Posted onMay 9, 2015 by Muthukumar
நாம் எப்போதெல்லாம்
கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னு ம், கழிவறையைப் பயன்படு த்தியபிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்தபிறகு எனத் தே ர்ந்தெடுத்த சில வேலைக ளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டு மென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம்.
அதேநேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பய ன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினை க்கலாம். ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச் சிகள் சொல்கின்றன.
அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக் கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நி னைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிக ள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ-போர்டில் பாக் டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசு வோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூ ட்டரில்தானே வேலை பார்க்கி றோம் என்ற அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இரு ந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலை யைக் காட்டத் தொடங்கிவிடும்.
கிருமிகளின் பட்டியல்
லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளைப்பரிசோதனைக்கு உட்படுத் தினார்கள். அதில் ஒரு கம்ப்யூ ட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீ ரியா அளவை விட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திரு க்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.
அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவ றை பேஸினிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலி பார்ம்ஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப் பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்க ளே அதிர்ச்சியடைந்து விட்டார்கள். இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத் தி வந்தால் வயிற்று வலி, தொடர்ச்சியா ன வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர் கள் எச்சரிக்கிறார்கள்.
சுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக் கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம்அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன் படுத்தும் கம்ப் யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப்பாருங் கள்.
சுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக் கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம்அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன் படுத்தும் கம்ப் யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப்பாருங் கள்.
சுத்தம் உங்கள் கையில்
தனிநபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறு த்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப் பும் அமைகிறது. பலர் கழிப்பறை யைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்த ம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட் டரின் முன்னால் அமர்ந் து கொண்டு கைக்குட்டை யால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவது ம் சகஜம்.
இதுபோன்ற பழக்கங்களா லும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளி யோ,இரப்பை குடல்அழற்சியோ இருந்தால், அவர்பயன்படுத்திய கீபோர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போ தும். அவருடைய நோய்கள் நம க்கும் மிக எளிதாகத் தொற்றி விடும்.
நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று சொல்லிக் கொ ண்டு ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வதுதான், நமக்குக் கைவந்த கலையா யிற்றே. அதனால் கம்ப்யூட்டரில் வே லை செய்துகொண்டே எதையாவது கொறிப்பது அல்லது குடிப்பது என்ப தைப் பலரும் வழக்கமாக வைத்திரு க்கிறார்கள்.
அப்படிச் சாப்பிடும் உணவுப்பொருள் தெரியாமல் கம்ப் யூட்டர் கீ போர்டில் விழுந்துவிடும். அப்படி விழுகிற உண வுத் துணுக்கை ஆதாரமாகக் கொண் டு பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி விடும்.
சுய சுத்தத்தை விடுங்கள். நம்மில் எத்தனை பேர் கம்ப் யூட்டரையும் மவுஸையும் அடிக்கடி சுத்தம் செய்கி றோம்? கீ போர்டில் தூசுப் படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார் த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல் லையென்றால் இது அலுவ லக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள் வார்கள் என்றநினைப்பு, சுத்தத்தைத்துரத்திவிடுகிறது.
சிலஅலுவலகங்களில் இடம்மாறியோ, வேலைநேரம் மாறியோ ஷிப்ட்களில் வேலை செய்வார்கள். அப்போது ஒரே கம்ப்யூட்டரைப் பலர் பயன்படு த்த நேரிடும். இதுபோன்ற சூழ்நி லையில் சுத்தம் செய்வது எவ்வ ளவு தூரம் கேள்விக்குறியோ, அவ்வளவு தூரம் கிருமிகள் பரவுவதும் நிச்சயம்.
என்ன செய்யலாம்?
குறிப்பிட்ட கால இடைவெளி யில் கீ போர்டு, மவுஸ், செல் போன் ஆகியவற்றைச்சுத்தப் படுத்தவேண்டும். கீபோர்டை த் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூல ம் அதனுள்ளே சிக்கியிருக்கு ம் உணவுத் துணுக்குகளையோ, சிறியகுப்பையையோ அகற்றலா ம். மெல்லிய துணியின் மூலம் இவற்றைத் துடைத் தெடுக்கலாம்.
இவை அனைத்தையும்விட ரொம்ப முக்கியம் சுயச் சுத் தம். எங்கெல்லாம் கிருமித்தொ ற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்றுவந்த பி றகு கைகளைச் சுத்தம் செய்வது நல்லது. அதுவும் வெறும் தண் ணீரிலோ அல்லது சுத்திகரிப் பான் மூலமாகவோ சும்மா கழுவுவதால், பாக்டீரியாக் கள் முழுமையாக அழிவதில்லை. சுத்திகரிப்பானைப் பயன்படுத்திக்கு றைந்தபட்சம் 30 விநாடிகள் தேய்த்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக