ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

மைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி ஆன்லைன் மூலம் விளையாடலாம்.

Posted On April 01,2012,By Muthukumarமைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி  ஆன்லைன் மூலம் விளையாடலாம்.
படம் 1
ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் எத்தனை புதிய OS வந்தாலும் இன்றும் மைக்ரோசாப்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு தனி மதிப்பு உண்டு அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட Age of Empires விளையாட்டின் புதிய பதிப்பை   கணினி மூலமும் ஆன்லைன் மூலமும் எளிதாக விளையாடலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லாமல் விளையாட்டின் முழு கட்டுப்பாட்டையும் நம் விரல் நுனிக்கே கொண்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Age Of Empires விளையாட்டை ஆன்லைன் மூலம் விளையாட ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.ageofempiresonline.com
இந்த விளையாட்டில் ஒரு நாட்டை நமக்கு கொடுத்து அதை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம், உணவில் ஆரம்பித்து பாதுகாப்பு வரை ஒவ்வொன்றையும் எப்படி எல்லாம் சிறப்பாக செய்யலாம் என்பதை நாமே முடிவு செய்யலாம்.சிறு குழந்தைகள் முதல் CEO வரை அனைத்து தரப்பினரும் விளையாடும் ஒரே விளையாட்டு இது என்பது தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கூடுதல் சிறப்பு.த்து எக்காரணம் கொண்டும் இந்த விளையாட்டு நமக்கு சலிப்பை ஏற்படுத்தாது. ஒரு நாள் அல்லது 1 மாதம் அல்ல பல மாதங்கள் சென்றாலும் எந்தவிதமான சோர்வையும் ஏற்படுத்தாத விளையாட்டு, அறிவுக்கு தீனி போடும் விளையாட்டு மட்டுமல்ல புத்திசாலிதனத்தையும், திறமையையும் வளர்க்கும் ஒரு பயனுள்ள விளையாட்டு.ஏற்கனவே மென்பொருள் துணையுடன் ஆன்லைன் மூலம் விளையாடலாம் என்ற வசதியுடன் சேர்த்து இப்போது இனையதளம் வாயிலாக ஆன்லைன் மூலமும் விளையாடலாம்.

நான் செய்ய நினைப்பதெல்லாம்,இணையதள‌ம்

நான் செய்ய நினைப்பதெல்லாம்,இணையதள‌ம்
திட்டமிட்டு செயல்படும் விருப்பத்தையும்,அதற்கேற்ப நினைத்ததை செய்து முடித்து முன்னேறும் துடிப்பையும் தனிப்பட்ட அனுபவமாக மட்டுமே நினைத்து விட வேண்டியதில்லை.செய்ய நினைப்பவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்கள் தரும் ஊக்கத்தோடு அதை சாதித்தும் காட்டலாம்.
கோன்னாஸ்பியர் இணையதளம் இந்த நம்பிக்கையில் தான் துவக்கப்பட்டுள்ளது.செய்ய விரும்பும் செயல்களையும் சமூக மயமாக்க வந்திருக்கும் சேவை இது.
அதாவது பகிர்தலின் மகத்துவத்தை செய்து முடிக்க நினைப்பவற்றிலும் நிகழ்த்தி காட்ட விரும்பும் சேவை!
எதையும் மறக்காமல் இருக்க சிறிய காகிதத்தில் குறித்து வைத்து கொள்வது போல செய்து முடிக்க நினைப்பவற்றை குறித்து வைத்து கொள்வது அவற்றை மறந்து விடாமல் இருப்பதற்கான எளிய வழியாக கருதப்படுகிறது.இப்படி செய்ய நினைப்பவற்றை குறித்து கொள்ள உதவும் குறிப்பேடுகளாக செய்ல்படும் இணைய சேவைகளும் இருக்கின்றன.
ஆனால் செய்ய நினைப்பவற்றை குறித்து வைத்தால் மட்டும் போதுமா?அதற்கான ஊக்கம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் தானே.
அதை தான் கோன்னாஸ்பியர் செய்ய முயல்கிறது.எப்படி என்றால், நாம் செய்ய நினைப்பவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவற்றுக்கான ஊக்கத்தை பெற வழி செய்கிறது.
அந்த வகையில் செய்ய விரும்பும் செயல்களை பகிர்ந்து கொள்வதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம்.
எதை செய்ய நினைக்கிறோமோ அதனை உறுப்பினர்கள் இந்த தளத்தில் வெளியிடலாம்.அதாவது பகிர்ந்து கொள்ளலாம்.
எந்த செயலை வேண்டுமானாலும் வெளியிடலாம்.பேஸ்புக்கில் இருப்பது போன்ற கட்டத்தில் செயல்களை வெளியிட்ட பிறகு அதனை பேஸ்புக் கணக்கு மூலம் நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.
இதன் மூலம் நண்பர்கள் உங்கள் நோக்கத்தை தெரிந்து கொள்ள முடியும்.அது குறித்து கருத்து சொல்லி ஊக்குவிக்கவும் முடியும்.
உங்கள் நண்பர்கள் மட்டும் அல்ல,இந்த தளத்தின் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொண்டு அவர்களின் ஊக்கத்தையும் பெறலாம் என்பது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம்.
நான் செய்ய நினைப்பதெல்லாம் என்று பகிர்ந்து கொண்ட பிறகு நம்மை போல தங்களது திட்டங்களை பகிர்ந்து கொண்ட மற்ற உறுப்பினர்களின் செயல்களை படித்து பார்க்கலாம்.அந்த செயல்களுக்கு ஆதரவாக கருத்தும் தெரிவிக்கலாம்.அவர்களது செயல் பிடித்திருந்தால் அவர்களை பின் தொடரவும் செய்யலாம்.
இதே போலவே நம்மையும் மற்றவர்கள் பின் தொடர முன்வரலாம்.இது புதிய நட்புக்கு வழிவகுக்கும்.செயல்களை மையமாக கொண்ட நட்பு.ஊக்கம் தரக்கூடிய நட்பும் கூட!
மற்ற உறுப்பினர்களின் செயல்களை படித்து பார்ப்பதன் மூலமாக நம்க்கு தோன்றாத புதிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வளவு ஏன் நமது நகரில் நடக்ககூடிய சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் கூட இந்த பகிர்வுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நமக்கு நாமே ஒரு இலக்கை நிர்ணயித்து கொண்டு அதனை தனியே அடைய முயல்வதை விட மனதில் உள்ள எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்களின் கருத்துக்கள் மற்றும் தோளில் தட்டி கொடுக்கும் ஊக்கத்தோடு அதனை நிறைவேற்ற முயல்வது சுவாரஸ்யமானது தானே.
இந்த தளத்தில் விதவிதமான மனிதர்களை சந்திக்கலாம்.அவர்கள் வாயிலாக புது வகையான செய்லகளையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.குறிப்பிட்ட செயலின் பின்னே உள்ள சிந்தனை கவர்ந்தால் அந்த எண்ணத்திற்குறியவரோடு தொடர்பு ஏற்படுத்தி கொள்ளலாம்.நமக்கும் கூட இத்தகைய நண்பர்கள் கிடைக்கலாம்.
ஒரு கட்டத்தில் இந்த தளத்தில் செய்லகளை வெளியிடும் வழக்கம் தவிர்க்க இயலாத பழக்கமாகவும் மாறிவிடலாம்.அது மேலும் உத்வேகத்தை தரக்கூடும்.
செயல்கள் சார்ந்த இந்த சமுக வலைப்பின்னல் தளம் சுவார்ஸ்யமானது.ஆனால் இதற்கென கணிசமான உறுப்பினர்கள் உருவானால் தான் இது பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி;http://www.gonnasphere.com/

பைல்களை வரிசைப்படுத்த

Posted OnApril 01,2012,By Muthukumar
பைல்களின் மொத்த தொகுப்பை அதன் டிரைவ் வாரியாகக் காண விண்டோஸ் எக்ஸ்புளோரர் பயன்படுத்து கிறோம். இவை நமக்குக் காட்டப்படும் காட்சியில் மேலாக இவற்றின் தலைப்பு களைக் காணலாம். அவை நாம் செட் செய்ததற்கு ஏற்றபடியான எண்ணிக்கை யிலும் வகைகளிலும் இருக்கும். Name, Size, Type, Date Modified என்ற படி அவை கிடைக்கும். சில வேளைகளில் இவற்றின் கீழாகக் கிடைக்கும் தகவல்கள், எடுத்துக்காட்டாக பைல்களின் பெயர்கள் சற்றுப் பெரியதாக இருந்தால் அவை Name டேப்பிற்குள் முழுமையாகத் தெரியாது. அவற்றை முழுமையாகக் காண வேண்டும் என்றால் மேலே உள்ள டேப்களுக்கு இடையே கர்சரைக் கொண்டு சென்று டேப்களின் நீளத்தை கர்சரால் இழுத்துச் சரி செய்துவிடலாம்; அதாவது நீட்டி அல்லது சுருக்கிவிடலாம்.
இதைக் காட்டிலும் இன்னொரு சிறந்த வழி உள்ளது. டேப்களைப் பிரிக்கும் இடைக் கோட்டில் கர்சரைக் கொண்டு சென்று டபுள் கிளிக் செய்தால் இந்த டேப் வெளி தானாகத் தன்னைச் சரி செய்து கொள்ளும். இந்த ட்ரிக் எக்ஸெல் மற்றும் அவுட்லுக் போன்ற அனைத்து புரோகிராம்களிலும் செயல்படும்.
எப்போதாவது ஒரு போல்டரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பைல்களில் ஒன்றைத் தேடும் முயற்சியில் சலிப் படைந்து இருக்கிறீர்களா? சில வேளைகளில் பைலின் பெயரைச் சரியாகத் தெரியாமல் தொடர்ந்து தேடுவோம். அப்படிப்பட்ட வேளைகளில் அந்த பைலைக் கடைசியாக எப்போது எடிட் செய்தோம் என்று தெரிந்தால் அதனை எளிதாகக் கண்டுவிடலாம். அல்லது அது என்ன வகை பைல் என்று தெரிந்தாலும் கண்டுவிடலாம். இதற்கு பைல்களை வரிசைப்படுத்த வேண்டியதுதான் வழி.
Name, Size, Type, Date Modified என்பனவற்றில் Name என்ற டேப்பின் மேலாகக் கிளிக் செய்தால் பைல்கள் அவற்றின் பெயர்களின் அடிப்படையில் அகர வரிசைப்படி வரிசைப்படுத்தப்படும். அதே போல Size என்ற டேப்பின் தலைப்பில் கிளிக் செய்தால் பைலின் அளவின் அடிப்படையில் அவை வரிசைப் படுத்தப்படும். Type என்ற டேப்பின் மீதாகக் கிளிக் செய்தால் பைல்கள் அவற்றின் வகைப்படி, எடுத்துக்காட்டாக jpeg, doc, exe, mp3, pmd, என்றபடி வரிசைப்படுத்தப்படும். Date Modified என்ற டேப்பில் கிளிக் செய்தால் நாம் அந்த பைல்களை எடிட் செய்த தேதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். வரிசைப்படுத்தப் பட்ட பின் நாம் தேடிய பைல்களைக் கண்டறிவது எளிதான வேலையாகி விடுமே.

லேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க

Posted On April 01,2012,By Muthukumar
கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.
தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இது குறித்து இங்கு காணலாம். மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன. ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு. இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.
அடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.
லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.
பொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.
விசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால், உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது. திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.
காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.
பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.
பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம். வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாது. இந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.
இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது எளிதாகிறது. இந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.
லேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால், வெப்பமானது லேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.

படங்களில் உள்ள வாட்டர்மார்க்கினை நீக்க


Posted On April 01,2012,By Muthukumar


படங்களை மெறுகேற்றவும், படங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கவும். அனைவரும் கையாளும் மென்பொருள் போட்டோசாப் ஆகும். இதில் அனைத்து போட்டோ தொடர்பான வேலைகளையும் விரைந்து செய்ய முடியும். இந்த மென்பொருளின் மூலம் ஒரு சில நேரங்களில் சிறிய வேலைகளை கூட செய்ய அதிக நேரம் ஆகும். உதாரணமாக டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கும் படங்களில் தேதி இருக்கும். இதனை படத்திலிருந்து நீக்க வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மூன்றாம் தர போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். இதுபோன்று உள்ள வாட்டர்மார்க்குகளையும், தேவையற்ற படங்களையும் நீக்க ஒரு அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது. அதுதான் Inpaint என்னும் மென்பொருள் ஆகும். அது தற்போது இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளுக்கான லைசன்ஸ் கீயை இலவசமாக பெற சுட்டி

கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் ட்ரான்ஸ்லேட் செய்யப்பட்ட லைசன்ஸ் கீயை இலவசமாக பெற சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களுடைய தகவல்களை உள்ளிட்டு Absenden என்னும் பொத்தானை அழுத்தவும். அரைமணி நேரத்திற்குள் கடவுச்சொல்லுக்கான சுட்டி உங்கள் மின்னஞ்சலை வந்து சேரும். 


மேலே உள்ள படம் போல் உங்களுக்கும் ஒரு மின்னஞ்சல் கிடைக்கும். அதில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை அழுத்தி லைசன்ஸ் கீயை குறித்து வைத்துக்கொள்ளவும். பின் In paint மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். 

Inpaint மென்பொருளை தரவிறக்க சுட்டி



லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் எந்த படத்தை மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தேர்வு செய்து, குறிப்பிட்ட பகுதியினை மட்டும் தேர்வு செய்து அழிக்கவும். அந்த இடத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் முன் இருந்தபடியே அழகாக இருக்கும்.



இதுபோல் பல்வேறு மாற்றங்களை இந்த மென்பொருளின் துணையுடன் செய்ய முடியும். இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளை குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

வி.எல்.சி. மீடியா பிளேயர் புதிய பதிப்பு

Posted On April 01,2012,By Muthukumar
வீடியோ பைல்களை இயக்கு வதற்குத் துணை புரியும் இலவச புரோகிராம்களில், அனைவரின் விருப்பத்திற்கு இயைந்தது வி.எல்.சி. புரோகிராம் ஆகும். வீடியோ லேன் ப்ராஜக்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான இந்த புரோகிராமின் புதிய பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிகமான எண்ணிக்கையில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. பல பிரச்னைக்குரிய தவறுகள் திருத்தப்பட்டுள்ளன என்று இதனை வெளியிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற வீடியோ பிளேயர் புரோகிராம்களுடன் ஒப்பிடுகையில், எந்த பார்மட்டில் உள்ள வீடியோ பைலையும் இயக்கும் திறன் கொண்டது வி.எல்.சி. பிளேயர். இந்த புதிய பதிப்பு முதலில் “Twoflower” என்ற குறியீட்டுப் பெயருடன் உருவாக்கப்பட்டது. தற்போது “VLC 2.0” என்ற பெயருடன் வெளியாகியுள்ளது. இதில் தரப்பட்டுள்ள புதிய வசதிகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன.
1. புதிய மல்ட்டி கோர் சிப்களின் வேகத்திறனை அறிந்து செயல்படுகிறது. அதே போல புதிய ஹார்ட்வேர் சாதனங்களையும் புரிந்து இயங்குகிறது.
2. கூடுதலாக சில பார்மட்களையும் இயக்குகிறது. குறிப்பாக தொழில் ரீதியாகத் தயாரிக்கப்படும் HD மற்றும் 10bits codecs பார்மட்களைக் கையாள்கிறது.
3. வீடியோவிற்கென புதிய வழி தரப்படுகிறது. சப் டைட்டில் நல்ல தன்மையுடன் கிடைக்கிறது.
4. புளு ரே டிஸ்க் சப்போர்ட் சோதனை முறையில் கிடைக்கிறது.
5. மேக் கம்ப்யூட்டர் மற்றும் வெப் இன்டர்பேஸ்கள் திறம்பட கையாளப்படுகின்றன.
6. விண்டோஸ் பதிப்பில் தரப்படும் இடை முகத்தில் (Inter Face) பல புதிய மாற்றங்கள் உள்ளன. மேக் கம்ப்யூட்டருக்கான இடைமுகம் முற்றிலும் புதிய முறையில் மாற்றப்பட்டுள்ளது.

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

Posted On April 01,2012,By Muthukumar
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.
படம் 1
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.