சனி, 25 பிப்ரவரி, 2012

என் ஸ்டைல் எப்படி? கேட்க ஒரு இணையதளம்.


Posted on Feb 26,2012,By Muthukumar
ஆலோசனை கேட்க உதவும் இணையதளங்கள் ஒரு அலையெனவே தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன.
குழப்பமில்லாமல் முடிவெடுக்க இணையம் மூலம் நண்பர்களிடம் ஆலோசனை நடத்த வழி செய்யும் தளங்களை போலவே ஒருவரின் தோற்ற பொலிவை மேம்படுத்தி கொள்வது குறித்தும் ஆலோசனை கேட்கும் அழகான தளங்கள் அறிமுகமாகி வருகின்றன.
அந்த வகையில் உங்கள் தோற்றத்தையே மாற்றி காட்ட (மேலும் அழகாக தான்)வழி செய்ய ரீ ஸ்டைல் மீ தளம் உதயமாகியிருக்கின்றது.
புற தோற்றத்தில் ஆர்வமும் அக்கரையும் கொண்டவர்கள்(யார் தான் இதற்கு விதிவிலக்கு)இந்த தளத்தின் மூலம தங்கள் உடை அலங்காரம் குறித்தும் தோற்றம் குறித்தும் மற்றவர்களின் (நண்பர்கள்)கருத்தை அறிந்து கொள்ளலாம்.அவற்றின் அடிப்படையில் தங்கள் ஸ்டைலை மாற்றியும் கொள்ளலாம்.
மணிக்கணக்கில் கண்னாடி முன் நின்று அழகு பார்ப்பவர்களும்,இந்த உடையில் எப்படி இருக்கிறேன் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் அலுக்காமல் கருத்து கேட்பவர்களும் இந்த தளத்தை வரப்பிரசாதமாகவே கருதுவார்கள்.காரணம் அதை தான் இந்த தளம் செய்கிறது.
புற தோற்றத்தை மேலும் மெருகேற்றி கொள்ள நினைப்பவர்கள் இந்த தளத்தில் தங்களின் புகைப்படத்தை சமர்பித்து மற்றவர்கள் கருத்து சொல்ல காத்திருக்க வேண்டும்.அதன் பிறகு தளத்தின் உறுப்பினர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு தங்களின் கருத்துக்களை தெரிவிப்பார்கள்.
புகைப்படத்திற்கு மேலே வரிசையாக முக அழகு உட்பட பல்வேறு அம்சங்களுக்கான குறியீடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.புகைப்படத்தை பார்த்து எந்த அம்சம் கவர்கிறதோ அந்த அம்சத்தில் கிளிக் செய்து கருத்து தெரிவிக்கலாம்.
அஹா அற்புதம் என்று பாராட்டாகவும் தெரிவிக்கலாம்.இல்லை தலை முடி வாரும் வாகை மாற்றி கொள்ளலாம் என்பது போலவும் கருத்து தெரிவிக்கலாம்.பல நேரங்களில் சின்ன சின்ன மாற்றம் அருமையான பலனை தரககூடும் .அது போலவே இந்த யோசனைகள் ஒருவரின் தோற்றத்தை மேம்படுத்தி கொள்ளவும் வழி வகுக்ககலாம்.
அதோடு மற்றவர்கள் நம்மை எப்படி பார்க்கின்றனர் என்று தெரிந்து கொள்ள முடிவது தோற்றம் பற்றிய தன்னம்பிக்கையை தரும் தானே.
ஆழமாக அலசி ஆராய்ந்து கருத்து சொல்ல மனம் இல்லாதவர்கள் தோற்ற பொலிவை ஆமோதிக்கலாம்,அல்லது நிராகரிக்கலாம்.இதற்கு வசதியாக கட்டை விரலை உயர்த்தும் செய்கை மற்ரும் கடை விரலை கீழே காண்பிக்கும் செய்கை ஆகியவற்றுக்கான குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.தோற்றம் தொடர்பான அம்சங்களுக்கு மேலும் கீழும் இந்த குறியீடுகள் உள்ளன.
இவற்றில் கிளிக் செய்து விட்டு வாக்களிக்கவும் செய்யலாம்.வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் தனது அழகுக்கு என்ன மதிப்பு உள்ளது என்பதை தெரிது கொள்ளலாம்.
புகைப்படத்தை சம்ர்பிகும் போதே அதனை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு கருத்து கேட்கும் வசதியும் உள்ளது.
இதே போல இந்த தளத்தில் தங்கள் படங்களை சம்ர்பித்து விட்டும் ஆலோசனை கேட்டு காத்திருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கு நிங்களும் ஆலோசனை கூறலாம்.ஏற்கனவே சமர்பித்தவர்களுக்கு கிடைத்த வரவேற்பு எப்ப்டி இருக்கிறது என்பதையும் பார்க்கலாம்.சமீபத்திய ப்டங்கள்,பிரபலமானவை என்று பலவேறு வகைகளில் இவை பட்டியலிடப்பட்டுள்ளன.
நாடுகளின் அடிப்படையிலும் பட்டியல் இருக்கிறது.
நடிகைகளும் மாடல்களும் தான் அழகு கலை நிபுணர்களின் ஆலோசனை கேட்டு தங்கள் அழகை மேம்படுத்தி கொள்ள வேண்டுமா என்ன? நீங்களும் கூட நண்பர்களின் ஆலோசனையை கேட்டு பயன்பெறலாம்.நிபுணர்களின் குறிபுகளை விட நண்பர்கள் வழங்கும் இந்த ஆலோசனை ஜனநாயகமயமானது.
இதே போலவே புகைப்படத்தை சமர்பித்து மற்றவர்களின் முதல் அபிப்ராயத்தை அறிந்து கொள்ள உதவும் சேவையை ஸ்பீகிங் பேசஸ் தளம் வழங்கி வந்தது.ஆனால் இந்த சேவை காணாமல் போய் விட்டது.
இணையதள முகவரி;http://www.restyleme.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக