வெள்ளி, 30 மார்ச், 2012

ப்ளாக்கர் திரையை மூட வைப்பது எப்படி?

Posted On March 30,2012,By Muthukumar

நமது ப்ளாக்கை ஒருவர் திறந்து விட்டு அதை மூடாமல் தளத்தில் சில மணித்துளிகளுக்கு எதுவும் செய்ய வில்லை என்றால் உங்கள் தளம் மூடப்பட்டுவிடும்.அதாவது கருப்பாக காட்சியளிக்கும்.இதை Energy Saving Mode என்பர்.மீண்டும் உங்கள் ப்ளாக்கில் சுட்டியை கொண்டு போனால் உங்கள் ப்ளாக் திறந்துவிடும்.

                                          View Demo
செய்முறை:

  •  முதலில் Blogger-->Template-->Edit HTML பகுதிக்கு செல்லவும்
  • </head> என்ற Code-ஐ தேடவும்
  • </head> என்ற Code-க்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்
<script language='javascript' src='http://www.onlineleaf.com/savetheenvironment.js' type='text/javascript'/>
  • Save Template கொடுங்கள்
பின்னர் 
  • Blogger-->Layout பகுதிக்கு செல்லவும்
  • Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு Window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.
  • பின் அங்குள்ள Content பகுதியில் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்

<script language="javascript" type="text/javascript" src="http://www.onlineleaf.com/savetheenvironment.js?time=120"></script>

குறிப்பு:Code-ல் TIME என்பது Seconds-ஐ குறிக்கும்

இன் மை டைரி (In My Diary)



Posted On March 30,2012,By Muthukumar
விதவிதமான டைரிகள் விற்பனைக்கு வருவதுபோல விதவிதமான டைரிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பல வசதிகளை தருகின்றது. 6 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் டைரி - நமக்கு கிடைக்கும். அதில் தேவையான குறிப்புகளை குறித்து வைக்கலாம்.
 காலண்டரை கிளிக் செய்ய நமக்கு காலண்டர் கிடைக்கும். அதில் உள்ள + மற்றும் - குறிகளை அழுத்த காலண்டர் முன்தேதியிலும் பின்னர் வரும் தேதிகளும் கிடைக்கும்.
 இதில் இடது புறம் Notes,Contact கிடைக்கும். தேவையான விவரங்களை நாம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்பவரின் தொலைபேசி விவரம் முதற்கொண்டு முழுவிவரம் இதில குறித்துவைக்கலாம்.
இதிலேயே அலாரம் செட் செய்யும் வசதியும் உள்ளது:. பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களையும் இதில் குறித்துவைக்கலாம்.இதுநாள் வரை பிறந்தநாளோ -திருமணநாளோ-எவ்வளவு வருடம் இதுவரை கடந்துள்ளது என்கின்ற விவரமும் கிடைக்கும். பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வியாழன், 29 மார்ச், 2012

பேஸ்புக்கில் புதிய பயனுள்ள வசதி INTERESTS உபயோகிப்பது எப்படி



Posted On March 29,2012,By Muthukumar

உலகம் முழுவதும் 800 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களை கொண்ட ஒரே சமூக இணையதளம் பேஸ்புக் ஆகும். சமூக இனியதலங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பேஸ்புக் யாரும் தொட முடியாத இடத்தில் உள்ளது. பேஸ்புக் உச்சத்தில் இருந்தாலும் அதன் வாசகர்களை கவர அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அப்டேட் செய்து கொண்டே உள்ளது. அந்த வகையில் இப்பொழுது பேஸ்புக்கில் Interest என்ற புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.


Interest வசதியை பயன்படுத்துவது எப்படி:
பேஸ்புக்கில் நிறைய நபர்களிடம் நண்பர்களாக இருந்தாலும் ஒரு சில பேர் பகிர்வது உங்களுக்கு மிகவும் பிடித்து பிடித்து இருக்கும். அப்படி உங்களுக்கு பிடித்த நபர்களின் பகிர்வுகளை மட்டும் தனியாக பார்க்க உதவுவது தான் இந்த interest வசதி.
  • முதலில் உங்கள் பேஸ்புக் தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் இடது பக்கத்தில் கீழ் பகுதியில் Interest என்ற புதிய வசதி இருப்பதை காண்பீர்கள் அதன் மீது க்ளிக் செய்யவும்.
  • அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் CREATE LIST என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் நீங்கள் பின்தொடரும் பக்கங்கள், நண்பர்கள், Subscribe செய்யும் பட்டியல் இருக்கும் காணப்படும்.
  • அதில் உங்களுக்கு பிடித்த நபர்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளவும்.
  • உங்களுக்கு பிடித்த நண்பர்களை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு பிடித்த தலைப்பை கொடுத்து உங்கள் பட்டியல் யாருக்கு தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
  • அடுத்து கீழே உள்ள Done என்பதை க்ளிக் செய்தால் போதும் தேர்வு செய்தவர்களின் பதிவுகள் மட்டும் இனி தனியாக பார்த்து கொள்ளலாம். 
இதே போன்று தொழில்நுட்பம், அரசியல், அனுபவம் இப்படி உங்களுக்கு பிடித்த நண்பர்களை தனியாக பட்டியலிட்டு கொள்ளலாம். 

சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களின்சர்வீஸ் சென்டர் முகவரிகள்



Posted On March 29,2012,By Muthukumar

இன்றைய காலகட்டத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் உபயோகிக்காதவர்களே இல்லை எனலாம். நம்மிடம் உள்ள சில பொருட்கள் அதனுடைய வாரண்டி காலத்தில் பழுதாகிவிட்டால் அந்த பொருட்களின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டிரில் கொடுத்தால்தான் பழுது நீக்கி கொடுப்பார்கள்... எனக்கு கிடைத்த சில எலக்ட்ரானிக் பொருட்களின் சர்வீஸ் சென்ட்டர் முகவரியை கீழே கொடுத்துள்ளேன்.



படத்தினை கிளிக் செய்தால் உங்களுக்கான முகவரிகள் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
    வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

உங்களுக்கேற்ற நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும் இணையதளம்.

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான் அழகாக செய்கி ற‌து.
அதாவது எந்த நிகழ்ச்சிகள் உங்கள் ரசனைக்கு ஏற்ற வகை யில் இருக்குமோ அந்த நிகழ் ச்சிகளை அந்த தளம் பரிந்து ரைக்கிறது. அந்த வகையில் நிகழ்ச்சிகளுக்கான பன் டோரா என்று இந்த தளம் வர்ணிக்கப் படுகிறது.
பன்டோரா பரிந்துரை சேவைகளின் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை சொன்னா ல் அதனடிப்படையில் நீங்கள் விரும்பி கேட்ககூடிய பாட‌ல்களை பரிந்துரைப்பதே பன்டோரவின் சிறப்பம்சம்.
இது வியப்பை அளித்தாலும் பன்டோரா இசை ரசனையின் நுட்ப ங்களை அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளக்கூடிய சாப்ட் வேரின் உதவி யோடு பிடித்தமான பாடல்களை பரிந்துரைக்கிறது.
பன்டோரா பாணியில் ஒருவரின் ரச‌னை மற்றும் விருப்பங்கள் அடிப்படையில் அவருக்கு பிடிக்ககூடிய விஷயங்களை பரிந்துரை க்கும் சேவைகள் எல்லா துறைகளிலும் உதயமாகி இருக்கின்றன. இப் போது நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதிலும் யூ பிளான் மீ மூலமாக இந்த பரிந்துரைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.
இன்றைய நிகழ்ச்சிகளை இணைய யுகத்திற்கு ஏற்ப மேம்படுத்தி யுள்ள சேவையாக இது அமைந்துள்ளது. ஒருவரது பகுதியில் நடைபெறும் நிகழ் ச்சிகளை அறிந்து கொள்ள உதவும் தளங்கள் விதவித மாக இருக்கின்றன. இவற்றின் மூலம் ஒருவர் தனது பகுதி யில் நடைபெறும் சுவாரஸ்யமான‌ பய னுள்ள நிகழ்ச்சிகளை எளிதாக கண்டு கொள்ளலாம்.
இன்றைய நிகழ்ச்சிகளை இந்த தளங்கள் விரிவாக பட்டியலிட்டா லும் இவற்றில் இருந்து ஒருவர் தனக்கு பொருத்தமான நிகழ்ச்சி களை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.இந்த தேடலில் விருப்பமில் லாத, தேவையில்லாத நிகழ்ச்சிகளையும் மேய்ந்தாக வேண்டும்.
இதற்கு மாறாக நிகழ்ச்சிகளே உங்களை கண்டுகொள்ள உதவும் சேவையை தான் யூ பிளான் மீ தளம் சாத்தியமாக்குகிறது.
இந்த சேவையை பயன்படுத்தி கொள் ள விரும்பும் உறுப்பினர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உள்ள நிகழ்ச்சிகள் பட்டி யலில் உங் களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்ய வேண்டும்.இதன் மூலம் உங்களது விருப்பமும் எதிர்பார்ப்பும் என்ன என்ப தை இந்த தளம் புரிந்து கொண்டு அடுத்த முறை அத்தகைய நிகழ்ச் சிகள் வரும் போது அவற்றை மட்டும் உங்களுக்கு பரிந்துரைக்கும்.
இலக்கிய ஆர்வம் உள்ளவரின் நண்பர் இலக்கிய கூட்டம் பற்றி கேள்விபட்டால் அவரிடம் அதனை பரிந்துரைப்பார் அல்லவா அதே போல தான் இந்த தளமும் ஒருவருக்கு பிடிக்ககூடிய நிகழ்ச் சிகளை தனது பட்டியலில் இருந்து தேர்வு செய்து பரிந்துரைக் கிற‌து.
பரிந்துரைகள் எந்த அளவுக்கு துல்லியமான தாக இருக்கும் என்பது ஆய்வுக்குறிய விஷய‌ம் என்றாலும் ஒருவரின் விருப்பத்தின் அடிப்ப டையில் அவருக்கான நிகழ்ச்சிகளை பரிந்து ரைக்கும் கருத்தாக்கம் பயனுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இந்த பரிந்துரைகள் துல்லியமானதாக மேலும் சில வழி கள் இருக்கின்றன.ஒவ்வொரு முறை நிகழ்ச்சிகள் பரிந்துரைக்கப் படும் போது அந்த பரிந்துரையை ஏற்கிறீர்களா அல்லது பயனற்ரது என நிராகரிக்கிறிர்களா என குறிப்பிட வேண்டும்.இந்த தகவல் களின் அடிப்படையில் பயனாளிகளின் ரசனை பற்றிய புரிதலை இந்த தளத்தின் பின்னே உள்ள சாப்ட் வேர் மேலும் கூர்மையாக்கி கொள்ளும்.
அது மட்டும் அல்ல இந்த தளத்துடன் உங்கள் பேஸ்புக் கணக்கை இணைக்கும் பட்சத்தில் பேஸ்புக்கில் நீங்கள் உங்களு க்கு பிடித்த மான ரெஸ்டார்ண்ட் மற்றும் நிகழ்ச்சிகளை குறிப்பிடும்போது அதனையும் கவனத்தில் கொண் டு உங்களுக்கேற்ற நிகழ்ச்சியை இந்த தளம் பரிந்துரைக்கும்.
நிகழ்ச்சி தேர்வுகளை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.தேர்வு செய்யும் நிகழ்ச்சிகள் அழகாக நாட் காட்டியில் சேமிக்கப்பட்டு விடுகின்றன.எனவே நாட்காட்டியை பார் ப்பதன் மூலமே நிகழ்ச்சிகள் என்று எங்கே இருக்கின்ற‌ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விளையாட்டு, உணவு (ரெஸ்டா ர்ன்ட்), டிவி நிகழ்ச்சிகள்,இரவு வாழ்க்கை மற்றும் இதர நிகழ்ச் சிகள் என ஐந்து பிரிவுகளின் கீழ் நிகச்சிகள் பட்டியலிடப்பட்டுள் ளன. ஆம் உங்களுக்கு பிடித்தமா ன டிவி நிகழ்ச்சிகளையும் இந்த தளம் மூலமாக அறிந்து கொள்ள லாம்.
அமெரிக்க நகரங்களை மையமாக கொண்ட சேவை என்றாலும் கருத்தாக்க அளவில் நாமும் தெரிந்து கொள்ள வேண்டிய தளம் தான்.
தனிநப‌ர்களின் தேவையையும் எதிர்பார்ப்பையும் புரிந்து கொன்டு அதற்கேற்ற தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்கும் சேவைகளுக்கா ன அழகிய உதாரணம் தானே இந்த தளம்.
இணைய முக‌வரி: http://www.uplanme.

செலவு கணக்கிற்கு ஒரு கேல்குலேட்டர்.

Posted On March 29,2012,By Muthukumar
டாஸ்மார்க் பாரில் ஒரு குவாட்டரின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்?
விவகாரமான வில்லங்கமான கேள்வியாக தோன்றுகிறதா?கவலைப்பட வேண்டாம்,இது குடிப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் கேட்கப்படும் கேள்வியோ அல்லது குடிப்பதை அங்கீகரிக்கும் நோக்கத்திலான கேள்வியோ அல்ல!மாறாக இந்த கேள்வியின் நோக்கமே குடிப்பழகத்தின் தீமைகளை பொருளாதார நோக்கில் கணக்கிட வைப்பது தான்.
அது எப்படி என்பதை பார்க்கும் முன் இன்னொரு சுவாரஸ்யமான இணையதளத்தை அறிந்து கொள்ளலாம்.உண்மையில் வாட் டி ஐ வொர்க் ஃபார் இட் என்னும் அந்த இணையதளம் தான் டாஸ்மார்கிற்கான விலை கணக்கு தளம் பற்றி சிந்திக்க வைக்கிறது.
இணைய கேல்குலேட்டர் வகையை சேர்ந்த இந்த தளம் அடிப்படையில் மிகவும் எளிமையானது.அடிப்படையில் என்ன மொத்தமுமே எளிமையானது தான்.
ஒரு பொருளை வாங்குவதற்கு ஒருவர் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது என்பதை இந்த தளம் கணக்கிட்டு சொல்கிறது.
அதாவது ஒருவர் எந்த பொருளை வாங்யிருக்கிறாரோ அந்த பொருளுக்கான விலையை இந்த தளத்தில் குறிப்பிட்டு கூடவே அவரது மொத்த வருமானம் மற்றும் வருமான வரி விவரங்களையும் குறிப்பிட்டால் அவற்றின் அடிப்படையில் அந்த பொருளை வாங்க அவர் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதை இந்த தளம் கணக்கிட்டு சொல்கிறது.
கணித பாடத்தில் பயன்படுத்தப்படும் சூத்திரங்களை போல இந்த தளமும் ஒரு செலவு கணக்கிறகான ஒரு நிரலியின் அடிப்படையில் ஒருவர் சம‌ர்பிக்கும் சம்பளம் மற்றும் வருமான வரி தகவல்களை கொண்டு குறிப்பிட்ட விலையிலான பொருளின் மதிப்பை பணத்தில் அல்லாமல் அவ‌ர்களின் உழைப்பின் அடிப்படையில் கணக்கிட்டு சொல்கிறது.
உதாரண‌த்திற்கு ஒரு புதிய செல்போனின் விலை சில ஆயிரங்களாக இருந்தாலும் அது மலிவானதா விலை அதிகமானதா என்பது அதனை வாங்குபவரின் சம்பளத்தை கொண்டு பார்க்கும் போது மலிவானதாகவோ விலை கூடுதலாகவோ தெரிய வரும்.அதாவது செல்போனின் விலை 4000 என்று பார்ப்பதைவிட பத்து நாள் சம்பளம் என்று பார்க்கும் போது அதன் மதிப்பையும் தேவையையும் இன்னும் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும் தானே.
பொருட்களின் மதிப்பை அதை வாங்கியவரின் சம்பாதிக்கும் திறனோடு ஒப்பிட்டு கணக்கு போட்டு சொல்லும் இந்த தளம் முதல் பார்வைக்கு வெறும் சுவாரஸ்யமாக தெரியலாம்.ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் எந்த அளவுக்கு பாடுபட வேண்டியிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் அது தேவை தானா என்னும் கேள்விக்கு சரியான பதிலை பெற முடியும்.
கே.பாலசந்தர் பட பாணியில் புதிய பைக் கேட்கும் பிள்ளையிடம் அப்பா அதற்கான விலையை இந்த தளத்தில் கணக்கிட்டு எனது 489 மணி நேர உழைப்பை செலவிட்டு இதனை வாங்கிதர வேண்டுமா என்று கேட்க‌லாம்.
இல்லத்தலைவரோ அல்லது தலைவியோ ஒரு பொருளை வாங்க செல்லும் முன் அதற்கான விலையை இந்த தளத்தில் கணக்கிட்டு தங்களை பொருத்தவரை அதற்கான உணமையான விலையை தெரிந்து கொண்டு முடிவெடுக்கலாம்.
இது அமெரிக்க இணையதளம் என்பதால் அமெரிக்கர்களின் ஊதிய அடிப்படையில் செய‌ல்படுகிறது.நம்மவர்களுக்கு இந்த தளம் பயன்படாது என்ற போதிலும் இந்த கருத்தாக்கம் நம‌க்கு பயன்படும்.
நம்மூர் சம்பள கணக்கின் அடிப்படையில் இது போல பொருட்களின் விலையை
ஒருவரின் உழைப்பால மதிப்பிடக்கூடிய தளத்தை உருவாக்கி கொள்ளலாம்.
அந்த நிரலானது ஒருவரின் சம்பளம் மற்றும் வருமான வரியை மட்டும் உள்ளடக்கியிராமல் மற்ற முக்கிய குடும்ப செலவுகளையும் கருத்தில் கொண்டிருந்தால் வாங்கிய பொருளின் மதிப்பை இன்னும் சரியாக தெரிந்து கொள்ளலாம்.
இப்போது டாஸ்மார்க் கணக்கிறகு வருவோம்.ஒரு குவாட்டரின் விலை ஐம்பதோ நூறோ அது ஒரு புறம் இருக்கட்டும்,மாதம் பத்தாயிரத்துக்கு மேல் சம்பாதிக்கும் ஒருவருக்கு அது ஒரு மணி நேர சம்பளமாக இருக்கலாம்.ஆனால் தினக்கூலி ஒருவருக்கு அது ஒன்னரை நாள் சம்பளமாக இருக்கும்.
ஒவ்வொருவரின் சம்பாதிக்கும் திறனின் அடிப்படையில் செலவை கணக்கிட்டால் ஒவ்வொரு பொருளின் விலையை மனித உழைப்பின் அளவில் புரிந்து கொள்ள முடியும்.இந்த கணக்கின்படி டாஸ்மார்க் மதுவிற்கும் விலையை கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு குவாட்டருக்கும் ஒருவர் எத்தனை மணி நேர உழைப்பை செலவிட வேண்டியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த கணக்கு ஒரு குவாட்டருக்கான உண்மையான விலையை புரிய வைத்து குடிப்பது தேவையா என்னும் கேள்வியை எழுப்பக்கூடும்.
எல்லாம் சரி தினமும் 200 ரூபாய் சம்பாதிப்பவர் 50 ரூ கொடுத்து குவாட்டர் வாங்கினால் தந்து கால் நாள் சம்பளஃம் அது என்பதை அறியாமால் இருப்பாரா என்று கேட்கலாம்?இருப்பினும் நமது செலவுகளையும் செயல்களையும் வேறு ஒரு அளவுகோளினை கொண்டு அளப்பதற்காக இது போன்ற சேவைகள் புதிய புரிதலை கொடுக்கவே செய்யும்/.
http://www.whatdidiworkforit.com/

கூகிள் தேடலில் (Google Search) விரும்பத்தகாத தளங்களை தவிர்ப்பது எப்படி? (Safe search)

Posted On March 29,2012,By Muthukumar


கூகிள் ஒரு அருமையான தேடல் களம். அதே நேரம் ஒரு கண்ணாடி. நாம் என்ன விரும்புகிறோமோ அதனை பிரதிபலிக்கும் திறம் கொண்டது.

நீங்கள் கூகிள் தேடுபொறியில் (Google Search Engine) சில குறிச்சொற்களைக் (keywords) கொண்டு தேடும் போது, உங்களுக்காக பல அதிர்ச்சிகள் காத்து இருக்கலாம்.

நீங்களே விரும்பாத தளங்கள்,  சொற்களின் பயன்பாட்டால்,  தேடலின் முதல் பக்கத்தில் குவியலாம்.
 
காமக்களியாட்டங்கள் அல்லது விரும்பத்தகாத செய்திகளை உள்ளடக்கிய வலைத்தளங்களை உங்கள் தேடலில் வராமல் எப்படி தவிர்ப்பது என்று யோசிக்கிறீர்களா?

அப்ப சரியான இடத்திற்குத் தான் வந்து இருக்கீங்க!!

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்:


கூகிள் தேடலின் போது வலது பக்கம் பாருங்கள். அங்கு இருக்கும் சக்கரத்தைச்   சுட்டுங்கள். அதில் ' Search Settings' ஐ சொடுக்குங்கள்.



அடுத்து வரும் பக்கத்தின் முதலிலேயே "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யுங்கள்!!!




வரும் பக்கத்தில் , "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யுங்கள்!!!

தேர்வு செய்த பின்னர், விருப்பங்களைச் சேமிக்க மறவாதீர்கள்!!

ஒவ்வொரு நிலைக்கும் என்ன வேறுபாடு?


  • Strict filtering - வெளிப்படையான (sexually explicit) பாலின பக்கங்கள் அனைத்தையும், அதற்கு செல்லும் வழிகளைக் கொண்ட பக்கங்களையும் (links) தவிர்க்கும்
  • Moderate filtering - வெளிப்படையான பாலின பக்கங்கள் அனைத்தையும் தவிர்க்கும். வழிகள் தவிர்க்கப்படாது. 
        [இது தான் இயல்பிருப்பு (default) நிலையாகும்]
  • No filtering : எந்த தடையும் இல்ல. எல்லா விதமான பக்கங்களையும் காட்டும்.

எல்லா இடங்களிலும் செய்வது எப்படி? தமிழ் வழித்தேடலிற்கு

நீங்கள் உங்கள் கூகிள் கணக்கைக் கொண்டு பல கணிணிகளில் வேலை செய்ய வேண்டி இருக்கலாம். எல்லா கணிணிகளிலும் இதனைச் செய்வது இயலாத காரியம். நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்து தேடும் போது, எந்த கணிணியிலும் அதனைச் செயல்படுத்த வழி உண்டு.

SafeSearch Filtering பகுதியில்  "Lock Safe Search" என்று ஒரு இடம் உள்ளது. அதனைச் சொடுக்குங்கள்..


இதன்பின், நீங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து தேடினால், நீங்கள் தேர்ந்தெடுத்த அதே அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கும்.

 


தமிழ் வழித்தேடலிற்கு

 மேற்கூறப்பட்ட வழி  ஆங்கில வழி தேடலிற்கு (English Search) மட்டுமே பயன்படும். தமிழ் வழி தேடல் வைத்து இருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது.
 
நீங்கள் தமிழில் கூகிள் பயன்படுத்துபவராக இருந்தால், மொழிமாற்றம் செய்து ஆங்கில மொழிக்குச் செல்லுங்கள். பிறகு மீண்டும் தமிழிற்கு மாறிக் கொள்ளுங்கள். இனி தொடருங்கள் !!!