Posted On April 05,2012,By Muthukumar
உங்கள் குழந்தைகள் இணையத்தில் பயன்பெறுவதற்கு மிகச்சிறந்த வலைத்தளங்கள் சிலவற்றை இங்கு தொடர்ச்சியாக தரவிளைகிறோம்.இதுவரை இத்தளங்கள் பற்றி அறிந்திருக்காவிடின் முதலில் நீங்கள் சென்று பாருங்கள், பின்னர் இத்தளங்களில் உள்ள வசதிகளை புரியும் வகையில் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். நிச்சயம் பயனுடையதாக இருக்கும்.
Funology (funology.com): இவ் இணையதளத்தில் குழந்தைகளுக்கு சற்றும் சலிப்பு ஏற்படாவண்ணம் பல வேடிக்கை விளையாட்டுக்கள் உள்ளடங்கியிருப்பதுடன், கலை கைவினை பொருட்கள் செய்வதுபற்றியும் சொல்லித்தரப்படுகிறது. பெறும்பாலும் பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்கள் மட்டுமல்லாது, சிறுவர்களுக்கு என அறிவியல், வேதியியல், உயிரியல், மற்றும் வானிலை போன்ற பாடங்களை பரிசோதனைகள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் ஒரு சிறப்பம்சமாக குழந்தைகளுக்கு சமையலையும் கற்பிக்கும் வண்ணம் சில இலகுவான உணவு வகைகளின் செய்முறைகளையும் இங்கு காணலாம். நீங்கள் கூட குழந்தையின் வயது, அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளடக்கத்தையும் செயல்பாடுகளையும் தேடலாம்.
இணைப்பு: http://www.funology.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக