ஹார்ட் டிஸ்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹார்ட் டிஸ்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 அக்டோபர், 2014

பத்து நிமிடங்களில் ஹார்ட் டிஸ்க் சுத்தம்


கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும், அப்படியே சில ட்ரைவ்களிலும் போல்டர்களிலும் சேவ் செய்து அமைத்து விடுகிறோம். இருப்பினும் இவை குப்பையாகவே அமைகின்றன. தொடர்பில்லாத போல்டர்களில் பைல்களை அவசரத்திற்கு வைத்துவிட்டு, பின்னர் மாற்ற மறக்கிறோம். ஒரே பைலின் சில நகல்களை வேறு போல்டர்களில் வைத்துவிட்டு அதனையும் மறக்கிறோம். இதனால், நாம் ஒழுங்காக அமைப்போம் என இலக்கு வைக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க், ஒரு குப்பைக் கிடங்காகப் போய்விடுகிறது. இதனை எப்படி 10 நிமிடத்தில் சரி செய்து சுத்தப்படுத்த முடியும். சில வழிகளை இங்கு காணலாம்.
டாகுமெண்ட் போல்டரில்
பைல் சிஸ்டம் உருவாக்குதல்:
முன்பு மை டாகுமெண்ட்ஸ் என்றும், தற்போது டாகுமெண்ட்ஸ் என்றும், விண்டோஸ் போல்டரை உருவாக்கி, மாறா நிலையில், நாம் உருவாக்கும் பைல்கள் சேமிக்கப்படும் இடமாக அமைந்துவிடுகிறது. நாட்கள் செல்லச் செல்ல, இந்த போல்டர், எந்தவித வரையறை இல்லாமல், மொத்தமாக பைல் சேமிக்கும் இடமாக மாறிவிடுகிறது. இதனைச் சரி செய்திட முதலில் பைல்களின் வகை அல்லது பொருளுக்கேற்ப,போல்டர்களை உருவாக்க வேண்டும். சொந்த பைல்கள், அலுவலகம் சம்பந்தப்பட்டது, குழந்தைகள் தொடர்புள்ளவை, கல்வி மற்றும் பொதுவான பொருளுடையவை என இவற்றைப் பிரித்து போல்டர்களை அமைக்கலாம். இவற்றை உருவாக்கிய பின்னர், பைல்களை அதன் தொடர்புடைய போல்டர்களில் வைக்கவும். இந்த போல்டர்களில் வைக்க முடியாதபடி, தகவல்கள் கொண்ட பைல்கள் இன்னும் இருக்குமாயின், அவற்றிற்கான புதிய போல்டர்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். இப்போது உங்கள் டாகுமெண்ட்ஸ் போல்டர் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டிருப்பதனை உணர்வீர்கள்.
டவுண்லோட்ஸ் போல்டரை காலி செய்தல்: நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்திடும் பைல்கள் Downloads என்ற போல்டரில் சேவ் செய்யப்படும். இவற்றை இணையத்தில் இருந்து பெறும் நிலையிலேயே, அதன் தன்மைக்கேற்ற போல்டரில் அமைக்கலாம். ஆனால், சிலர், டவுண்லோட்ஸ் போல்டரிலேயே இறக்கி சேவ் செய்துவிடுவார்கள். இது எப்போதும் தற்காலிக போல்டராகத்தான் இருக்க வேண்டும். டவுண்லோட்ஸ் போல்டரில் வெகு நாட்கள் பைல் தங்கக்கூடாது. இந்த போல்டரில் உள்ள அனைத்து பைல்களையும், மேலே கூறியபடி தயாரிக்கப்பட்ட போல்டர்களில் ஒதுக்குவது, நமக்கு நம் பைல்கள் இருக்குமிடம் குறித்த தெளிவான பார்வையைக் கொடுக்கும்.

டெஸ்க்டாப்பினைச் சுத்தப்படுத்துக:
 டவுண்லோட்ஸ் போல்டரைப் போலவே டெஸ்க்டாப்பினைப் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், உங்கள் டெஸ்க்டாப், ஒரு ஒழுங்கற்ற மேஜையின் மேல்புறமாகத்தான் இருக்கும். மேலும், இது உங்கள் நேரத்தை வீணாக்கி, பைல்களைத் தேடுகையில் பெரும்பாலான நேரத்தில் மன அழுத்தத்தினைப் கொடுக்கும். எனவே, குறிப்பிட்ட ஒரு நாளில், டெஸ்க்டாப் மேலாக இருக்கும் அனைத்தையும், வேறு ஒரு ட்ரைவில் உள்ள போல்டர்களுக்கு, வகைப்படி கொண்டு அமைத்துவிட்டு, முழுமையான சுத்தமான ஒரு தோற்றத்தை டெஸ்க்டாப்பிற்கு வழங்க வேண்டும். டெஸ்க்டாப்பில் பைல்களை வைப்பது ஆபத்தானதும் கூட. கம்ப்யூட்டர் ஏதேனும் ஒரு காரணத்திற்காக ரெஸ்டோர் செய்யப்பட்டால், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்கள் திரும்பவும் கிடைக்காது. எனவே, அடிக்கடி, டெஸ்க்டாப்பில் உள்ள பைல்களை அதனதன் இடத்திற்கு மாற்ற வேண்டும்.

நகல் பைல்களை நீக்குக:
 பல பைல்களுக்கு நாம் நகல்களை உருவாக்கி, வெவ்வேறு போல்டர்களில் சேவ் செய்துவிடுகிறோம். ஒரு சிலர், அதே போல்டரில், அதே பெயரில் 1,2, என எண்களை பைல்களின் பெயர்களுடன் இணைத்து சேவ் செய்து வைப்பார்கள். இது பெரும்பாலும் படம் மற்றும் திரைப்பட பாடல், வீடியோ பைல்களில் நடைபெறும். இத்தகைய நகல்களைக் கண்டறிய பல புரோகிராம்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி, நகல்கள் அனைத்தையும் நீக்க வேண்டும். இந்த புரோகிராமினை அடிக்கடி பயன்படுத்தி, பைல் நகல்களை அழிக்க வேண்டும். முழு ட்ரைவினையும் ஒரு முயற்சியில் மேற்கொள்ளாமல், படங்கள் மற்றும் வீடியோ பைல்கள் இருக்கும் ட்ரைவ்களில் இந்த செயல்பாட்டினை மேற்கொண்டு, பின்னர், மற்ற ட்ரைவ்களில் மேற்கொள்ளலாம்.
இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டால், உங்கள் ஹார்ட் ட்ரைவ், தேவையற்ற பைல்களால், தன் செயல்பாட்டினை மந்தப் படுத்திக் கொள்ளாது. முதலில் சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் முயற்சியாக இது இருந்தாலும், போகப் போக, பத்து நிமிடங்களில் முடியும் வேலையாக மாறிவிடும். நமக்கும் நிம்மதியாக இருக்கும். பைல்கள் எந்த ட்ரைவ்களில் உள்ளன என்பதுவும் நினைவில் இருக்கும்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

ஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்


undefined
முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது. ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல் புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன. இவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில்
மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல் ஆகும்.
இணையத்தில் இந்த டூல் சார்ந்த புரோகிராம்கள் குறித்துத் தேடுகையில், எளிய,ஆனால் அதிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்று தென்பட்டது. அதன் பெயர் மினி டூல் பார்ட்டிஷன் விஸார்ட் (MiniTool Partition Wizard). இதனைhttp://www. partitionwizard.com/freepartitionmanager.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவற்றின் பயன்பாடுகள் குறித்து இங்கே காணலாம்.
இந்த புரோகிராம் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய சில சிறப்பான பயனுறை செயல்பாடுகள்:
1. ஒரு பார்டிஷனை இரண்டாக, எளிதாகப் பிரிக்கலாம்.
2. அனைத்து பிரிவுகளையும், அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவினை மற்றவற்றிற்கு இணையாக அமைக்கலாம்.
3. டேட்டா இழப்பு எதுவுமின்றி, ஒரு பிரிவின் அளவைக் குறைக்கலாம். அல்லது நகர்த்தலாம்.
3. பிரிவு ஒன்றை உருவாக்கலாம்; பார்மட் செய்திடலாம்; நீக்கலாம்.
4. பார்ட்டிஷன் பார்மட்டினை FAT வகையிலிருந்து NTFS பார்மட்டுக்கு மாற்றலாம்.
5. பிரிவுகளை மறைக்கலாம்; மறைத்ததை மீண்டும் கொண்டு வரலாம். ட்ரைவ் லேபில் எழுத்தை மாற்றலாம்.
6. பிரிவுகளை இணைக்கலாம்.
7. ஒரு பிரிவில் உள்ளதை அப்படியே காப்பி செய்து, ஒதுக்கப்படாத இடத்தில், அதிக திறன் கொண்ட செயல்பாட்டினைத் தரும் வகையில் அமைக்கலாம்.
8. டேட்டாவினை பேக் அப் செய்திடலாம்; அல்லது எந்தவித இழப்புமின்றி நகர்த்தலாம்.
9. டிஸ்க் ஸ்கேன் செய்து அழிக்கப்பட்ட பைல்களை மீட்டு எடுக்கலாம் அல்லது கெட்டுப்போன இடத்திலிருந்து மீட்டு எடுக்கலாம்.
10. டிஸ்க் ஒன்றினை முழுவதுமாக, இன்னொரு டிஸ்க்கிற்கு காப்பி செய்திடலாம். இதற்கு data clone technology என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
11. டிஸ்க்கின் டேட்டாவினை எந்த இழப்புமின்றி, பத்திரமாக பேக் அப் செய்திடலாம்.
12. டிஸ்க் எந்த இடத்திலேனும் கெட்டுப் போயுள்ளதா என அறிந்து, அறிக்கையாகத் தர டிஸ்க் சர்பேஸ் டெஸ்ட்டினை (Disk Surface Test) இதில் மேற்கொள்ளலாம்.
இன்னும் சில சிறப்பான பணிகளை இதில் எளிதாக மேற்கொள்ளலாம். அவை:
1. NTFS வகையிலிருந்து FAT வகைக்கு மாற்றுதல்.
2. எழுத்துருவினை மாற்றுதல்.
3. MBR வகை டிஸ்க்கினை GPT டிஸ்க்காக மாற்றுதல்.
4. GPT வகை டிஸ்க்கினை MBR டிஸ்க்காக மாற்றுதல்.
5. டைனமிக் டிஸ்க் வால்யூமினை காப்பி செய்தல்.
6. UEFI பூட் டிஸ்க்கினை காப்பி செய்தல்.
7. UEFI பூட் செயல்பாட்டிற்கான சப்போர்ட் வழங்குதல்.
8. பிரிக்கப்பட்ட பார்ட்டிஷன் ஏரியாவை நீட்டுதல்.
9. ஒரு பார்ட்டிஷனை எளிதாக இரண்டாகப் பிரித்தல்.
10. 4096 பைட் அடங்கிய செக்டார் அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் அமைத்தல்.
11. எந்த பார்ட்டிஷனையும் உருவாக்குதல், பார்மட் செய்தல் மற்றும் நீக்குதல்.
12. டேட்டா இழப்பு எதுவுமின்றி, க்ளஸ்டர் அளவினை மாற்றி அமைத்தல்.
13. விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் சிஸ்டங்களுக்கு சப்போர்ட்.
14. உங்களுடைய டிஸ்க்கிற்கு என்ன நடக்கப் போகிறது என்ற காட்சியைக் காட்டி, பின்னர் உறுதி செய்த பின்னரே, அந்த செயல்பாட்டினை மேற்கொள்ளுதல்.
15. இரண்டு டெரா பைட் அளவிலான டிஸ்க்கினையும் ஒரே பார்ட்டிஷனாக அமைத்து சப்போர்ட் செய்தல்.
16. மாஸ்டர் பூட் ரெகார்டினை (MBR) மீண்டும் அமைத்தல்.
17. பார்ட்டிஷனின் சீரியல் எண்ணை மாற்றி அமைத்தல்.
இவை தவிர, வழக்கமான பல டிஸ்க் சோதனைகளையும் மேற்கொள்ளலாம்.
மேலே சொல்லப்பட்ட இணைய தளத்திலிருந்து, இந்த புரோகிராமினை (MiniTool Partition Wizard) இலவசமாகத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில்,மிக எளிதாக இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இன்ஸ்டால் செய்தவுடன், டெஸ்க்டாப்பில் ஐகான் ஒன்று தரப்படுகிறது. இதில் டபுள் கிளிக் செய்து, MiniTool Partition Wizard Home Edition என்னும் இந்த புரோகிராமினை இயக்கலாம். உடன் வலது பக்கம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் பிரிவுகள் அனைத்தும் தெளிவாகக் காட்டப்படும். வலது பக்கம், இவற்றில் நீங்கள் என்ன என்ன செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தகவல்கள் தரப்படும்.
இடது பக்கம் உள்ள ஹார்ட் டிஸ்க் குறித்த பிரிவில், டிஸ்க் பயன்படுத்தப்பட்டுள்ள இடம், இன்னும் காலியாக உள்ள இடம் குறித்த தகவல்கள் காட்டப்படும்.
இடது பக்கப் பிரிவில், டிஸ்க் ஒன்றினை அப்படியே அதே அளவில், அல்லது கூடுதலான அளவில் காப்பி எடுக்க வழி தரப்பட்டுள்ளது. copy partition மற்றும் copy entire disk என்ற இந்த டூல்களைப் பயன்படுத்தி இதனைப் பயன்படுத்தி, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கின் நகலை, இன்னொரு எக்ஸ்டர்னல் போர்ட்டபிள் ஹார்ட் டிஸ்க்கில் அமைக்கலாம். மிக மிக எளிதான, கட்டணம் எதுவும் இல்லாத பயனுள்ள டூல் இது. உங்களுடைய கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் கெட்டுப்போகும் பொழுது, அப்படியே அதன் காப்பி உங்களுக்கு உதவும்.
இதில் தரப்பட்டுள்ள disk surface scan என்ற டூல், டிஸ்க்கில் உள்ள பழுதுகளை அறியப் பயன்படுகிறது. ஹார்ட் ட்ரைவ் அல்லது அதன் பிரிவைத் தேர்ந்தெடுத்து, அடுத்து Surface Test என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் எந்த நிலையில் உள்ளது, எத்தனை இடங்களில் பேட் செக்டார் எனப்படும் பழுதுகள் உள்ளன என்று காட்டப்படும். அதிகமாக பழுது அடைந்திருந்தால், உடனே ஹார்ட் டிஸ்க்கை மாற்றுவதுதான் சிறந்த தீர்வு.
ஹார்ட் டிஸ்க் சார்ந்த எக்கச்சக்கமான செயல்பாடு, எளிதான இடைமுக வழிகள், எந்தக் கட்டணமும் இல்லாத பொருள் என இந்த MiniTool Partition Wizard புரோகிராம், அனைவரும் விரும்பும் புரோகிராமாக உள்ளது. உடனடியாகப் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் அல்லது ப்ளாஷ் ட்ரைவில் வைத்துக் கொள்வது நமக்கு என்றும் கை கொடுக்கும்.
இதனைத் தரவிறக்கம் செய்திடவும், இதன் செயல்பாடு குறித்து அறிய, மேலே தரப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.