புதன், 27 ஜூன், 2012

எந்த கீ அழுத்தப்பட்டுள்ளது?

Posted On Jun 27,2012,By Muthukumar

வேகமாக இணைய இணைப்பை ஏற்படுத்தி, தகவல் ஒன்றைத் தேட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கையில், பாஸ்வேர்ட் தவறு என்றும், மீண்டும் முயற்சிக்கவும் என்ற செய்தியும் கிடைக்கும். சரியாகத்தானே கீ பிரஸ் செய்தோம் என்று பார்க்கையில், கேப்ஸ் லாக் அழுத்தியவாறு இருப்பதனைப் பார்த்து, அட! சே! என்று சொல்லியவாறே, கேப்ஸ் லாக் கீயினை அழுத்தி அதனை நீக்கிவிட்டு, பின் மீண்டும் பாஸ்வேர்ட் டைப் செய்வோம். கேப்ஸ் லாக் கீயில் சிறிய எல்.இ.டி. விளக்கு எரியும். ஆனால் நாம் அவசரத்தில் கவனிப்பதில்லை. மேலும் டேபிளின் கீ போர்டு பலகையில் கீ போர்டு வைத்து இயக்கும்போது, நமக்கு அதன் மேலாக உள்ள கேப்ஸ்லாக், ஸ்குரோல் லாக் வரிசை தெரியும்படி கீ போர்டினை இழுப்பதில்லை.
டெக்ஸ்ட் டைப் செய்கையில், மானிட்டர் திரையில் காட்டப்படும் எழுத்துக்களை வைத்து கேப்ஸ் லாக் கீ அழுத்தப்பட்டி ருப்பதனை உணர்ந்து, திருத்திக் கொள்ளலாம். பாஸ்வேர்ட்களை அமைக்கையில் அந்த எழுத்துக்கள் திரையில் காட்டப்படாததால், நமக்கு சிக்கல்கள் எழுகின்றன.
இந்த சிக்கல்களுக்குத் தீர்வுகள் தரும் வகையில் உள்ள புரோகிராம் ஒன்றினை அண்மையில் காண நேர்ந்தது. இதன் பெயர் கீ போர்ட் இன்டிகேட்டர் (Keyboard Indicator) என்பதாகும். இந்த புரோகிராம் இத்தகைய கீகள் எந்த நிலையில் உள்ளன என்பதைத் திரையில் காட்டும். கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக் மற்றும் நம் லாக் கீகளின் அப்போதைய நிலையை சிஸ்டம் ட்ரேயில் காட்டும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இந்த புரோகிராமினைப் பயன்படுத்துகையில், ஸ்டேட்டஸ் பாரில் இந்த கீகள் குறித்த தகவல்கள் காட்டப்பட வேண்டுமாயின், அதனை கன்பிகர் செய்திட வேண்டும். கீகள் அழுத்தப்பட்ட நிலையில் இருந்தால் சிகப்பு வண்ணத்திலும், அழுத்தப்படாத நிலையில் இருந்தால், ஊதா நிறத்திலும் காட்டப்படும். மேலும் இதற்கான ஐகான் மீது கர்சரைக் கொண்டு சென்றாலும், இந்த கீகளின் நிலை தெரியவரும்.
கீயின் நிலை மாறுகையில் விளக்கின் நிறம் மாறுவதுடன், அது குறித்த சிறிய செய்தி ஒன்றும் நமக்குத் திரையில் காட்டப்படுகிறது. இந்த செய்தியையும் திரையின் எந்த மூலையில் காட்டப்பட வேண்டும் என்பதனை நாம் செட் அப் செய்திட முடியும். இந்த மூன்று கீகளுக்கு மட்டுமின்றி, இன்ஸெர்ட் கீ அழுத்தப்பட்டாலும் இதே போல செய்தி காட்டப்படும். இதனால் நாம் நம்மை அறியாமல் இந்த கீகளை அழுத்தினால், கிடைக்கும் செய்தியைப் பார்த்து சுதாரித்துக் கொள்ளலாம்.
இந்த புரோகிராமினை http://sites.google. com/site/roidayan/projects/keyboardindicator என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். 32 மற்றும் 64 பிட் கம்ப்யூட்டர்களில் இது செயல்படும். ஆனால் மைக்ரோசாப்ட் தரும் டாட் நெட் பிரேம் ஒர்க் 2.0 இதற்குத் தேவைப்படுகிறது. எனவே இதனையும் முதலில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக