திங்கள், 13 பிப்ரவரி, 2012

டிவைஸ் மேனேஜர்

Posted On Feb 13,2012,By Muthukumar
கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்தும் தகவல்களைக் கொண்டுள்ள இடம் தான் டிவைஸ் மேனேஜர். மவுஸ், கீ போர்டு, மோடம், மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து ஹார்ட்வேர்களும் எப்படி ஒவ்வொன்றுடனும் இணைக்கப்படுகின்றன என்று இதில் தெரியவரும். அத்துடன் ஒவ்வொரு ஹார்ட்வேர் சாதனமும் எப்படி இயங்க வேண்டும் என்பதனையும் இதன் மூலம் சென்று கான்பிகர் செய்திடலாம். இதன் மூலம் டிரைவர்களை அப்டேட் செய்திடலாம்; ஹார்ட் வேர் செட்டிங்குகளை மாற்றிட லாம்; பிரச்னைகளை எளிதாக தீர்த்துவிடலாம். ஏதாவது ஒரு ஹார்ட்வேர் சாதனத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் டிவைஸ் மேனேஜர் சென்று அந்த குறிப்பிட்ட சாதனம் எப்படி கான்பிகர் செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்து பிரச்னைகளைத் தீர்க்கலாம். தற்காலிகமாக அவற்றை நீக்கி மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம். ஆனால் இவை எல்லாம் நன்றாகத் தெரிந்த பின்னரே இவற்றில் கை வைக்க வேண்டும். என்ன என்று தெரிந்து கொள்வதில் தவறில்லை. டிவைஸ் மேனேஜரைக் காண My Computer ஐகானை ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள டேப்களில் Hardware என்ற டேபைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Device Manager என்ற பட்டனைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜரைப் பெறலாம். இங்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட் வேர் சாதனங்களும் இடம் பெற்றிருக்கும். ஏதாவது ஒரு சாதனத்தின் இயக்கநிலையை அறிய வேண்டும் என்றால் பட்டியலில் அதனைப் பார்த்து அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். அந்த சாதனத்துடன் தொடர்புடையவை தெரிய வரும். அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் டேப்களில் General என்ற டேபைக் கிளிக் செய்தால் Device status பாக்ஸ் கிடைக்கும். இங்கு அந்த சாதனம் சரியாகச் செயலாற்றுகிறதா என்ற தகவல் கிடைக்கும். உங்களைப் பொறுத்தவரை அதில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் Troubleshoot பட்டனை அழுத்தி பிரச்னையைச் சரி செய்வதில் முனையலாம்.


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சிடி / டிவிடி கவர் அட்டை நாமே வடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்.

Posted On Feb 12,2012,By Muthukumar
நம்மிடம் இருக்கும் சிடி /டிவிடி – களுக்கு அழகான கவர் (அட்டை) நாமே உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நம் செல்லக்குழந்தையின் பிறந்த நாள் புகைப்படங்களை நாம் சிடி அல்லது டிவிடியில் சேமித்து வைத்திருப்போம் அதிகபட்சமாக சிடியின் மேல் பெயர் எழுதி  வைப்போம் ஆனால் சிடியின் மேல் நம் குழந்தையின் புகைப்படத்தை கவரகாக ஒட்டி வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி :http://elefantsoftware.weebly.com/dvd-slim-download.html
இத்தளத்திற்கு சென்று நாம் மென்பொருளை இலவசமாக தறவிரக்கி பயன்படுத்தலாம். மென்பொருளை தறவிரக்கி நம் கணினியில் நிறுவிய பின் மென்பொருளை இயக்கி சிடி அல்லது டிவிடி எதற்கு கவர் உருவாக்கப்போகிறோம்  என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அடுத்து நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை  தேர்ந்தெடுத்து கொண்டு சில நிமிடங்களில் அழகான கவர் உருவாக்கலாம். கவர் உருவாக்கிய பின் பிரிண்ட் என்பதை சொடுக்கி பிரிண்ட் செய்து சிடி அல்லது டிவிடி மேல் ஒட்டிவிட வேண்டியது தான் அழகான டிவிடி கவர் சில நிமிடங்களில் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.


தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒரு புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க்.

Posted On Feb 12,2012,By Muthukumar
 
நம்மிடம் இருக்கும் தகவல்களை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இமெயில் மூலம் தெரியப்படுத்துவோம் அல்லது ஏதாவது சர்வரில் காப்பி செய்து அதற்கான இணைப்பை தெரியப்படுத்துவோம் கூகிள் டாக்ஸ் செய்து வரும் வேலையைப்போன்று தான் புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க் தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்ள உதவுகிறது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
முக்கியமான தகவல்கள் அல்லது வாழ்த்துப் படங்கள் அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்கள் என அனைத்தையுமே நாம் இந்த புதிய சோசியல் நெட்வொர்க் மூலம் சேமித்து அனைவருக்கும் இணைப்பு கொடுக்கலாம், முக்கிய கோப்புகளை பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இணையதள முகவரி : http://buzzdata.com
இத்தளத்திற்கு சென்று நாம் Sign up என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொண்டு உள் நுழையலாம். நம்மிடம் இருக்கும் தகவல்கள், படங்கள் மற்றுள்ள தகவல்களை Private ,Openly , Discover என்ற மூன்று விதங்களில் எப்படி வேண்டுமானாலும் சேமித்து அடுத்தவரும் பகிர்ந்து கொள்ளலாம், ஒவ்வொரு முறையும் இமெயிலில் குறிப்பிட்ட கோப்புகளை காப்பி செய்து அனுப்பும் நேரமும் இடமும் இங்கு தேவைப்படாது. ஒரே ஒரு முறை மட்டும் நம் தகவல்களை பதிவேற்றம் செய்தால் போதும் அதன் பின் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் நம் தகவல்களை எளிதாக கொண்டு சேர்க்கலாம். தகவல்களை அனைவரிடமும் எளிமையாக பகிர்ந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த Buzz Data தளம் பயனுள்ளதாக இருக்கும். இதைப்பற்றிய ஒரு சிறப்பு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

இலவச அவஸ்ட் ஆன்ட்டி வைரசின் புதிய பதிப்பு - AVAST 7 BETA


 

பல்வேறுபட்ட ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள் பாவனையில் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படும் முன்னணி ஆன்ட்டி வைரஸ் மென்பொருளாகும். இந்த ஆன்ட்டி வைரசின் புதிய பதிப்பு அவஸ்ட் 7 பீட்டா  தற்போது வெளியாகியுள்ளது. 



இந்த மென்பொருளின் சிறப்பு 
  1. ஆன்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அளிக்கின்றது.
  2. கணினியில் புதிய வைரஸ்களை நுழைய விடாமல் தடுத்து அளிக்கின்றது .
  3. வேகமாக பைல்களை ஸ்கேன் செய்யும் வசதி    
புதிய பதிப்பின் மூலம் உலாவி பாதுகாப்பு மேம்படுத்தல்கள் ,FILE REB வசதி , SANDBOX மற்றும் AUTOSANDBOX மேம்படுத்தல் வசதிகளுடன் மேலும் பல சிறப்புகளை கொண்டு வெளிவந்துள்ளது.


விண்டோஸ் 8 PREVIEW தளத்தில் இயங்கும் தன்மை கொண்டது .

தரவிறக்கம் செய்ய AVAST 7 BETA 

யூடியுப் வீடியோக்களில் விளம்பரங்களை தவிர்க்க - Skip Ads on Youtube

Posted On Feb 12,2012,By Muthukumar


இணையத்தில் வீடியோக்களை பார்க்க அனைவரும் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது யூடியுப் தளம். தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள இந்த தளத்தில் புதிதாக அப்லோட் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோக்களை பார்க்கின்றனர். குறிப்பாக இந்திய பயனர்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு 55 வீடியோக்களுக்கு மேல் பார்க்கிறார்களாம்.  யூடிபில் நாம் ஏதாவது வீடியோவை ஓபன் செய்தால் முதலில் அவர்களின் விளம்பரங்கள் ஓடும். அந்த விளம்பரங்கள் முடிய குறைந்த பட்சம் ஒரு நிமிடம் ஆகும் அது வரை நாம் காத்துகொண்டு இருக்க வேண்டும். அந்த விளம்பரம் முடிந்த பிறகு தான் வீடியோவை காண முடியும்.

வீடியோ ஓடிக்கொண்டிருக்கும் பொழுதும் இடையில் இந்த விளம்பர வீடியோ தோன்றி எரிச்சலை உண்டாக்கும்.  இந்த பிரச்சினையை தீர்த்து யூடியூபில் எந்த விளம்பர தொல்லையுமின்றி வீடியோக்கள் காண்பது எப்படி என இங்கு காணலாம். 
இதற்கு ஒரு குரோம் நீட்சி உள்ளது நீங்கள் குரோம் உலவி உபயோகித்து கொண்டிருந்தால் இந்த நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

இந்த நீட்சியை இன்ஸ்டால் செய்தவுடன் யூடியுப் வீடியோவில் ஏதேனும் விளம்பரம் வந்தால் மேலே உள்ள சிறிய நீல நிற பட்டனை அழுத்தினால் அந்த விளம்பரம் தவிர்க்கப்பட்டு விடும். நேரடியாக ஒரிஜினல் வீடியோவை காணலாம்.

குரோம் நீட்சியை இன்ஸ்டால் செய்ய - Skip Ads on Youtube

கூகுளில் மறைந்துள்ள Pacman Game விளையாடுவது எப்படி?



எத்தனை முறை தாங்க இந்த கூகுளை பற்றி சொல்லிகிட்டே இருப்பது எத்தனை பதிவு போட்டாலும் இதில் உள்ள வசதிகளை ஓட்டு மொத்தமாக கூற முடியாது. அவ்வளவு வசதிகள் இந்த கூகுள் தேடியந்திரத்தில் உள்ளது. கூகுள் தேடியந்திரத்தில் சில இதர வசதிகளும் மறைந்து உள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க போவது கூகுள் முகப்பு பக்கத்தில் விளையாடும் வசதி. பிரபல விளையாட்டான Pacman விளையாட்டு பெருமாலானவர்களுக்கு தெரிந்திர்க்கும். இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டால் நிறுத்த மனம் வராது. மிக சுவாரஸ்யமான இந்த விளையாட்டை கூகுளின் முகப்பு பக்கத்தில் எப்படி விளையாடுவது என பார்க்கலாம்.

pacman விளையாட்டு என்பது காவலர்களிடம் சிக்காமல் அங்குள்ள இலக்குகளை அனைத்தையும் அழிக்க வேண்டும். கீபோர்டில் உள்ள arrow கீகளை பயன்படுத்தி பாதையை மாற்றி மிகவும் சுவாரஸ்யமாக விளையாடலாம்.

கூகுள் URLக்கு பக்கத்தில் pacman என்று கொடுத்து என்டர் அழுத்தினால் போதும் pacman விளையாட்டு வந்து விடும்.

இதை விளையாட -www.google.com/pacman

புதிய வேர்ட் தொகுப்பில் லைன் ஸ்பேசிங்

Posted On Feb 12, 2012,By Muthukumar

எம்.எஸ். ஆபீஸ் 2003லிருந்து, ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 தொகுப்பிற்கு மாறியவர்கள், வேர்ட் தொகுப்பில் லைன் ஸ்பேசிங் முன்பு போல் இல்லாததனைப் பார்த்திருப்பார்கள். ஆனால் வித்தியாசம் அவ்வளவாக இல்லாததால், அது குறித்து அதிகம் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். வேர்ட் 2003 தொகுப்பில், மாறா நிலையில் லைன் ஸ்பேசிங் 1; ஆனால் வேர்ட் 2007, வேர்ட் 2010 தொகுப்புகளில் இது 1.15. இதனைச் சோதித்து அறிந்து கொள்ளலாம். ஹோம் டேப்பில், Paragraph குரூப்பில், Line and Paragraph Spacing என்பதில் கிளிக் செய்திடவும். அங்கே 1.15 என்று காட்டும். இதற்குக் காரணம், மைக்ரோசாப்ட், லைன் ஸ்பேசிங் 1 ஆக இருப்பதைக் காட்டிலும், 1.15 ஆக இருப்பது படிப்பதற்கு சற்று எளிதாக உள்ளது என்று எண்ணி, மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதுதான்.
ஆனால், வேர்ட் 2003 பயன்படுத்திப் பழக்கப்பட்டவர்களுக்கு, அல்லது புதிய 2007 மற்றும் 2003 என இரண்டினையும் அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு, இது சற்று வித்தியாசமான அனுபவத்தினைத் தரும். இதனை மாற்றி, 2007 மற்றும் 2010 தொகுப்புகளிலும், லைன் ஸ்பேசிங் 1 என இருக்க சில வழிகள் மூலம் மாற்றி அமைக்கலாம்.
1. ஹோம் டேப் கிளிக் செய்திடவும்.
2. Styles குரூப்பில், Change Styles என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Style Set என்பதனைத் தேர்ந் தெடுக்கவும்.
3. கிடைக்கும் பட்டியலில் Word 2003 என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இந்த மாற்றத்தினை மாறா நிலையில் வைத்திட, Change Styles என்ற கீழ்விரி மெனுவில் Set As Default என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இதில் என்ன பிரச்னை என்றால், லைன் ஸ்பேசிங் மட்டும் மாறாது. வேறு சில அம்சங்களிலும் மாற்றம் ஏற்படும். எடுத்துக்காட்டாக, வேர்ட் 2003 பத்திகளுக்கு இடையே ஒரு வரி இடைவெளியினை ஏற்படுத்தாது. ஆனால், வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010 ஆகியன இதனை ஏற்படுத்தும். எனவே மாற்றத்திற்குப் பின்னர், இந்த வரி இடைவெளி ஏற்படாது.