சனி, 28 ஜனவரி, 2012

நம் வலைப்பூக்கு முப்பரிமான ( 3D) ரிப்பன் பேனர் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம்.

Posted On Jan 28,2012,By Muthukumar
 
இணையதளம் அல்லது பிளாக் வைத்து இருப்பவர்கள் தங்கள் தளத்திற்கு முப்பரிமான ரிப்பன் எப்படி உருவாக்குவது என்பதை சொல்லி கொடுப்பதோடு உருவாக்கியும் கொடுக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
படம் 1
சில நிமிடங்களில் நம் தளத்திற்கு ரிப்பன் பேனர் நாம் விரும்பும் வண்ணத்தில் அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து
உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.quickribbon.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இடது பக்கம் இருக்கும் Step 1 என்பதில் Rippon Text என்பதில் என்ன வார்த்தை தெரிய வேண்டுமோ அதை தட்டச்சு செய்ய வேண்டும் அடுத்து நமக்கு பிடித்த Font , Size மற்றும் Color போன்றவற்றை தேர்ந்த்டுத்துக்கொண்டு அடுத்து Step 2-ல் நமக்கு பிடித்த ரிப்பன் Style மற்றும் ரிப்பன் இருக்க வேண்டிய வண்ணத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து இருக்கும் Step 3-ல் Background Color மாற்றம் செய்ய வேண்டுமானால் அதையும் தேர்ந்தெடுத்து Apply என்பதை சொடுக்கி Preview பார்த்துக்கொள்ளலாம், அடுத்து இருக்கும் Step 4-ல் ரிப்பனை சொடுக்கினால் எந்தத்தளத்திற்கு செல்ல வேண்டுமோ அதன்Hyperlink -ம் கொடுத்து Generate Ribbon என்பதை சொடுக்கினால் வலது பக்கம்
இருக்கும் கட்டத்திற்குள் கிடைக்கும் JavaScript Code -ஐ அப்படியே காப்பி செய்து நம் தளத்தில் சேர்த்துவிட வேண்டியது தான் அழகான முப்பரிமான ரிப்பன் உருவாக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு பிடித்த‍ வலைதளம் வெவ்வேறு கணினி திரைகளில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை அறிய உதவும் தளம்


ந‌மக்கு பிடித்த முறையில், நமக்கு பிடித்த‍ வலைப்பூ வை நமது கணினி திரையில் எவ்வாறு தோற்ற மளிக்கிறது என்பதை மட்டுமே நாம் அறிவோம். ஆனால் வெவ் வேறு ரெசொலூஷன் கொண்ட கணினித் திரைகளில் அது எப்படி தோ ற்ற மளிக் கும் என்பது நமக்கு தெரிவதில் லை.
உதாரணமாக நமது கணினி திரையின் ரெசொலூஷன் 1600 x900 என்று வைத்துக் கொள்வோம் நமது பிளாக் 800×600 ரெசொலூ ஷன் கொண்ட கணினி திரையில் எப்படி தோற்றமளிக்கும் என்ப தையும் ஐஃபோன், வை பிரவுஸர் உள்ளிட்ட‍ திரைகளில் எப்ப‍டி தோற்ற‍மளிக்கும் என்பதை நாம் அறிய முடியாது .அதை நாம் அறிந்து கொள்ள‍
http://resolutiontester.com/ இந்த தளத்திற்கு சென்று நமக்கு பிடித்த‍ வலைப்பூ முகவரியைக் கொடுத்தால் வெவ்வேறு ரெசொ லூஷன்களில் நமக்கு பிடித்த‍ வலைப்பூ எவ்வாறு தோற்றமளிக் கும் என்பதை அறிந்துகொள்ளலாம் .
பொதுவாக தற்போது உபயோகத்தில் உள்ள 95 சதவீத கணினி திரைகள் 1024x 768  மற்றும் அதற்கு அதிகமான ரேசொ லூஷனை கொண்டுள்ளன என்பது கூடு தல் தகவல் ஆகும்.
Resolution Tester

வியாழன், 26 ஜனவரி, 2012

கட்டாயம் இருக்க வேண்டிய 3 ஃபோட்டோஷொப் - பிறஷ்கள் இலவசமாக! - (3 Photoshop brushes for Free! )

Posted On Jan 26,2012,By Muthukumar

TamilClone Frame brushes :
திருமண,பிறந்த நாள் போன்ற விழாக்களுக்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களுக்கு ஃபோட்டோஷொப் ஃப்ரேம் ( Photoshop Frame) போட்டு மெருகூட்டுவது வழமை. தற்போது பழைய டிஸைன் ஆன கட்டம் கட்டிய பெட்டிக்குள் போடிவதெல்லாம் Bore. தற்போதைய நவீன டிஸைன்களில் இருக்கும் ஸ்ப்லாஷ் போர்டர்கள் தான் அழகூட்டும். அதற்கு உதவும் brushe இக்குரிய லிங் இங்கு தரப்பட்டுள்ளது. பயண்படுத்திப்பாருங்கள்.
அளவு : 5.16Mb
தரவிறக்க : Clone 01

இரு கரம் நீட்டி அழைக்கும் இணையதளம்.


Posted on Jan 26,2012,By Muthukumar

உலகிலேயே அழகான இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஆனால் இண்டெர்நெட்டிலேயே அழகான இடம் இது என்கிறது அந்த இணையதளம்.அதன் பெயரும் அதே தான்.இண்டெர்நெட்டின் மிகவும் அழகான இடம்.அதாவது தி நைசஸ்ட் பிலேஸ் ஆன் த நெட்.இது தான் அந்த தளத்தின் முகவரி.
அழகான இடம் என்றவுடன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் காட்சிகளோ அல்லது அழகிய தேவதைகளின் புகைப்படங்களோ குவிந்திருக்கும் என்று நினைக்க வேண்டாம்.
இந்த தளத்தின் தோற்றத்தில் அழகு கிடையாது ஆனால் அதன் நோக்கம் மிகவும் அழகானது.அதாவது இந்த தளத்திற்கு வருபவர்கள் எல்லாம் இனிமையாக உணர வேண்டும் என்பது தான் அதன் நோக்கம்.அதனை நிரைவேற்றும் வகையில் இணையவாசிகளை இரு கரம் நீட்டு வரவேற்கிறது.
நமது வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் மகிழ்ச்சி பொங்க இரு கரம் நீட்டி வரவேற்ப்போம் அல்லவா,அதே போல இந்த தளத்தில் நுழைந்ததும் கட்டியணைக்க தயாராக இருப்பவர் போல இருகரம் நீட்டி வரவேற்பவரின் வெப்கேம் காட்சி தோன்றுகிறது.
வெப்கேமில் தோன்றும் நபர் வாங்க வாங்க என்று சொல்பவர் போல இரு கரத்தையும் நீட்டி வரவேற்பதை பார்க்கும் போது கொஞ்சம் பரவசம் உண்டாகும்.இத்தகைய இதமான உணர்வை ஏற்படுத்துவதற்காகவே ஜெப் லேம் அன்னும் அமெரிக்கர் தனது நண்பரோடு சேர்ந்து இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.
விளமப்ர நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் லேம் ஒரு நாள் மிகவும் சோர்வாக உணர்ந்திருக்கிறார்.அப்போது தான் அவருக்கு அந்த யோசனை உண்டானது சோர்வாக இருக்கும் போது நண்பர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துவது போல தட்டிக்கொடுக்க ஒரு இணையதளம் இருந்தால் என்ன என்பது தான் அந்த யோசனை.
அந்த இணையதளம் எல்லோரையும் வரவைத்து அரவனைக்க வேண்டும் என்டு நினைத்த அவர் தனது நண்பரோடு சேர்ந்து காமிராவை தூக்கி கொண்டு அரவனைத்த படி போஸ் கொடுக்க கூடியவர்களை தேடத்துவங்கினார்.இந்த ஐடியா ஏற்கப்படுமா என்ற தயக்கத்தை மீறி பலரும் அவருக்கு உற்சாகமாக் போஸ் கொடுத்தனர்.
அந்த காட்சிகளை தான் தளத்தில் இடம் பெறச்செய்துள்ளார்.தளத்தில் நுழைநதுமே அழகிய கடற்கரை பின்ன்ணியில் ஒருவர் இரு கரம் நீட்டி வரவேற்று உற்சாகம் அளிக்கிறார்.
நண்பன் படத்தின் ஆல் ஈஸ் வெல் போல வசூல் ராஜாவின் கட்டுப்பிடி வைத்தியம் போல சக மனிதர்களை அன்பால் உற்சாகம் கொள்ள வைக்க முயல்கிறது இந்த தளம்.
இந்த தளத்தை பார்த்து ரசித்த பலர் கேட்காமலேயே தாங்கள் இரு கரம் நீட்டி ஆரத்தழுவ தயாராக இருப்பது போன்ற காட்சிகளை சமர்பிக்கத்துவங்கி விட்டனராம்.இந்த எதிரபாராத வரவேற்பை அடுத்து இப்போது தளத்தில் மற்றவர்களும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் வெப்கேம் காட்சிகளை சம்ப்ர்பிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி;http://thenicestplaceontheinter.net/

பைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்

Posted On Jan 26,2012,By Muthukumar
ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம். ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
பைல்களைச் சுருக்கி அமைப்பதில் Zip துணைப் பெயர் கொண்டு அமைக்கப்படும் பைல்களே அதிகம். இது 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. காலப்போக்கில், விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில், பைல்களைச் சுருக்கி அமைப்பதற்கும், ஏற்கனவே சுருக்கி வைக்கப்பட்ட பைல்களில், புதிய பைல்களை இணைக்கவும் வசதிகளைத் தரும் புரோகிராம்கள், சிஸ்டத்துடன் இணைத்தே தரப்பட்டன. சிஸ்டங்களுடன் தரப்படும் இந்த வசதியில் சில கட்டுப்பாடுகள் இருந்ததனாலேயே விண்ஸிப் போன்ற புரோகிராம்கள், விருப்பப் புரோகிராம்களாக அமைந்தன. நவீன வசதிகளுடன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு இந்த புரோகிராம்கள் தரப்பட்டாலும், இவை பலர் அறியாமலேயே இருக்கின்றன. கீழே தரப்பட்டுள்ள இந்த புரோகிராம்களையும் நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். உங்கள் தேவைக்குச் சரியாக அமைந்தால், தொடர்ந்து பயன்படுத்தலாம்.
1. ஜே ஸிப் (jZip): இந்த வகையில் நமக்குத் தென்படும் முதல் புரோகிராம் ஜே ஸிப். பைல்களைச் சுருக்கி ஆர்க்கிவ் அமைக்க, 7 ஸிப் பயன்படுத்தும் அதே தொழில் நுட்பத்தினை ஜே ஸிப் பயன்படுத்துகிறது. ஸிப் துணைப் பெயர் கொண்ட பைல் மட்டுமின்றி, TAR, GZip, 7-Zip, RAR மற்றும் ISO ஆகிய துணைப் பெயர் கொண்ட பைல்களையும் இந்த புரோகிராம் கையாள்கிறது. பைல்களை மிக மிகக் குறைந்த அளவில் சுருக்கித் தருவது இதன் சிறப்பு. பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது. நிறுவனங்களுக்கென தனியான புரோகிராமும் கிடைக்கிறது. இந்த புரோகிராம் தரப்படும் இணைய தள முகவரி :http://www.jzip.com/
2. பி-ஸிப் (PeaZip): Zip துணைப் பெயர் மட்டுமின்றி, மற்ற துணைப் பெயர்களுடனும் சுருக்கப்பட்ட பைல்களைத் தரும் புரோகிராம்கள் உள்ளன. பி-ஸிப் புரோகிராம் இவற்றை எளிதாகக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 7z, Arc, Bz2, Gz, Paq, Pea, Quad/Balz, Tar மற்றும் Upx ஆகிய பார்மட்களில் சுருக்கிய பைல்களைத் தருகிறது. இவை மட்டுமின்றி, Ace, Arj, Cab, Dmg, Iso, Lha, Rar மற்றும் Udf ஆகிய துணைப் பெயருடன் சுருக்கப்பட்ட பைல்களையும் விரித்து பைல்களாகத் தருகிறது. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் பயன்படுத்தப்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது. புரோகிராமினை இலவசமாகப் பெற http://www.peazip.org/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.
3. குயிக் ஸிப் (Quick Zip): சுருக்கப்பட்ட பைல்களிலிருந்து பைல்களைப் பெற்றுப் பயன்படுத்துவதில், குயிக் ஸிப் புரோகிராம் எளிதாகச் செயல்படுகிறது. இதற்கெனத் தரப்படும் இன்டர்பேஸ் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், போல்டர்கள், விண்டோக்கள் மற்றும் சுருக்கி வைக்கப்பட்ட பைல்களிடையே செல்வது மிக எளிதாகிறது. Zip மற்றும் 7z உள்ளிட்ட பல வகை பார்மட்களை இது கையாள்கிறது. சுருக்கிய பைல்களில், புதிய பைல்களைச் சுருக்கி அமைத்து இணைக்க, அவற்றை இழுத்துச் சென்று விடும் வசதியை அளிக்கிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.quickzip.org/
4. ஸிப் ஜீனியஸ் (ZipGenius): புதிய வகை பார்மட்களில் சுருக்கித் தருவதும், அதிகமான எண்ணிக்கையில் மற்ற பார்மட்களைக் கையாளும் திறன் பெற்றிருப்பதும் இந்த புரோகிராமின் சிறப்பாகும். இதன் இன்டர்பேஸ் விண்டோஸ் எக்ஸ்புளோர ருடன் இணைந்து செயல்படும் கட்டமைப்பி னையும் கொண்டுள்ளது. இதனால், இந்த புரோகிராமின் செயல்பாட்டினை எந்த ஒரு எக்ஸ்புளோரரின் விண்டோவிலும் பெற முடியும். இருபதுக்கும் மேற்பட்ட பைல் சுருக்கும் பார்மட்டினை சப்போர்ட் செய்வதுடன், இந்த புரோகிராம், நான்கு வகையான தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால் நாம் ஒருவருக்கொருவர் பைல் களைப் பரிமாறிக் கொள்வதில் அதிக பாதுகாப்பு வசதிகள் கிடைக்கின்றன. ஸிப் ஜீனியஸ் புரோகிராம் பெற http://www.zipgenius.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
5. 7--ஸிப் (7-Zip): இது ஓப்பன் சோர்ஸ் திட்டத்தில் உருவான புரோகிராம். இதனுடைய 7z பார்மட்டில், மிக வலுவான பைல் சுருக்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பைல்களைச் சுருக்கும் போதே, மற்றவர் கள் அதனை அணுகித் திறக்க முடியாத வகையில், பாதுகாப்பு கிடைக்கும் வகையில் சுருக்க வழி தரப்படுகிறது. எளிதாகப் புரிந்து கொண்டு செயல்படும் வகையில், இதன் இன்டர்பேஸ் விண்டோ அமைக்கப்பட்டுள்ளது. இதன் பார்மட் தவிர 7z, Xz, BZip2, GZip, Tar மற்றும் Zip ஆகிய பார்மட்களையும் கையாளும் திறனை இந்த புரோகிராம் தருகிறது. 32 பிட் மற்றும் 64 பிட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயக்கும் வகையில் இந்த புரோகிராம் www.7-zip.org/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது.
6. இஸ் ஆர்க் (IZArc): மேலே தரப்பட்ட பல்வேறு புரோகிராம்களின் செயல்பாடு போலவே, இந்த புரோகிராமும் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. 7--Zip, Ace, Arc மற்றும் பல பார்மட்களைக் கையாள்கிறது. இதன் இன்டர்பேஸ் வழியாக, இந்த பைல் பார்மட்களை வெகு எளிதாகக் கையாளலாம். விண்டோஸ் எக்ஸ்புளோர ரில் இருந்து, இந்த புரோகிராமின் விண்டோவிற்கு பைல்களை இழுத்து வந்து சுருக்கும் வசதி உள்ளது. சிடிக்களில் பைல்கள் இருப்பின், Iso, Bin, Cdi மற்றும் Nrg ஆகிய இமேஜ் பார்மட் பைல்களை அணுகிச் சுருக்கும் வசதியும் உள்ளது. இந்த அனைத்து வசதிகளுக்கும் மேலாக, இதில் பயன்படுத்தப்படும் 256-bit AES என்ற தொழில் நுட்பம், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, சுருக்கப்பட்ட பைல்களை அணுகி தகவல்களைப் பெற முடியும் என்ற கூடுதல் பாதுகாப்பினை வழங்குகிறது. புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.izarc.org/
7. ஹேம்ஸ்டர் (Hamster): பைல் சுருக்கும் புரோகிராம்கள் அனைத்தும் விண்டோஸ் எக்ஸ்புளோரரு டன் இணைந்து பணியாற்றும் வசதியைத் தருகின்றன. ஹேம்ஸ்டர் புரோகிராம் தனக்கென தனியான ஒரு விண்டோ வினை அமைத்துக் கொண்டு செயல் படுகிறது. நம் விருப்பப்படியும் விண்டோவினை பல வண்ணங்களில் அமைக்கலாம். எந்த புதிய பார்மட்டிலும் நம் விருப்பப்படி பைல்களைச் சுருக்கி அமைக்கலாம். தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் ப்ராசசர்களின் செயல் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஹேம்ஸ்டர் செயல்படுவது, இரு மடங்கு வேகத்தில் விரைவாக வேலையை முடிக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சி தரும் இந்த புரோகிராம் தேவைப்படுவோர் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.hamstersoft.com/
இதுவரை விண்ஸிப், விண்டோஸ் ஸிப் புரோகிராம் வசதிகளை மட்டுமே நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வந்திருப்போம். இப்போது மேலே பல இலவச புரோகிராம்கள் பட்டியலிடப்பட்டு விளக்கப் பட்டுள்ளன. இவற்றையும் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் செயல்திறன் குறித்து எங்களுக்கு எழுதுங்களேன்.

பிழையைக் காட்டும் எக்ஸெல்!

Posted On Jan 26,2012,By Muthukumar


எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் பார்முலா ஒன்றை என்டர் செய்துள்ளீர்கள். உடனே எக்ஸெல் உங்களுக்கு #NAME என்று காட்டுகிறது. இது என்ன? எக்ஸெல் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை நீங்கள் பார்முலாவில் அமைத்திருக்கிறீர்கள். அது ஒருவரின் பெயர் அல்ல. ஏதோ ஒன்றின் பெயர்; ஆனால் அது எக்ஸெல் தொகுப்பிற்கு புரியவில்லை. எனவே இப்படி ஒன்றை தருகிறது. ஏதாவது ஒரு பங்சனாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக SUM என்பதற்கு டைப்பிங் பிழையாக SAM என நீங்கள் அமைத்திருக்கலாம். இது ஒரு சிறிய பார்முலாவில் உள்ளது என்றால் உடனே நீங்களே அந்த பார்முலாவினை மீண்டும் பார்த்து சரி செய்துவிடலாம். ஆனால் நீளமான பார்முலா என்றால் முழுதாக அனைத்தையும் பார்த்து எதில் பிழை உள்ளது என்று அறிய நேரம் ஆகுமே? பிழையைக் கண்டறிய முடியவில்லை என்றால் ஏமாற்றமும் எரிச்சலும் தானே மிஞ்சும். இதற்கு எக்ஸெல் ஒரு மறைமுக உதவியைத் தருகிறது. இதற்கு உங்கள் பார்முலா முழுவதையும் ஆங்கிலத்த்தில் சிறிய எழுத்துக்களில் டைப் செய்திடுங்கள். பொதுவாக இது போல நீங்கள் சிறிய எழுத்துக்களில் டைப் செய்து என்டர் தட்டியவுடன் எக்ஸெல் அவை அனைத்தை யும் கேப்பிடல் எழுத்துக்களில் மாற்றும். இங்கு தான் நமக்கு உதவி கிடைக்கிறது. எக்ஸெல் தான் அறிந்து கொள்ளும் பார்முலாவின் பகுதியினை மட்டும் அவ்வாறு கேப்பிடல் எழுத்துக்களில் மாற்றும். எதில் பிழை இருந்து தன்னால் அறிய முடியவில்லையோ அந்த சொற் களை மாற்றாமல் விட்டுவிடும். எனவே எதில் பிழை உள்ளது என்று நமக்குத் தெரிந்துவிடும். நாம் உடனே அதனைச் சரியாக அமைத்துவிடலாம்.
இதில் இன்னொரு சிறிய ஆனால் முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். டேட்டாக்கள் குறித்த சொற்கள், அவற்றின் ரேஞ்ச் காட்டும் இடங்களை எக்ஸெல் கேப்பிடல் சொற்களில் மாற்றாது. எனவே அவற்றில் பிழை இருந்தால் நாமாகத் தான் கண்டறிய வேண்டும். அதனாலென்ன! பிழைகள் இருக்குமிடம் ஓரளவிற்குச் சுட்டிக் காட்டப்படுவதால் அவற்றைத் திருத்துவதற்கு நம் தேடுதல் நேரமும் உழைப்பும் குறைகிறதே.

ஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்.

Posted On Jan 26,2012,By Muthukumar

நம் கணினி மூலம் உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பல
மொழிகளிலும் இருக்கும் 1402 டிவி சேனல்களையும் ஒரே தளத்தில்
இருந்து கண்டு ரசிக்கலாம்  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

இணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க பல இணையதளங்கள்
இருந்தாலும் சில தளங்கள் ஆன்லைன் மூலம் பார்க்க கட்டணம்
வசூலிக்கின்றனர் ஆனால் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக
ஆன்லைன் மூலம் உலக நாடுகளில் இருக்கும் 1402  டிவி
சேனல்களையும் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.tvweb360.com/
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த நாட்டின்
டிவி சேனல் பார்க்க வேண்டுமோ அந்த நாட்டை தேர்ந்தெடுக்க
வேண்டும் அடுத்து அந்த நாட்டில் எந்த மொழி சேனல் வேண்டுமோ
அதையும் தேர்ந்தெடுந்தால் குறிப்பிட்ட மொழி சேனல்கள் பல
நமக்கு கிடைக்கும் இதில் எந்த சேனல் வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து சொடுக்கினால் அந்த சேனலை நாம் இலவசமாக
பார்க்கலாம். செய்திகள் , வரலாறு , காமெடி, பொழுது போக்கு
சினிமா எனப் பல சேனல்களை நாம் இலவசமாக இங்கிருந்து
பார்க்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.