்கத்தில் TouchWiz 3.0 UI யூசர் இன்டர்பேஸ் இயங்குகிறது. நெட்வொர்க் இணைப்பிற்கும் ஹாட் ஸ்பாட் இயக்கத் திற்கும் 3G, EDGE/GPRS, WiFi தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. கூடுத லாக, AGPS சப்போர்ட்டுடன் GPS, A2DP இணைந்த புளுடூத் கிடைக்கிறது. 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொண்ட நினைவகம் தரப்ப ட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,100.
5.நோக்கியா இ5: ஓராண்டுக்கு முன்னர் சந்தையில் இது அறிமுகமாகி யிருந்தாலும், இன்றும் பலரின் விருப்பத் தேர்வாக உள்ளது. வசதியான குவெர்ட்டி கீ போர்ட், சிம்பியன் பதிப்பு 9.3 இயக்கம் என அனைத்தும் கூடு தல் வசதியுடன் உள்ளன. துல்லிதமான, ரம்மியமான ஒலி வெளிப் பாட்டினைத் தரும் சிறப்பினைக் கட்டாயம் இங்கே குறிப்பிட வேண்டும். கூடுதலாக எம்.எஸ்.ஆபீஸ், ஸிப் பைல் வசதி, பி.டி.எப். ரீடர் ஆகி யவையும் கிடைக்கின்றன. இதன் பேட்டரியும் நீண்ட நாள் உழைப் பதாகவும், நீண்ட நேரப் பயன்பாட்டினைத் தருவதாகவும் தரப்பட்டுள் ளது. மற்ற சிறப்பம்சங்கள்: இதன் திரை 2.3 அங்குல அகலத்தில் டி.எப்.டி. திரை 320 x 240 ரெசல்யூசனுடன் பளிச்சிடுகிறது. நெட்வொர்க் இணை ப்பிற்கும் ஹாட் ஸ்பாட் இயக்கத்திற்கும் 3G, EDGE/GPRS, WiFi தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. 5 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய ராம் நினைவகம் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.8,700. 
இந்த பட்டியலில் சில மொபைல் போன்கள் விடுபட்டுப் போயிருக் கலாம். இருப்பினும் மேலே தரப்பட்டவை பலரின் விருப்பத் தேர்வாக, குறைந்த விலையில் கிடைப்பனவாக இருப்பதால் தரப்பட்டுள்ளன. 


வியாழன், 29 டிசம்பர், 2011

ஒரே வாரத்தில் உங்கள் ப்ளாக் அலெக்சா ராங்க் முன்னேற 5 வழிகள்




ஒரே வாரத்தில் உங்கள் முன்னேற 5 வழிகள்

alexa ranking அலெக்சா ராங்க்
alexa ranking ராங்க்
அலெக்சா என்பது அமேசன்.காம் என்ற பிரபல வலையுலக அங்காடித் தளத்தின் ஒரு கிளை தளம். இது உலகில் உள்ள எல்லா வலை தளங்களுக்கும் ராங்கிக் தருகிறது. அலெக்சா டூல்பார் என்ற ஒன்றை பல ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களில் நிறுவி அதன் மூலம் எந்தந்த வலைதளங்களுக்கு எவ்வளுவு வருகிறது என பார்த்து ராங்கிங்க் போடுகிறது அலெக்சா ( எவ்வளவு குறைவான எண்ணிக்கையோ அவ்வளவு நல்லது ) . சரி, அலெக்சா ராங்கிங்க் ஏன் முக்கியம்?

1. உங்கள் வலைதளத்தின் மதிப்பை மற்றவர்கள் அலெக்சா ராங்கிங்க் மூலம் கணிக்கிறார்கள்.
2. நீங்கள் ஆட்சென்ஸ் தவிர மற்ற விளம்பரங்களை நம்பியிருந்தால் நல்ல அலெக்சா ரேங்கிங்க் இருந்தால் விளம்பர கம்பெனிகள் அதிக வருமானம் தருகிறார்கள்.
நமது வலைதளம் அல்லது ப்ளாக்கில் முன்னேற்றம் காண எளிய ஐந்து வழிகளை தொகுத்து அளித்திருக்கிறோம்… படித்து பின்பற்றுங்கள் !
  1. டூல்பாரை முதலில் டவுன்லோட் செய்யுங்கள் ! அத்ற்கு நீங்கள் செல்ல வேண்டிய லிங்க் Alexa toolbar . இந்த டூல்பார் முற்றிலும் இலவசம். மேலும் , இது உங்கள் ப்ளாக்கின் அலெக்சா ராங்கிங்க் என்ன ? மற்ற தளங்களின் அலெக்சா ராங்கிங்க் என்ன என உங்களுக்கு தெரியப்படுத்தும்.
  2. உங்கள் வலைதளத்தில் அல்லது ப்ளாக்கில் ஒரு அலெக்சா ராங்க் விட்கெட் நிறுவுங்கள் ! Alexa rank widget.
  3. உங்கள் நண்பர்களை அலெக்சா டூல்பாரை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ள சொல்லுங்கள். அதன் மூலம் அவர்கள் உங்கள் தளத்திற்கு வருகை தரும்போது உங்கள் அலெக்சா ட்ராஃபிக் ராங்க் கூடும்.
  4. உங்கள் வலை தளம் உங்களுடையதுதான் என அலெக்சா வலை தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் . அதற்கு நீங்கள் போக வேண்டிய முகவரி…. http://www.alexa.com/siteowners
  5. உங்களைப் போன்ற அல்லது உங்களை விட நல்ல அலெக்சா ட்ராஃபிக் உள்ள தளங்களுடன் லிங்க் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளூங்கள் !

இவை அனைத்தும் செய்தால் நிச்சயம் அலெக்சா ராங்க் நல்ல முன்னேற்றம் பெறும் !

உங்கள் இணையத்தளம் அல்லது வலைத்தளத்திற்கு லோகோ சுலபமாக வடிவமைக்க


 

நாளுக்கு நாள் புதிது புதிதாக இணையத்தளங்களும் ,வலைத்தளங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன . எனவே மற்ற இணைய தளங்களில் இருந்து உங்கள் தளத்தினை வேறுபடுத்தி கொள்ள மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் இணையத்தளங்களிற்கு லோகோக்கள் உருவாக்கப்பட வேண்டும் .


         அனால் அனைவராலும் கலைத்திறன் கொண்ட லோகோக்க்களை உருவாக்குவது என்பது கடினம் . எனவே உங்கள் தளத்திற்கு சிறந்த லோகோக்களை உருவாக்க LOGOTYPEMAKER என்ற தளம் உதவுகிறது . 




இந்த தளத்தின் உதவியுடன் உங்கள் இணையத்தளங்களுக்கு மட்டுமல்ல வணிக நிறுவனங்களுக்கும் லோகோக்களை வடிவமைக்க உதவும் . 



இந்த தளத்திற்கு சென்று உங்கள் தளத்தின் பெயர் அல்லது வணிக நிறுவனத்தின் பெயர் உள்ளீடு செய்து GENERATE LOGO என்பதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது உங்களுக்கு சில லோகோக்கள் தரப்படும் இவை பிடிக்கவில்லை என்றால் REFRESH என்பதை கிளிக் செய்வதன் மூலம் மேலும் பல லோகோ வடிவமைப்புகளை பெறலாம் . இவற்றில் இருந்து உங்களுக்கு பிடித்த லோகோவினை தெரிவு செய்து SAVE பட்டனை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும் . 




லோகோவின் சின்னத்தை மாற்றவும் , நிறத்தை மாற்ற , எழுத்தின் வடிவத்தை
மற்ற விரும்பினால் கீழே படத்தில் காட்டியவாறு கியர் சின்னத்தில் கிளிக்
செய்து மாற்ற முடியும் . 



மேலே படத்தில் கட்டிய பட்டனை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல் தோன்றும் 


இந்த பக்கத்திலே எழுத்தின் வடிவத்தை நிறத்தை மாற்றியமைத்து பின்னர் SAVE   பட்டனை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும் . 


தள முகவரி http://logotypemaker.com



கூகுளில் சில மேஜிக் வார்த்தைகள் [Let it Snow, Tilt, Hanukkah, Do a Barrel roll]

Posted On Dec 29,2011,By Muthukumar


தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன. இந்த வார்த்தைகளை  கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும். இதனை ஆங்கிலத்தில் Easter Eggs என அழைக்கப்படுகிறது. இதற்க்கு முன் Do a Barrel Roll என்ற வார்த்தையை கொடுத்தால் கூகுள் தளம் என்ன ஆகும் என பார்த்தோம். இன்று அதோடு வேறு சில வார்த்தைகளை கொடுத்து கூகுள் தளத்தை மாற்றி பார்க்கலாம் வாருங்கள்.
  • Let it Snow
  • Tilt
  • Do a Barrel Roll
  • Hanukkah
இந்த நான்கு வார்த்தைகளும் மேஜிக் வார்த்தைகள் இவைகளை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்தால் என்ன ஆகும் என பார்ப்போம். 

Let it Snow
இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோவில் பனி மழை பொழியும். கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக இதனை உறுவாக்கியுள்ளது.

Tilt
இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோ கீழே படத்தில் இருப்பது போல ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.

Do a Barrel Roll
இதனை பற்றி நாம் ஏற்க்கனவே முந்தைய பதிவில் பார்த்து இருக்கிறோம். இந்த வார்த்தையை கொடுத்தால் கூகுள் விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.


Hanukkah
இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சதிரதினால் ஆன ஒரு வரி காணப்படும்.